Sunday 8 December 2013

Pillaiyar Nombu Festival

திருச்சி நகரத்தார் சங்கம் முதன்மையான சங்கம்.  அவர்கள் இதுவரை 165 திருமணங்களை நகரத்தார் சமூக பிள்ளைகளுக்கு நடத்தியிருக்கின்றார்கள். 


இந்த வருடம் பிள்ளையார் நோன்பு அன்று அதை ஒரு திருவிழாவாக மிகச்சிறப்பாக கொண்டாடினார்கள். பிள்ளையார் நோன்பு கமிட்டி முன்னாள் தலைவர், வலையப்பட்டி திரு.PLA.சுப்ரமணியன் தலைமையில் மிகச்சிறப்பாக ஏற்பாடு செய்திருந்தார்கள். சிறப்பு விருந்தினராக காசி மேலாண்மைக் கழக தலைவர் திரு.அக்ரி சொக்கலிங்கம் செட்டியார் அவர்தம் மனைவி மணிமேகலை ஆச்சி அவர்களும் வந்து சிறப்பித்தார்கள்.  'ஆச்சி வந்தாச்சு' கண்ணன் மற்றும் 'தனவணிகன்' பத்திரிக்கையாளர்களும் அவ்வமயம் வந்திருந்தார்கள்.  விழாவன்று காலையில் நகரத்தார் சங்க முன்னாள் தலைவர்கள், நிர்வாகக் குழு உறுப்பினர்கள், செயற்குழு உறுப்பினர்கள், நகரத்தார் பிரமுகர்கள் மற்றும் நண்பர்கள் 200 பேர் ஒன்று கூடி பிள்ளையார் பிடித்தும், ஏலத்திற்கு மங்கலப் பொருட்களை வரிசைப்படுத்தியும் வைத்திருந்தார்கள்.



அனைவருக்கும் மதிய உணவும் செட்டிநாடு கலை அறிவியல் கல்லூரியிலே ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.   
   


 உணவுக்குபின் மதியம் 3.00 மணிக்கு நிகழ்ச்சிகள் ஆரம்பித்தன. Games show-வும், magic show-வும், விராமதி திரு.சோமசுந்தரம் அவர்கள் அனைவரும் வியக்கும் வகையில் நடத்தினார்கள். பாப்கார்ன், பஞ்சுமிட்டாய், ஐஸ்கிரீம், காபி மற்றும் சென்னா மசாலா போன்ற snacks ஏற்பாடு செய்யப்பட்டு இருந்தது. பெரியவர்களும், குழந்தைகளும் ரசித்து சாப்பிட்டு sponsor செய்தவர்களை மனதார வாழ்த்திச் சென்றார்கள். 
   





                         

6.00 மணிக்கு முன்னாள் தலைவர் திரு.கிருஷ்ணன் செட்டியார் தலைமையில் பிள்ளையார் வழிபாடு நடந்தது.  பின்பு வந்திருந்த 2200 நகரத்தார் பெருமக்களுக்கும் முன்னாள் தலைவர்கள் திரு.செல்லப்ப செட்டியார், திரு.அருணாசலம் செட்டியார், திரு.லெட்சுமணன் செட்டியார், திரு. சின்ன அழகப்ப செட்டியார், திரு.முத்தையா செட்டியார், திரு.திருநாவுக்கரசு செட்டியார் மற்றும் மூத்தவர்கள் இலை எடுத்து கொடுத்து ஆசி வழங்கினார்கள். 


   
மங்கலப் பொருட்களை ஏலத்தை, தேவகோட்டை  திரு.சுப்ரமணியன் செட்டியார் மற்றும் நண்பர்கள் சிறப்பாக நடத்தினார்கள் .




நிகழ்ச்சியின் தொடர்ச்சியாக குழந்தைகள் யோகா மற்றும் Trampolene குதித்து விளையாடும் நிகழ்ச்சி நடந்தது.  பின்பு, சிலம்பாட்டம், தக்கையாட்டம் நிகழ்ச்சியும் கிராமிய கலைஞர்களால் மிகச் சிறப்பாக நடத்தப்பட்டது.  தீப்பந்தங்களுடன் ஆடிய நடன நிகழ்ச்சி ரசிக்கும்படி இருந்தது.

     


அனைவருக்கும் சுவையான உணவு வழங்கப்பட்டது.  வந்திருந்த 2200 நகரத்தார்கள் பொறுமையாக, வரிசையாக நின்று, உணவு சாப்பிட்டு சென்றது நிறைவாக இருந்தது.  இது, நமது ஒழுங்கையும், பொறுமையையும், சமத்துவ உணர்வையும், சமூக பொறுப்பையும் காட்டுவதாக அமைந்தது.  சங்க உறுப்பினர்கள், செயற்க்குழு, நிர்வாகக்குழு நண்பர்கள் அனைவரும் திறந்த  
வெளியில் குதுகலமாக நடந்த இந்த விழா ஒரு முன் மாதிரி விழா என்றும், மற்ற விழாக்களையும் இப்படி நடத்தினால் என்ன என்ற கேள்வியுடனும், நிறைவுடனும் பிரிந்து சென்றார்கள்.

திருச்சி நகரத்தார் சங்கத்தின் ஏற்றமிகு தலைவர் 
கிளாச்சிக் ஆதப்பன் சுந்தரம் அவர்களின் மற்றுமொரு கனவுத்திட்டம் நிறைவேறியதில் மகிழ்ந்திருந்தர்கள்.  விழா இனிது நடக்க ஒத்துழைத்த அனைத்து உறுப்பினர்களும் பாராட்டப்பட வேண்டியவர்கள்.

No comments:

Post a Comment