Monday 28 April 2014

Navagraha Kovil Tour

26.04.2014 மற்றும் 27.04.2014 ல் நம் நகரத்தார் 80 பேர் கலந்து கொள்ள நவகிரக கோவில்கள் ஒன்பதிற்கும் ஆன்மீக சுற்றுலா மேற்கொள்ளப்பட்டது.  சுற்றுலாவின் போது கும்பகோணம் நகரத்தார் முதல் நாள் 26.04.2014 காலை திங்களுரில் டிபன் வழங்கி சிறப்பித்தார்கள்.  அன்றைய மதிய உணவு வைத்தீஸ்வரன் கோவில் திரு.PLA.கணகு செட்டியார் அவர்களால் PLA மண்டபத்தில் வழங்கப்பட்டது.  PLA மண்டபத்தில் சென்றவர்கட்கு நல்ல ஓய்வு எடுக்க வசதியாகவும் இருந்தது.   இரவு மாயவரம் நகரத்தார் பூம்புகார் விடுதியில் விருந்து அளித்தார்கள்.  இரவு சுவாமி மலை தரிசனத்துடன் நவகிரகக் கோவில் ஆன்மீகப் பயணம் இனிதே நிறைவுற்றது.

Monday 21 April 2014

Nagara Kovil Tour

20.04.2014 ல் நம் நகரத்தார் சங்கத்தினர் 80 பேர் கலந்து கொள்ள நகரக் கோவில் ஒன்பதிற்கும் 1 நாள் ஆன்மீக சுற்றுலாவாக சென்றார்கள்.  எல்லாக் கோவில்களிலும் டிரஸ்டிகள் சிறப்பாக வரவேற்பு அளித்தார்கள். பிள்ளையார்பட்டி விடுதியில் காலை டிபனும், மாத்தூர் விடுதியில் மதிய உணவும், இளையாற்றங்குடியில் இரவு டிபனும் அந்தந்த கோவில் டிரஸ்டிகள் வழங்கிச் சிறப்பித்தார்கள்.  இரவு 11 மணிக்கு திருச்சி வந்து சேர பயணம் இனிதே அமைந்தது.

Sunday 6 April 2014

Sevai Engal Velai

முதல் நிகழ்ச்சியின் பெரும் வெற்றிக்கு பிறகுஏப்ரல் மாதம் 6ம் தேதி  (06.04.2014) ஞாயிற்றுகிழமை திருச்சி நகரத்தார் சங்க மகளிர் அணியின் இரண்டாம் நிகிழ்ச்சியாக 'சேவை எங்கள் வேலை" என்ற கலந்துரையாடல் நிகிழ்ச்சி சங்க கட்டிடத்தில் ஏற்பாடு செய்யப்பட்டது.

இந்நிகழ்ச்சியை முன்னாள் பாரதப் பிரதமர் வாஜ்பாய் அவர்களிடமிருந்து ஸ்ரீ சக்தி புரஷ்கார் விருது பெற்ற, மதுரையை சேர்ந்த திருமதி.சின்னப்பிள்ளை அவர்கள் சிறப்பு பேச்சாளராக வந்து, கலந்து கொண்ட அனைவரையும் தன் நகைச்சுவை நிறைந்த பேச்சினால் கவர்ந்தார்.

அன்று 65 பேர் கலந்து கொண்டு, அவரிடம் பல கேள்விகள் கேட்டு களஞ்சியம் அமைப்பு பற்றியும், அவரின் தொண்டுகள் பற்றியும் தெரிந்து கொண்டனர்.   

இதற்கு மகளிர் அணி ஆலோசகர், முன்னால் தலைவர் திரு.அடைக்கலவன் செட்டியார் அவர்கள் தலைமையேற்று நடத்தினார்கள்.  மகளிர் அணி ஒருங்கிணைப்பாளர் திருமதி.சந்தா சேதுராமன்  அறிமுக உரையாற்றதலைவர்  திரு.S.ஆதப்பன் அவர்கள் விருந்தினரை சிறப்பு செய்ய, விழா இனிதே நிறைவுற்றது.

Seiga Porulai 2014

ஏப்ரல் மாதம் 6ம் நாள் (06.04.2014) ஞாயிற்றுகிழமை திருச்சி நகரத்தார் சங்க இளைஞர் அணியின் இரண்டாம் நிகிழ்ச்சியாக 'செய்க பொருளை 2014" என்ற நிகிழ்ச்சி சங்க கட்டிடத்தில் ஏற்பாடு செய்யப்பட்டது.

இதற்கு இளைஞர் அணி ஆலோசகர், முன்னால் தலைவர் திரு.நாகப்பா லெஷ்மணன் அவர்கள் தலைமையேற்று நடத்தினார்கள். இந்நிகழ்ச்சியை மிகவும் பயனுள்ள நிகழ்ச்சி என்று பாராட்டினார்கள்.

'பங்கு சந்தையில் பணம் சம்பாதிப்பது எப்படி?" என்ற தலைப்பில் நமது நகரத்தார் இளைஞர், பங்கு சந்தை பயிற்றுனர், மக்கள் டிவி 'வளாகம்" நிகழ்ச்சி புகழ் திரு.R.நாச்சியப்பன் (Sornalaya Financial Academy, Chennai) அவர்கள் பங்கு சந்தையை நாம் எவ்வாறு அணுக வேண்டும் என்றும், பங்குகளை தேர்ந்தேடுக்கும் பாங்கினை பற்றியும், எப்பொழுது வாங்க வேண்டும், எப்பொழுது விற்க வேண்டும் என்ற சுத்திரத்தை அறிய உதவும் மென்பொருளை இயக்குவது பற்றியும் விளக்கினார்கள்.

இந்த நிகழ்ச்சியில் சுமார் ஐம்பது நகரத்தார்கள் கலந்து கொண்டு பயன் பெற்றனர்.  இந்த நிகழ்ச்சி ஒரு அறிமுக பயிலரங்கமாகும்.  முழுமையான பயிலரங்கம் சிறப்பு கட்டணத்தில் நமது நகரதர்களுக்காக பிரத்தியேகமாக திருச்சியில் நடத்த தயார் என்றும் மகிழ்ச்சியுடன் தெரிவித்தார்கள்.

இளைஞர் அணி ஆலோசகர், முன்னால் தலைவர் திரு.நாகப்பா லெஷ்மணன் அவர்கள் தலைமை தாங்க, இளைஞர் அணி ஒருங்கிணைப்பாளர் திரு.மு.இராமநாதன் அறிமுக உரையாற்ற, தலைவர்  திரு.S.ஆதப்பன் அவர்கள் விருந்தினரை சிறப்பு செய்ய, சுமார் 1 மணியளவில் விழா இனிதே நிறைவுற்றது.