Monday 29 December 2014

Nagarathar Photo Contest 2014 & Hobby Exhibition

நகரத்தார் சமூக மக்களிடையே உறங்கிக்கிடைக்கும் குடத்திலிட்ட விளக்குகளைப்போல வெளிக்கொணராத கலை கைத்திறன் மேம்பாடுகளை குன்றின் மேல் இட்ட ஒளிவிளக்குகளாய் மாற்ற
திரு உலகம்பட்டி லேனா நாராயணன், MR Color Lab & Studio, Erode மற்றும் திருச்சி நகரத்தார் சங்கம் இணைந்து நகரத்தார் மக்களுக்கான நிழற்படப்போட்டி - 2014 (Nagarathar Photo Contest 2014) மற்றும் நம் இனமக்கள் இதுவரை கண்டிராத Hobby Exhibition  போட்டியும் நடத்திடத்திட்டமிடப்பெற்றது.

இவ்விரு போட்டிகளுக்கான ஒருங்கிணைப்பாளர்களாக திரு RMS.முத்துராம்,
ஜெயம் கலர் லேப் & ஸ்டுடியோ அவர்களும், திரு M.லெஷ்மணன், செயற்குழு உறுப்பினர் அவர்களும் நியமிக்கப்பெற்றார்கள்.

இதன்படி நிழற்படப்போட்டிக்கான வழிகாட்டிக் குறிப்புகளும் முறைகளும் வகுக்கப்பெற்றன.  எந்த வயதினரும் கலந்து கொள்ளலாம் என்றாலும் 18 வயதுக்குகினையோற் பெற்றோர் அனுமதியுடன் கலந்து கொள்ளலாம் எனத் தெரிவிக்கப்பெற்றது.

நிழற்படப்போட்டிக்கான தலைப்புகள் :

பிரிவு A : தனி நிழற்படம் - 'தீபத்திருவிழா' அல்லது 'புன்னகை' என்ற தலைப்பிற்கு பொருத்தமாக அமையும் படம்.

பிரிவு B : நம் நகரத்தார் சமூக மக்களின் பழக்கவழக்கங்கள், நிகழ்வுகள் தொடர்பான 5 நிழற்படங்கள்.

நடுவர்கள் தேர்தெடுக்கும் ஒரு பரிசும், முதல் பரிசாக ஒன்றும், இரண்டாம் பரிசாக இரண்டு பரிசுகளும், மூன்றாம் பரிசாக ஐந்து பரிசுகளும், எல்லோராலும் பாராட்டப்பெற்ற ஒரு படைப்பிற்கு சிறப்பு பரிசும், 19 வயதிற்கு இளையோரில் மிகச் சிறந்த 5 படைப்புகளுக்கு என எல்லாருக்கும் பரிசுக் கோப்பைகளும் வெற்றிச் சான்றிதழ்களும் வழங்க தீர்மானிக்கப்பெற்றது.

20.12.2014 படைப்புகள் அனுப்பிட இறுதி நாளாகத் தீர்மானிக்கப்பெற்றது.  இந்நிகழ்வுகளைப் பற்றிய விரிவான விளக்கங்கள் அடங்கிய விளம்பரங்கள், கடிதங்கள், அஞ்சல், மின்னஞ்சல் மற்றும் முடிந்தவரை எல்லா
ஊடக வாயில்கள் வழியாக நம் சமூக மக்களுக்குத் தெரிவிக்கப்பெற்றன.


இதேபோன்று Hobby EXhibition வும் நடத்த தீர்மானிக்கப்பெற்றது.

27.12.2014 அன்று இவ்விரு போட்டிகளின் கண்காட்சி நடத்தப்பெற்றது.  நிழற்பட போட்டிக்கு 300 படைப்புகளும், Hobby Exhibition க்கு 20 போட்டியாளர்களும் பங்கேற்றனர்.

நிழற்பட போட்டிக்கு வந்த படைப்புகள் மிகச் சிறந்த கலை ஆர்வம் மிக்க ஒளிப்பதிவாளர்கள் நம் இன மக்களிடேயே இருக்கிறார்கள் என்பதை வெளிச்சம் போட்டு காட்டியது.

மனதிற்கினிய பொழுதுபோக்கு போட்டியில் காட்சிக்கு வைக்கப்பட்டிருந்த கலைச் சேகரிப்புகள் பார்வையாளர்கள் அனைவரின் கவனத்தை ஈர்த்ததோடு பாராட்டுகளையும் பெற்றன.

நம் இன மக்களின் கைத்திறனுக்குச் சான்றாக, கலைக் கண்கள் கொண்டு எடுக்கப்பட்ட நேர்த்தியான நிழற்படங்களும், அரிய வகை சேகரிப்புகள் இந்த உன்னதமான நிகழ்வில் வெளிப்பட்டது நம் நகரத்தாருக்கு கிடைத்த அருமையான வாய்ப்பு என்பதை அனைவரும் உணர்ந்து பாராட்டினர்.

Hobby Exhibition க்கு பரிசு ஊக்கத் தொகைகளாக மொத்தம் ரூ.20,000 அளவில் வெற்றிச் சான்றிதழ்களுடன் வழங்கப்பெற்றன.

புதுமையான முயற்சியாக நடத்தப்பெற்ற இவ்விரு போட்டிகளும் மிகச் சிறப்பான முறையில் வெற்றிகரமாக பிள்ளையார் நோன்பன்று நிகழ்ந்தது திருச்சி நகரத்தார் சங்கத்தின் பெருமையை மேம்படுத்தியது.

Pillaiyar Nonbu Carnival 2014

"நிறைகுறைகள் நிறைத்திருக்கும் இவ்வுலக வாழ்வுதன்னில் இறையொன்றே 
நிறையென்று இனிதுணர்ந்தோர் நகரத்தார்"

திருச்சி நகரத்தார் சங்கத்தினர் பிள்ளையார் நோன்பை ஒரு திருவிழா போன்று 27.12.2014 சனிக்கிழமையன்று செட்டிநாடு கலை மற்றும் அறிவியல் கல்லூரி வளாகத்தில் மிகப் பிரம்மாண்டமான முறையில் சிறப்பாக கொண்டாடினர்.


Naragathar Photo Contest 2014 & Hobby Exhibition : (காலை 11 மணி முதல்)

அன்று காலையில் இருந்தே செட்டிநாடு கல்லூரி விழாக்கோலம் பூண்டு நகரத்தார்கள் குடும்பத்துடன் வந்த வண்ணம் இருந்தனர்.

Naragathar Photo Contest 2014 க்கு வந்திருந்த புகைப்படங்கள் அனைத்தும் ஒரு அரங்கில் பார்வைக்கு வைக்கப்பட்டிருந்தது.  மழலைகளின் சிரிப்பையும்,
முதுமையின் மகிழ்ச்சியையும் போட்டியாளர்கள் படம் பிடித்து காட்டியிருந்த அழகு பாராட்டத்தக்கது.  மற்றொருபுறம் நகரத்தார்களின் வாழ்வியல் பற்றிய புகைப்படங்கள் நம்மை திகைக்க வைத்தது.

அடுத்த அரங்கில் Hobby Exhibition போட்டிக்காக தாங்கள் பொக்கிஷமாக பாதுகாத்து வரும் பொருட்களின் அணிவகுப்பு நம்மை வியக்க வைத்தது. 
Stamps, Coins, Significant Signatures, Art Collections, Photographs, நகரத்தார் பற்றிய ஆவணங்களின் தொகுப்பு ஆகியவை காட்சிக்கு வைக்கப்பட்டிருந்தது.

Erode MR Color Lab & Studio, உரிமையாளர் திரு
உலகம்பட்டி லேனா நாராயணன் அவர்கள் இந்த போட்டிகளுக்கு உறுதுணையாக Sponsor ஆக செயல்பட்டார்கள்.





பிள்ளையார் நோன்பு Carnival : (மதியம் 3 மணி முதல்)

செட்டிநாடு கல்லூரி வளாகத்தில் நுழைந்தவுடன் குழந்தைகளை மகிழ்விக்கும் வகையில் 'பலூன் வளைவு' அமைக்கப்பட்டிருந்தது.  அங்கேயே Cartoon பொம்மைகள் ஆடிக்கொண்டே அனைவரையும் வரவேற்றனர்.

அதை கடந்து உள்ளே சென்றால் கேரளா புகழ் "செண்டை மேளம்" அமர்க்களப்படுத்தியது.

அனைவரும் உண்டு மகிழ பாப்கார்ன், பஞ்சு மிட்டாய், டெல்லி அப்பளம் எனத் தனிதனி Stallகள் அமைக்கப்பட்டிருந்தது.








எல்லோரும் விளையாடி மகிழ Balloon shooting, Ring  throw, Dart Board
மற்றும் puzzles எனத் தனிதனி Stallகள் இருந்தன.

பெண்களும் குழந்தைகளும் தங்களை அழகுப்படுத்திக் கொள்ள Tattoo, Mehendi
stallகளும் இருந்தன.

குழந்தைகள் ஆடி, குதித்து மகிழ Bouncing bed, வரைந்து மகிழ Drawing Stall ம் ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.

மொத்தத்தில் இது ஒரு திருவிழாவா, பொருட்காட்சியா, கல்யாணமா, கடற்கரையா என அனைவரும் திகைக்கும் வகையில் இருந்தது.

மாலை 5 மணியளவில் செல்வி RM.முத்துமீனா இறைவணக்கம் பாட, திருச்சி நகரத்தார் சங்க தலைவர் திரு கிளாசிக் ஆதப்பன் சுந்தரம் வரவேற்க,
மேலைச்சிவபுரி திரு E.ஞானம் அவர்கள் (தலைவர், முத்து சாரிட்டபிள் டிரஸ்ட்) சிறப்பு விருந்தினராய் பங்கேற்று சிறப்புரையாற்றினார்கள்.  உலகம்பட்டி திரு லேனா நாராயணன், அவர்களும் உரையாற்றினார்கள். 
Nagarathar  Photo Contest  2014 மற்றும் Hobby Exhibition ஒருங்கிணைப்பாளரர்களாய் செயலாற்றிய திரு RMS.முத்துராம், ஜெயம் கலர் லேப் & ஸ்டுடியோ மற்றும் திரு M.லெஷ்மணன் செயற்குழு உறுப்பினர் அவர்களும் கௌரவிக்கப்பெற்றனர்.

அதை தொடர்ந்து போட்டிகளில் பரிசு பெற்றவர்களுக்கு சான்றிதழ்களும், கோப்பைகளும், ரொக்கப்பரிசுகளும்  வழங்கப்பெற்றது.

Russia வில், World Robot Olympiad ல் உலக அளவில் இரண்டாமிடம் பெற்ற
வலையப்பட்டியைச் சேர்ந்த இளைஞர்  சிவா மாணிக்கம் (Std IX, DAV Public School, Chennai) பரிசு கொடுத்து குடும்பத்தினருடன் ஊக்குவிக்கப்பெற்றார்.



திருச்சி நகரத்தார் சங்க உறுப்பினர்களின் முகவரி கையேடு குறுந்தகடாய் வெளியிடப்பெற்றது. 
விராமதியை சார்ந்த Seventh Sense திரு சோமசுந்தரம் அவர்கள் இந்த முகவரி கையேட்டுக்குரிய விலையில்லா software  யை தயாரித்து கொடுத்துள்ளது ஒரு பாராட்டுக்குரிய செயலாகும்.

மேடையில் சங்கத்தின் முன்னாள் தலைவர்கள்,  மூத்தோர்கள் அமர்ந்து இழை எடுத்துக் கொடுக்க அனைவரும்
வரிசையில் வந்து இழை எடுத்துக்கொண்டு இறையருள் பெற்றுச் சென்றது சிறப்பு.

மங்கலப் பொருட்கள் ஏலத்தை உபதலைவர் திரு M.இராஜேந்திரன், திரு கிருஷ்ணன் மற்றும்
திரு M.RM.அழகப்பன் ஆகிய செயற்குழு உறுப்பினர்கள் பொறுப்பேற்று சிறப்பாக நடத்தி கொடுத்தார்கள்.

விழாவில் கலந்து கொண்ட சுமார் 2000 நபர்களுக்கும் செவ்வூர் பாண்டி அவர்களின் கைவண்ணத்தில் தயாரான அறுசுவை விருந்து Buffet ஆக
இணைச்செயலாளர் திரு நித்திய கல்யாணி N.ஸ்ரீனிவாசன், செயற்குழு உறுப்பினர்கள்  திரு PL.நாகப்பன், திரு RM.பழனியப்பன், திரு N.முருகப்பன் ஆகியோர் மேற்பார்வையில் வழங்கப்பெற்றது.

     விருந்து நடைப்பெற்றுக்கொண்டிருந்த நேரத்திலேயே அனைவருக்கும் Close up magic கலைஞர்கள் அவர்கள் உணவருந்திக் கொண்டிருக்கும் பொழுது அருகில் வந்து magic
செய்து மகிழ்வித்தது ஒரு குடும்ப நிகழ்ச்சி போன்ற உணர்வை ஏற்படுத்தியது.  இந்த நிகழ்ச்சியை நமது Seventh Sense திரு சோமு அவர்கள் தன்னுடன் பிற magic கலைஞர்களையும் இணைத்துக்கொண்டு சிறப்பாக செய்தார்கள்.

தென்னூர் டிரேடர்ஸ் திருமதி KMS.நாச்சம்மை செந்தில் அவர்களும்,
ஆத்தங்குடி திருமதி அலமேலு ICICI முகவர் அவர்களும் 25 புது உறுப்பினர்களை சேர்த்து பாராட்டு பெற்றார்கள்.

மேடை நிகழ்ச்சியின் தொகுப்பாளாராய்  மேலைச்சிவபுரி திரு Tமுத்துமாணிக்கம்
தன் அழகு தமிழில் சொற்சிலம்பாட்டம் ஆடியது நம் மனங்களில் இன்னும் ஒலித்துக்கொண்டேயிருக்கிறது.

இந்த பிள்ளையார் நோன்பு நிகழ்ச்சிகள் அனைத்தையும் முன்னாள் தலைவர் திரு SP.அருணாச்சலம் செட்டியார் அவர்கள் தலைமையில் தலைவர் திரு கிளாசிக் ஆதப்பன் சுந்தரம், உபதலைவர்கள் திரு M.இராஜேந்திரன் மற்றும் திரு சபா.சுப்ரமணியன், செயலாளர் திரு SV.சுப்பையா, இணைச்செயாளர் திரு நித்திய கல்யாணி N.ஸ்ரீனிவாசன், பொருளாளர் திரு SV.சாத்தப்பன், செயற்குழு உறுப்பினர்களும் மற்றும் பிள்ளையார் நோன்பு விழா குழுவினர் சிறப்பாக ஏற்பாடு செய்திருந்தார்கள்.


Wednesday 17 December 2014

Namakkal - Thiruchengode - Gunaseelam Tour

16.12.2014 செவ்வாய்கிழமை அன்று காலை 6 மணிக்கு நம் நகரத்தார் சங்கம் சார்பில், திருச்சி PLA ரத்னா ரெசிடென்சியிலிருந்து பேருந்தில் 57 பேர் நாமக்கல், திருச்செங்கோடு, குணசீலம் சுற்றுலா சென்று வந்தார்கள்.  முதலாவதாக நாமக்கல்லில் நாமக்கல் நகரத்தார் சங்கம் சார்பில் நடைபெற்ற அபிஷேகத்தை தரிசனம் செய்தனர்.  காலை மற்றும் மதியம் நாமக்கல் நகரத்தார் ஏற்பாடு செய்திருந்த விருந்தில் கலந்துகொண்டனர்.  மாலை திருச்செங்கோடு சென்று அங்குள்ள மலைக்கோவில் பேருந்தில் மலைக்கு சென்று அர்த்தநாரீஸ்வரை வணங்கி அருள் பெற்றனர்.  பின்னர் குணசீலம் சென்று பெருமாளை தரிசித்து அருள் பெற்றனர்.  இரவு உணவிற்கு பின் 10 மணிக்கு திருச்சியை நலமுடன் வந்தடைந்தார்கள்.

Monday 15 December 2014

IBCN 2015 - ROAD SHOW

"நம்மால் இயன்ற உதவி" என்ற உயர்ந்த கோட்பாட்டுடன் கோவையில்
எழுச்சிமிகு இளைஞர்களால் தொடங்கப்பட்ட அமைப்பு தான் Nagarathar Entrepreneur Union (NEU).  இந்த அமைப்பு நம்மவர்களின் பிள்ளைகள் தங்கள் ஆளுமையை, திறன்களை வளர்த்துக் கொள்ளவும், உயர் கல்வியும் அதன் தொழில் வாய்ப்புகளையும் விளக்கும் பல பயிலரங்கங்களை நடத்தி வருகிறார்கள்.

நம் சமூக இளைஞர்கள் பெருமளவில் தொழில் துறைக்கு திரும்ப வேண்டியதன் அவசியத்தையும் அவசரத்தையும் உணர்த்தும் வகையில் IBCN 2015 - International Business Conference of Nagarathars என்ற
ஏற்றமிகு மாநாட்டை வருகின்ற ஜூலை 25,26 ல் கோவை Hotel Le Meridien ல்
மிகப்பெரிய அளவில் நடத்த திட்டமிட்டுள்ளனர்.  அதில் உலகளாவிய அளவில் சுமார் 600 நகரத்தார் தொழில் முனைவோர் கலந்து கொள்ள வருகின்றனர்.

IBCN 2015 ன் அறிமுக விழா, நமது சங்கத்துடன் இணைந்து 14.12.2014 ஞாயிறு அன்று Hotel PLA Ratna Residency ல் காலை 11 மணியளவில்
தொடங்கியது.

இந்த அறிமுக விழாவில் நமது நகரத்தார் சமூகத்தின் வரலாறு பற்றிய ஆவணப்படம் திரையிடப்பட்டது.  பின்னர் NEU நிர்வாகிகள் மாநாட்டின் சிறப்பு அம்சங்களை விளக்கி நம்மில் ஆர்வமுள்ளவர்களை கலந்து கொள்ள அழைப்பு விடுத்தனர்.

புதுமையாகவும், வியக்கத்தக்கவும் பிரம்மிக்கத்தக்க வகையிலும் தொழில் செய்து வளர்ந்துள்ள தொழில் முனைவோரை அடையாளப்படுத்தும் வகையில் Entrepreneur Awards க்கு தகுதியானவர்கள் என்று நினைப்பவர்கள் தங்கள் விபரங்களை IBCN இணையதளத்தில் பதிவேற்றம் செய்யலாம் என தெரிவித்தனர்.

தொழில் தொடங்க திட்டமிட்டுள்ளவர்கள் தங்கள் தொழில் திட்டத்தை Business Plan Contest க்கு அனுப்பலாம் என்றும் தேர்ந்தெடுக்கப்படும் Business Plan க்கு லட்சங்களில் ரொக்க பரிசு உண்டு என்றும் தெரிவித்தனர்.

சுமார் 200 பேர் கலந்து கொண்ட அறிமுக விழா அறுசுவை மதிய உணவுடன் நிறைவு பெற்றது.

கலந்துகொண்ட அனைவரும் தாங்கள் நகரத்தார் மற்றும் தொழில் முனைவோர் என்பதில் பெருமிதத்தோடு மகிழ்ந்து மாநாட்டை எதிர்நோக்கி விடைபெற்றனர்.