Sunday 29 December 2013

Paper Quilling Program


டிசம்பர் மாதம் 29ம் நாள் (29.12.2013) ஞாயிற்றுகிழமை, திருச்சி நகரத்தார் சங்க மகளிர்  அணியின் முதல் நிகழ்ச்சியாக, குழந்தைகளுக்கான சிறப்பு ஆர்ட்ஸ் & கிராபிட்ஸ் பற்றிய வகுப்பு சங்க கட்டிடத்தில் ஏற்பாடு செய்யப்பட்டது. 

குழந்தைகள் மத்தியில் படைப்பாற்றலை வளரச்செய்யும் முயற்சியில், சுவாரஸ்யமான "PAPER QUILLING" நிகழ்ச்சி ஒன்றை திருமதி.வித்யா அவர்கள் நடத்தினார்கள்.

இந்த நிகழ்ச்சியை மகளிர் அணி ஒருங்கிணைப்பாளர் திருமதி.சாந்தா சேதுராமன்  தொகுத்து வழங்கினார்.  மகளிர் அணி ஆலோசகர் முன்னாள் தலைவர் திரு.அடைக்கலவன் செட்டியார்  அவர்கள் தலைமையேற்று நடத்தினார்கள். 

காகிதத்தை வைத்து வெவ்வெறு அழகிய வடிவங்கள் செய்ய குழந்தைகளுக்கு கற்றுத்தரப்பட்டது.  பெற்றோர் உற்சாகத்துடன் குழந்தைகளை ஊக்குவித்தார்கள். மேலும் இது போன்ற நிகழ்ச்சிகள் ஏற்பாடு செய்யுமாறு குழந்தைகளின் பெற்றோர்கள் கேட்டுக்கொண்டார்கள்.

இன் நிகழ்ச்சியில்  35 குழந்தைகள் ஆர்வத்துடன் கலந்து கொண்டு பயன் அடைந்தனர்.
      

Inspire 2013

டிசம்பர் மாதம் 29ம் நாள் (29.12.2013) ஞாயிற்றுகிழமை, திருச்சி நகரத்தார் சங்க இளைஞர் அணியின் முதல் நிகழ்ச்சியாக "INSPIRE 2013" என்ற நிகழ்ச்சி சங்க கட்டிடத்தில் ஏற்பாடு செய்யப்பட்டது.  "தொழிலதிபர் ஆவதற்கு முதலீடு முக்கியம் இல்லை" என்ற தலைப்பில் நமது நகரத்தார்கள் மத்தியில்  தொழில்  செய்யும் ஆர்வத்தை மீட்டெடுக்க வேண்டிய அவசியத்தையும் அவசரத்தையும்  உணர்ந்து அதற்கான முயற்சியில் ஒரு அற்புதமான பயிலரங்கத்தை உலம்கம்பட்டியை சேர்ந்த தொழிலதிபர் திரு.லேனா நடராஜன் (CEO, Dolmatics Group, Chennai) அவர்கள் நடத்தி கொடுத்தார்கள்.

இந்த நிகழ்ச்சியை  இளைஞர் அணி ஒருங்கிணைப்பாளர் திரு.முத்துமாணிக்கம் தொகுத்து வழங்கினார் .  இளைஞர் அணி ஆலோசகர் முன்னாள் தலைவர் திரு.நாகப்பா லெஷ்மணன் அவர்கள் தலைமையேற்று நடத்தினார்கள்.  அவர்களது உரையில் திருச்சி நகரத்தார் சங்க வரலாற்றில் இது போன்ற நிகழ்ச்சி இதுவரை நடத்ததேயில்லை எனவும், நிகழ்ச்சி சிறப்புள்ளதாகவும் பயனுள்ளதாகவும் இருந்தது என பாராட்டினார்கள்.  மேற்படி நிகழ்ச்சியில் நகரத்தார் இளைஞர்கள் சுமார் நூறு பேர் கலந்து கொண்டு சிறப்பித்தார்கள்.  நிகழ்ச்சியில் பங்குபெற்ற அனைவருக்கும் தொழில் கடன் பெற அணுக வேண்டிய அரசாங்க இலாக்ககளின் முகவரி மற்றும் மாவட்ட தொழில் மைய முகவரிகளும் அடங்கிய குறுந்தகடு பயிற்சியாளர் திரு.லேனா நடராஜன் அவர்களால் வழங்கப்பட்டது.  மேலும் கலந்து கொண்ட அனைவருக்கும் பாரதியாரின் "தொழில் முறை கர்ம யோகம்" என்ற கவிதை அச்சடிக்கப்பட்டு வழங்கப்பட்டது.

நிகழ்ச்சி சுமார் 1 மணியளவில் தேனீர் மற்றும்  கிட்லெட்டுடன்  நிறைவுற்றது.

Thursday 26 December 2013

Aachi vanthachu 16.12.2013

                                                         



Monday 23 December 2013

Mukkombu Picnic

 22.12.2013 அன்று 80 பேர் கலந்து கொள்ள முக்கொம்பு  பிக்னிக் காலை 10 மணிக்கு தொடங்கியது.  பயணியர் விடுதி திறந்து வைக்கப்பட்டிருந்தது.   குழந்தைகளும் ஓடி ஆடி மகிழ்ந்தனர்.  திரு.முத்து  மாணிக்கம் அவர்கள் குழந்தைகளுக்கும், பெரியவர்களுக்கும் விளையாட்டுப் போட்டிகள் நடத்தினார்.  அனைவர்க்கும் பரிசுகள் வழங்கப்பெற்றது.  மதிய உணவும் snacksம் ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.  பின் மாலை 6 மணிக்கு அனைவரும் நிறைந்த மனத்துடன் திரும்பினார்கள்.









Sunday 8 December 2013

Pillaiyar Nombu Festival

திருச்சி நகரத்தார் சங்கம் முதன்மையான சங்கம்.  அவர்கள் இதுவரை 165 திருமணங்களை நகரத்தார் சமூக பிள்ளைகளுக்கு நடத்தியிருக்கின்றார்கள். 


இந்த வருடம் பிள்ளையார் நோன்பு அன்று அதை ஒரு திருவிழாவாக மிகச்சிறப்பாக கொண்டாடினார்கள். பிள்ளையார் நோன்பு கமிட்டி முன்னாள் தலைவர், வலையப்பட்டி திரு.PLA.சுப்ரமணியன் தலைமையில் மிகச்சிறப்பாக ஏற்பாடு செய்திருந்தார்கள். சிறப்பு விருந்தினராக காசி மேலாண்மைக் கழக தலைவர் திரு.அக்ரி சொக்கலிங்கம் செட்டியார் அவர்தம் மனைவி மணிமேகலை ஆச்சி அவர்களும் வந்து சிறப்பித்தார்கள்.  'ஆச்சி வந்தாச்சு' கண்ணன் மற்றும் 'தனவணிகன்' பத்திரிக்கையாளர்களும் அவ்வமயம் வந்திருந்தார்கள்.  விழாவன்று காலையில் நகரத்தார் சங்க முன்னாள் தலைவர்கள், நிர்வாகக் குழு உறுப்பினர்கள், செயற்குழு உறுப்பினர்கள், நகரத்தார் பிரமுகர்கள் மற்றும் நண்பர்கள் 200 பேர் ஒன்று கூடி பிள்ளையார் பிடித்தும், ஏலத்திற்கு மங்கலப் பொருட்களை வரிசைப்படுத்தியும் வைத்திருந்தார்கள்.



அனைவருக்கும் மதிய உணவும் செட்டிநாடு கலை அறிவியல் கல்லூரியிலே ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.   
   


 உணவுக்குபின் மதியம் 3.00 மணிக்கு நிகழ்ச்சிகள் ஆரம்பித்தன. Games show-வும், magic show-வும், விராமதி திரு.சோமசுந்தரம் அவர்கள் அனைவரும் வியக்கும் வகையில் நடத்தினார்கள். பாப்கார்ன், பஞ்சுமிட்டாய், ஐஸ்கிரீம், காபி மற்றும் சென்னா மசாலா போன்ற snacks ஏற்பாடு செய்யப்பட்டு இருந்தது. பெரியவர்களும், குழந்தைகளும் ரசித்து சாப்பிட்டு sponsor செய்தவர்களை மனதார வாழ்த்திச் சென்றார்கள். 
   





                         

6.00 மணிக்கு முன்னாள் தலைவர் திரு.கிருஷ்ணன் செட்டியார் தலைமையில் பிள்ளையார் வழிபாடு நடந்தது.  பின்பு வந்திருந்த 2200 நகரத்தார் பெருமக்களுக்கும் முன்னாள் தலைவர்கள் திரு.செல்லப்ப செட்டியார், திரு.அருணாசலம் செட்டியார், திரு.லெட்சுமணன் செட்டியார், திரு. சின்ன அழகப்ப செட்டியார், திரு.முத்தையா செட்டியார், திரு.திருநாவுக்கரசு செட்டியார் மற்றும் மூத்தவர்கள் இலை எடுத்து கொடுத்து ஆசி வழங்கினார்கள். 


   
மங்கலப் பொருட்களை ஏலத்தை, தேவகோட்டை  திரு.சுப்ரமணியன் செட்டியார் மற்றும் நண்பர்கள் சிறப்பாக நடத்தினார்கள் .




நிகழ்ச்சியின் தொடர்ச்சியாக குழந்தைகள் யோகா மற்றும் Trampolene குதித்து விளையாடும் நிகழ்ச்சி நடந்தது.  பின்பு, சிலம்பாட்டம், தக்கையாட்டம் நிகழ்ச்சியும் கிராமிய கலைஞர்களால் மிகச் சிறப்பாக நடத்தப்பட்டது.  தீப்பந்தங்களுடன் ஆடிய நடன நிகழ்ச்சி ரசிக்கும்படி இருந்தது.

     


அனைவருக்கும் சுவையான உணவு வழங்கப்பட்டது.  வந்திருந்த 2200 நகரத்தார்கள் பொறுமையாக, வரிசையாக நின்று, உணவு சாப்பிட்டு சென்றது நிறைவாக இருந்தது.  இது, நமது ஒழுங்கையும், பொறுமையையும், சமத்துவ உணர்வையும், சமூக பொறுப்பையும் காட்டுவதாக அமைந்தது.  சங்க உறுப்பினர்கள், செயற்க்குழு, நிர்வாகக்குழு நண்பர்கள் அனைவரும் திறந்த  
வெளியில் குதுகலமாக நடந்த இந்த விழா ஒரு முன் மாதிரி விழா என்றும், மற்ற விழாக்களையும் இப்படி நடத்தினால் என்ன என்ற கேள்வியுடனும், நிறைவுடனும் பிரிந்து சென்றார்கள்.

திருச்சி நகரத்தார் சங்கத்தின் ஏற்றமிகு தலைவர் 
கிளாச்சிக் ஆதப்பன் சுந்தரம் அவர்களின் மற்றுமொரு கனவுத்திட்டம் நிறைவேறியதில் மகிழ்ந்திருந்தர்கள்.  விழா இனிது நடக்க ஒத்துழைத்த அனைத்து உறுப்பினர்களும் பாராட்டப்பட வேண்டியவர்கள்.

Monday 28 October 2013

President's Dinner


திருச்சி நகரத்தார் சங்கத்தின் தலைவராக ஒரு மனதாக தேர்ந்தெடுக்கப்பட்ட  கிளாசிக் திரு ஆதப்பன் சுந்தரம்  அவர்கள், அனைவரும் ஒன்று கூடி மகிழும் விருந்து நிகழ்ச்சியை ஏற்பாடு செய்திருந்தார்கள்.  இந்நிகழ்ச்சி 27.10.2013 ஞாயிற்றுக்கிழமை அன்று திருச்சி ரம்யாஸ் ஹோட்டலில் மாலை 6.00 மணியளவில் மிகச்சிறப்பாக நடைபெற்றது.  விழாவிற்கு வந்திருந்த அனைவரையும் தலைவர் ஆதப்பன் சுந்தரம் குடும்பத்தினர் மற்றும் திருச்சி நகரத்தார் சங்க நிர்வாகிகள் மிகச் சிறப்பாக வரவேற்று உபசரித்தனர்.  விழாவிற்கு இலக்கியச் சிந்தனை பா.லெட்சுமணன் அவர்கள் தலைமை தாங்கி ஆதப்பன் சுந்தரம் அவர்களைப் பாராட்டி வாழ்த்துரை வழங்கினார்கள்.  அதனைத் தொடர்ந்து திருச்சி நகரத்தார் சங்க முன்னாள் தலைவர்களும் பிற ஊர் நகரத்தார் சங்கப் பிரதிநிதிகளும் வாழ்த்திப் பேசினார்கள்.  தேவகோட்டை இராமநாதன் தலைமையில் கலை நிகழ்ச்சிகள் சிறப்பாக நடைபெற்றன.  அனைத்து ஊர் நகரத்தார் பிரதிநிதிகளுக்கும், சிறப்பு விருந்தினர்களுக்கும் திருச்சி நகரத்தார் சங்க முன்னாள்  தலைவர்களுக்கும் ஆதப்பன் சுந்தரம் அவர்கள் சார்பில் பொன்னாடைகள் அணிவிப்பு சிறப்பாக நடைபெற்றது.  திருச்சிவாழ் நகரத்தார்களும் குறிப்பாக சிறுகூடல்பட்டி நகரத்தார்கள் மற்றும் மாத்துர் கோவில் சார்பிலும் நண்பர்கள் என அனைவரும் கலந்து கொண்டு பொன்னாடை அணிவித்து 
வாழ்த்தினார்கள்.  வந்திருந்த அனைவருக்கும் தலைவர் ஆதப்பன் சுந்தரம் அவர்களின் சார்பாக சிறந்த விருந்து ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.