Saturday 26 July 2014

Munnor Valipadu

ஒவ்வொரு அமாவாசைக்கும் தர்ப்பணம் நம் சங்கத்தில் நடத்தப்படுகிறது.  அதை செயலாளர் திரு SV.சுப்பையா  சிறப்பாக தொடர்ந்து நடத்தி வருகிறார்கள்.

Aachi vanthachu 16.07.2014


Tuesday 22 July 2014

Thiruchiyin Thangamagan

27.07.2014 அன்று கார்த்திகை பூஜை நடைப்பெற்றது. நாமக்கல் சங்கத்தினர் அறிமுகப்படுத்தப்பட்டனர். நாமக்கல் சங்க கட்டிட நிதிக்காக தலைவர் திரு கிளாசிக் ஆதப்பன் சுந்தரம் அவர்கள் ரூ.50,000/- சங்கம் சார்பாக வழங்கினார்கள்.

பழனியப்பா பிரதர்ஸ் இராயவரம் செல்லப்ப செட்டியார் (முன்னாள் தலைவர்) அவர்களின் சேவையைப் பாராட்டி சங்கம் சார்பில் 'திருச்சியின் தங்கமகன்' என அறிமுகம் செய்து பாராட்டப்பெற்றார். அவரது ஏற்புரைக்குப் பின் செயலாளர் நன்றி சொல்ல கூட்டம் இனிதே நிறைவடைந்தது.  சுமார் 200 பேர் கலந்து கொள்ள அன்றைய இரவு விருந்தினை பொருளாளர் SV.சாத்தப்பன் அவர்களின் இளைய மகன் S.மெய்யப்பன் அவர்கள் கொடுத்தார்கள்.

1st Nagarathar Chess Festival 2014

For Registration click here
Registration Form  

Registration Closed on 15.08.2014

All required details are given in the form!

Thursday 17 July 2014

Navathirupathi Tour

சுமார் 60 நகரத்தார்களுடன் நவதிருப்பதி, குற்றாலம், வனதிருப்பதி சுற்றுலா மிகச் சிறப்பாக நடைபெற்றது.  14.07.2014 இரவு PLA ரத்னா ரெசிடென்சியிலிருந்து புறப்பட்டு 15.07.2014 காலை
அழ்வார் திருநகரில் தங்கி 'நவத்திருப்பதி' 9 கோவில்களையும் தரிசனம் செய்தார்கள். வனதிருப்பதி தரிசனத்திற்கு பின் குற்றாலம் VKN  இல்லத்தில் தங்கினார்கள்.  16.07.2014 அன்று பழைய குற்றாலம், மெயின் அருவி, ஐந்தருவி ஆகியவற்றில் நீராடி மகிழ்ந்து மாலை ஸ்ரீவில்லிபுத்தூர் ஆண்டாள் தரிசனத்திற்கு பின் திருச்சி வந்து சேர்ந்தார்கள்.

Monday 7 July 2014

Devaram Parayanam

சங்க வளாகத்தில் 06.07.2014 ல் காரைக்குடி சொக்கலிங்கம் செட்டியார் குழுவினரால் தேவாரம் பாராயணம் நிகழ்ச்சி மிகச் சிறப்பாக நடத்தப்பட்டது.  காலை 10.30 மணிக்கு துவங்கி மாலை 4.00 மணி வரை பாராயணம் நடைபெற்றது.  சுமார் 100 உறுப்பினர்கள் கலந்து கொண்டு சிறப்பித்தனர். அனைவருக்கும் மதிய உணவும், மாலை டீ, பிஸ்கட் ஏற்பாடு செய்யப்பெற்றிருந்தது.