Monday 4 May 2015

Career Counselling & Guidance Program

நம் சங்கம் பெரியவர்களுக்கும், இளையோர்க்காகவும், சிறு குழந்தைகளுக்காகவும் தனித்தனியாகவும், சேர்ந்தும் பல நிகழ்ச்சிகளை நடத்தி உள்ளது.  அதேபோன்று 02.05.2015 ல் "Career Counselling & Guidance Program" நம்
சமுதாயத்தினை வழிநடத்திச் செல்ல இருக்கின்ற இளைஞர்களுக்கான எதிர்கால வழிகாட்டும் பயிற்சி 68 மாணவ மாணவியர் கலந்து கொள்ள வெற்றிகரமாக நடந்து முடிந்தது.  நம் சமூகப் பெருமக்கள், ஆச்சிமார்கள் பெருமளவில் கலந்து கொண்டு பெருமைப்படுத்தினர்.

திருச்சி நகரத்தார் சங்க தலைவர் திரு கிளாசிக் ஆதப்பன் சுந்தரம் அவர்கள் வரவேற்புரை நிகழ்த்தினார்கள்.  இந்த பயிற்சி முகாமின் நோக்கம் பற்றியும், நம் சமூக இளைஞர் எல்லாரும் ஏன் இம்மாதிரிப் பயிற்சிகளில் கலந்து கொள்ள வேண்டும் என்பதனையும் மிக மிகச் சிறப்பாக எடுத்துரைத்தார்.

அடுத்தாற்போல் தம் சொந்த முயற்சியால், திறமையால் மிகச் சிறப்பாக பல நிறுவனங்களை நிறுவி, இன்றளவும் மிகத் திறம்பட நடத்தி வெற்றிகளை ஈட்டிக் கொண்டிருக்கும் இன்றைய நிகழ்வின் சிறப்பு
விருந்தினர் முன்னாள் தலைவர் திரு முத்தையா செட்டியார் அவர்கள் நிறுவனங்களை நிறுவுவதும் அதனை வெற்றிகரமாக நடத்துவதும் பற்றி மிக அருமையாக நகைச்சுவையுடன் பேசினார், வந்திருந்த மாணவ - மாணவிகள் அவற்றினைத் தவற விடாது பொக்கிஷமாகக் கருதி சேர்த்து வைத்துக் கொண்டனர்.

அடுத்து இம்மாதிரி "வழிகாட்டல் அறிவுரை பகர்தல்" கருத்தரங்குகளை இந்தியாவின் பல பகுதிகளில் வெற்றிகரமாக நடத்திக் காட்டி, செயல்
முறையாக பல இளம் ஐ.ஏ.எஸ், ஐ.பி.எஸ் அதிகாரிகளை உருவாக்கியுள்ள, திருச்சி மாவட்ட வேலைவாய்ப்பு அலுவராக பணியாற்றியுள்ள செயலாற்றல் மிகுந்த பெருமைக்குரிய திரு முனைவர் P.சுரேஷ்குமார் அவர்கள் இப்பயிற்சியின் முக்கியக்கூறுகளையும், துனைக்கருத்துகளையும் கூறியது மிகவும் சுவையாகவும் எல்லாரும் உள்வாங்கிக் கொள்ளும் படியாகவும் அமைந்திருந்தன.

அதன்பின் கல்வியாளர் திரு சிவபாலன் அவர்கள், கல்வி துறையில் உள்ள பல்வேறு பணிவாய்ப்புகள் பற்றிய விளக்கங்களை நன்கு எடுத்துக் கூறினார்கள்.  ஆசிரியர் பணிகளுக்கான தகுதிப் படிப்புகளின் பல்வேறு
நிலைகளை மழலையர் கல்விப்பயிற்சி, மாண்டிசோரி கல்விப்பயிற்சி, இடைநிலை ஆசிரியர் கல்வி, பட்டதாரி ஆசிரியர்க்கான பட்டம் பெறுதல் போன்ற அனைத்தையும் விளக்கினார்.

அடுத்து 'விற்பனை - வணிகம்' பற்றிய நுணுக்கமான விவரங்களையும், இன்றைய வணிக உலகில் 'E-Commerce' பற்றிய நுணுக்கங்களையும் வாழ்வின் முக்கியமான 'நுகர்வுக்கலாசாரம்' பற்றியும் கல்லூரிப் பேராசிரியை திருமதி முத்துகலா மிக அருமையாக விளக்கினார்கள்.

அடுத்து திரு சோமசுந்தரம் அவர்கள் பொறியியல் பட்டம், Diploma மற்றும் ITI
ஆகிய தொழிற்படிப்பு தொடர்பான பயிற்சிகளும், போட்டித்தேர்வுகள் பற்றி விரிவான விளக்கம் அளித்து உரையாற்றினர்.  எல்லோருக்கும் மகிழ்வும் வியப்பும் ஊட்டும் வகையில் திரு சோமசுந்தரம் அவர்கள் செய்து காட்டிய மேஜிக் நிகழ்ச்சி அனைவரின் கவனத்தையும் கவர்ந்தது.

அனைவருக்கும் சங்கம் சார்பில் மதிய உணவு வழங்கப்பெற்றது.

நிகழ்ச்சியின் தொடக்கமாக கலை அறிவியல் பட்டப்படிப்பு முடித்தவுடன் உள்ள வேலைவாய்ப்புகள் பற்றி செல்வி சாத்தம்மை பிரியா விளக்கினார்.  அவர் தனது 'சொல்லாட்சியும், பேச்சாற்றலாலும் மேடைகளில்

தங்குதடையின்றி பட்டி மன்றங்கள் மற்றும் கருத்தரங்கங்கள் மூலம் (நிலை மாத ஊதியம் பெறும் பட்டதாரிகளை விடவும் பல) பொருளீட்டி, தன் குடும்ப நிலையை உயர்த்திய பெருமையைப் பற்றி கூறி, இளைஞர்கள் எல்லாரும் தங்களின் தனித்திறமைகளை உணர்ந்து வளர்த்துக் கொண்டு பட்டை தீட்டி வெளிப்படுத்தினால் உயர்வும் பெருமையும் தேடி வரும் என உரையாற்றி அனைவரின் பாராட்டினையும் பெற்றார்.

தற்போது அன்னிய முதலீட்டினையும், மேல்நாட்டில் வேலைவாய்ப்புகளையும் அள்ளித்தரும் உன்னதமான "கேட்டரிங் & ஹோட்டல் மேனேஜ்மென்ட்" பற்றி இத்துறையில் மிக நீண்டகாலம் பணியாற்றியுள்ள அனுபவமிக்க கல்லூரி பேராசிரியர் திரு பொன் இளங்கோ அவர்கள் மிகச் சிறப்பாக நிகழ்கால வேலைவாய்ப்புகள் மிக அதிகமாக உள்ளதை உதாரணங்களுடன் விளக்கினார்கள்.

மக்களின் வாழ்வுடன் தொடர்புடைய 'மருத்துவம்' பற்றி மிக அருமையாக
உரையை Neuro Surgeon டாக்டர். S.P. திருப்பதி அவர்கள் மிக அனுபவமுத்திரைகளுடன் வெளிப்படுத்தினார்கள்.  எக்காலத்திலும் வேண்டப்படுவது மருத்துவம் தான் என்பதை விளக்கினார்கள்.

அடுத்து Goal Setting என்ற தலைப்பில் மிக அருமையாக சங்கத்தின் இளைஞர் அணி ஒருங்கிணைப்பாளர் திரு Kosmo ராமநாதன் அவர்கள் பேசினார்கள்.

இயற்கையிலேயே வாதாடும் திறனும் நினைவுத்திறனும் உள்ள இளவயதினர் கைக்கொள்ள வேண்டிய சட்டத்துறையில் உள்ள வழக்கறிஞர்கள் பணிகளைப் பற்றியும், இன்றைய இந்திய சமுதாயத்தில் 'சட்டக்கல்வி' எவ்வளவு முக்கியத்துவம் பெற்றுள்ளது பற்றியும் சட்டக் கல்லூரி பேராசிரியர் திரு முருகேசன் அவர்கள் மிக அழகாக விளக்கி அப்பயிர்சிகளை எவ்விதம் மேற்கொள்வது என்பது பற்றியும் அறிவுறுத்தினர்.

பின் சிறப்பு அழைப்பாளர்களாகக் கலந்துகொண்ட செல்வி திவ்யா இராமசாமி (IIM  பெங்களூரில் படித்து விட்டு Amazon நிறுவனத்தில் பணியாற்றுகிறார்) அவர்களும் டாக்டர் பழனியப்பன் (Consultant Psychiatrist, Cambridge UK) அவர்களும் மிகச்சிறப்பாக உரையாற்றி வழிக்காட்டினார்கள்.

செல்வி திவ்யா இராமசாமி அவர்கள் தன்னுடைய அனுபவங்களை எல்லாருக்கும் படிப்படியாக விளக்கியதுடன் பயிற்சிக்கு வந்திருந்த மாணவ மாணவியர் தம் ஐயங்களை எழுப்புவதற்கு வாய்ப்பளித்து, அனைத்து விதமான வினாக்களுக்கும் தெளிவான விளக்கம் அளித்தார்கள்.

நமது நகரத்தார் சங்க தலைவர் திரு கிளாசிக் ஆதப்பன் சுந்தரம் அவர்களின் இளைய சகோதரர் டாக்டர் பழனியப்பன் அவர்கள் முத்தாய்ப்பாக நமது சமூக இளைஞர்களின் வளர்ச்சிக்கான படிநிலைகளை 'CAREER PYRAMID' என்ற மிக நுணுக்கமான செய்திகளை அவருடைய வார்த்தைகளிலேயே சொன்னால் - அவரின் 15 ஆண்டு கால மருத்துவ அனுபவங்களில் கற்றும் பெற்றும் வந்திருக்கின்ற மனித வாழ்வின் முன்னேற்றங்களுக்கான மனநிலைகளின் வளர்ச்சியை - மருத்துவ அறிவியல் சார்ந்து விளக்கியது மிகப் பயனுள்ளதாக இருந்தது.

15.08.2014ல் திருச்சி நகரத்தார் சங்கத்தின் 66வது ஆண்டு விழாவில் 10வது மற்றும் 12வது வகுப்பு தேர்வில் அதிக மதிப்பெண் பெற்ற மாணவர்களுக்கு ரூ.5000/- வீதம் 8 பேருக்கு ஊக்கத்தொகை வழங்கப்பெற்றது.  அதில் விடுப்பட்டு போன வேகுபட்டி திரு நா.ரவி அவர்களின் புதல்வி செல்வி ர.ஐஸ்வர்யா 2013 - 2014 ம் கல்வியாண்டில் பனிரெண்டாம் வகுப்பு தேர்வில் 1178 மதிப்பெண் பெற்றதற்காக ரூ.5000/- ஊக்கத்தொகை வழங்கப்பெற்றது.

இறுதியாக, மூத்த செயற்குழு உறுப்பினர் Prof திரு சுப்பிரமணியம், அனைத்து நிகழ்ச்சிகளின் சிறப்புகளை எடுத்து கூறி அனைவருக்கும் நன்றி பகன்றார்.

கலந்து கொண்டு பயிற்சி அளித்த அனைத்து துறை வல்லுனர்க்கும் நகரத்தார் சமூகப் பெருந்தகைகள் பொன்னாடை போர்த்திக் கௌரவித்து, நினைவுப்பரிசுகளை நகரத்தார் சங்கம் சார்பாக வழங்கப்பெற்றன.

மாலை அனைவருக்கும் தேநீர் மற்றும் snacks சங்கத் தலைவர் திரு கிளாசிக் ஆதப்பன் சுந்தரம் சார்பில் வழங்கப்பெற்றது.

No comments:

Post a Comment