Saturday 15 March 2014

Shiridi Tour

திருச்சிராப்பள்ளி நகரதார்களும் அவர்கள்தம் உறவினர்களும், ஆண்கள் 52 பேர்களும், பெண்கள் 83 பேர்களும் சேர்ந்து மொத்தம் 135 உறுப்பினர்கள் 07.03.2014 மாலை PLA ரெத்னா ரெசிடென்சியில் இருந்து பஸ்சில் புறப்பட்டு மதுரை சென்றார்கள்.  இரவு 12 மணிக்கு 'பாரத தரிசன சுற்றுலா இரயில்' மூலம் ஷீரடிக்கு புறப்பட்டார்கள்.  மதுரை இரயில் நிலையத்தில் திருச்சி நகரத்தார் சங்கத் தலைவர் திரு கிளாசிக் ஆதப்பன் அவர்களும், மதுரை நகரத்தார் சங்கத் தலைவர் ஆச்சி வந்தாச்சு நா.பழனியப்பன் அவர்களும் வழி அனுப்பி வைத்தார்கள்.




09.03.2014 - மாலை  6 மணி அளவில் ஷீரடி சாய் நகர் சென்றடைந்தார்கள்.  அவரவர்களுக்கு ஏற்பாடு செய்திருந்த தங்கும் அறைகளில் தங்கி இரவு பாபாவின் ஆர்த்தி தரிசனத்தை பார்த்தார்கள்.





10.03.2014 - காலையில் 8 மணிக்கு ஏற்பாடு செய்யப்பட்டிருந்த பஸ்களின் மூலம் சனி சிங்கனாபூர் சென்று சனி பகவானை தரிசனம் செய்து, பின்பு நாசிக் பஞ்சவடி சென்று அங்கு கோதண்டராமன், சீதா குகை, கோதாவரி நதி முதலியவற்றை பார்த்து விட்டு, நமது  நகரத்தார் விடுதிக்கு சென்று முருகனை வழிபட்டு (கார்த்திக் மந்திர்) அங்கிருந்து மாலை 6 மணிக்கு புறப்பட்டு திரிஎம்பகேச்வரர் கோவிலுக்கு சென்று ஜோதிர்லிங்க தரிசனம் செய்து இரவு 12 மணிக்கு ஷீரடிக்கு வந்து சேர்ந்தார்கள்.

11.03.2014 - காலை அனைவரும் ஷீரடியில் பாபா இரவு தங்கி இருந்த இடமான துவாரகமாயியையும், பாபா கையால் ஏற்றி வைத்து, தற்பொழுது ஏறிந்து கொண்டேயிருக்கும் துணியையும், சாவடி என்ற இடத்தையும் பார்த்து, ஆர்த்தி தரிசனத்தையும் பார்த்து வந்தார்கள்.  மாலை கடைவீதியை சுற்றிப் பார்த்து 5 மணிக்கு சாய்நகர் இரயில் நிலையத்திற்கு வந்து பண்டரிபுரம் புறப்பட்டார்கள்.

12.03.2014 - காலை பண்டரிபுரம் வந்து சேர்ந்து, தங்குமிடத்தில் இருந்து புறப்பட்டு சந்திரபாகா நதியில் நீராடி பாண்டுரங்கனை தரிசனம் செய்தார்கள்.  தரிசனம் செய்வதற்கு சுமார் 4 மணி நேரம் ஆயிற்று.  ஜனாபாய் இல்லம் மற்றும் பல கோயில்களுக்கும் சென்று வந்தார்கள். மாலை 5 மணிக்கு புறப்பட்டு அடுத்த நாள் காலை மந்த்ராலயம் வந்து சேர்ந்தார்கள்.

13.03.2014 - மந்த்ராலயத்தில் துங்கபத்ரா நதியில் நீராடி ராகவேந்திரரை தரிசனம் செய்துவிட்டு, பஞ்சமுகி ஆஞ்சனேயர் மற்றும் பல கோவில்களுக்கும் சென்று விட்டு மாலை 5 மணி அளவில் மந்த்ராலயம் இரயில் நிலையம் வந்து சேர்ந்தார்கள். 

அங்கு இரயில் நிலையத்தில் சுற்றுலா குழுத் தலைவர் AV.K.சொக்கலிங்கம், சங்க உபத்தலைவர் சபா.S.சுப்பிரமணியம், ஒருங்கிணைப்பாளர் S.தியாகராசா, செயலாளர் SV.சுப்பையா செட்டியார், பொருளாளர் SV.சாத்தப்பன், உறுப்பினர் செல்லப்பன், இரயில்வே சுற்றுலா இரயிலின் பொறுப்பாளர்கள் புவனேஷ், ராஜன் மற்றும் பலருக்கும் நமது செயற்குழு உறுப்பினர் திருவரம்பூர் திரு.KRL.இராமநாதன் மற்றும் சுற்றுலா வந்திருந்த அவரது நண்பர்களும் சேர்ந்து சிறிய பாராட்டு விழா ஏற்பாடு செய்திருந்தார்கள்.  அதில் ஆன்மிக குழுத் தலைவர் SORM.கணபதி செட்டியார், ஆடிட்டர் திரு.AR.கருப்பன் செட்டியார், திரு.KRL.இராமநாதன் மற்றும் பலர் பாராட்டி பேசி, பொன்னாடை அணிவித்து கெளரவித்தார்கள்.  அதன்பின் இரவு 7.30 மணிக்கு புறப்பட்டு அடுத்த நாள் காலை சென்னை  சென்ட்ரல் வந்து சேர்ந்தார்கள்.

14.03.2014 - சென்னை சென்ட்ரல் இரயில் நிலையத்திலிருந்து புறப்பட்டு மாலை 7 மணிக்கு கரூர் இரயில் நிலையம் வந்து சேர்ந்தார்கள்.  அங்கிருந்து பஸ்ஸில் புறப்பட்டு இரவு 11 மணி அளவில் திருச்சிக்கு அனைவரும் நலமாக வந்தார்கள்.

இக்கணம் பயணம் இனிதாகவும், சிறப்பாகவும், சந்தோஷமாகவும் நிறைவு பெற்றது.