Thursday 26 February 2015

Aachi Vanthachu 16.02.2015












Joint Meeting - Palani Nagarathar Sangam

ஜய வருடம் மாசி மாதம் 13ம் நாள் (25.02.2015) அன்று மாலை 6 மணி அளவில் நமது சங்கத்தில் செயற்குழு கூட்டம் நடைபெற்றது.  சங்கத் தலைவர் திரு கிளாசிக் ஆதப்பன் சுந்தரம் அவர்கள் கூட்டத்திற்கு வந்திருந்த அனைவரையும் வரவேற்றார்கள்.  செயலாளர் திரு SV.சுப்பையா அவர்கள் சென்ற கூட்ட அறிக்கையை வாசித்தார்கள்.  பொருளாளர் திரு SV.சாத்தப்பன் அவர்கள் சென்ற இரண்டு மாதக் கணக்குகளையும் வாசித்தார்கள்.

1. கூட்டுத் திருமணம் ஒன்றிற்கு மாப்பிள்ளை பெண் வந்ததால் வைகாசி மாதம் 15, 20, 21 தேதிகளில் நாள் பார்த்து பிள்ளையார்பட்டியில் திருமணம் செய்வதாக நிச்சயிக்கப்பெற்றது. முன்னாள் தலைவர் திரு AVK.சொக்கலிங்கம் செட்டியார் அவர்கள் வசம் நாள் பார்க்க கேட்டுக் கொள்ளப்பெற்றது.  கூட்டுத்திருமண கமிட்டி ஒன்று உருவாக்க முடிவு செய்யப்பெற்றது.

2. சிங்கப்பூர், மலேசியா, காசி, திருப்பதி, மேட்டூர் ஆகிய இடங்களுக்கு சுற்றுலா ஏற்பாடுகள் செய்வதாக முடிவு செய்யப்பெற்றது.

3. தலைக்காவேரி சுற்றுலாவை சிறப்பாக நடத்தி செலவு போக மீதி தொகை சங்கத்தில் சேர்க்கப்பெற்றது. சுற்றுலாக் குழுத் தலைவர் திரு AVK.சொக்கலிங்கம், முன்னாள் தலைவர் அவர்களும் மற்றும் ஒருங்கிணைப்பாளர் திரு கிருஷ்ணன், செயற்குழு உறுப்பினர் அவர்களும் கௌரவிக்கப்பெற்றார்கள்.  

4. தலைவர் அவர்கள்  மேலும் சுற்றுலா தவிர கீழ்கண்ட நிகழ்வுகளுக்கு ஏற்பாடு செய்வதாக கூறினார்கள்.

           i . Bakery Workshop - Cake செய்வது.
           ii . Vegetable & Fruit Carving  Workshop

5. அமெரிக்காவைச் சார்ந்த நம் ஆச்சி ஒருவர் யோகா மெடிடேஷன் வகுப்பு நடத்த கேட்டுக்கொள்ளப்பெற்றது.

6. பள்ளி குழந்தைகளுக்கும் Career Guidance Class நடத்தப்படவுள்ளது.  மேலும் Life Skill Programmeக்கு consultant வுடன் பேசி ஏற்பாடு செய்ய கேட்டுக்கொள்ளப்பெற்றது.

அதன் பின் 7.30 மணி அளவில் கார்த்திகை கூட்டம் கூட்டு வழிபாட்டிற்குப் பின் நடைபெற்றது.  கூட்டுக் கூட்டத்திற்கு பழனி நகரத்தார்கள் திரு M.ராமசாமி உபதலைவர், திரு PL.பழனியப்பன் செயலாளர், திரு N.பழனியப்பன் பொருளாளர், திரு MR.ராமநாதன் செயற்குழு உறுப்பினர் ஆகிய 4 பேர்கள் அழைப்பின் பேரில் வந்திருந்தார்கள். பழனி நகரத்தார் சங்கச் செயலாளர் திரு PL.பழனியப்ப செட்டியார் அவர்களின் செயல்பாடுகளை பற்றி கூறினார்கள்.  அத்துடன் அவர்கள் கட்டிடம் கட்ட ஏற்பாடு செய்வதாகவும், உதவிகளை ஏற்பதாகவும் தெரிவித்தார்கள்.

Newsletter இதழ் 2 ல் வெளியிட்ட Sudoku க்கு  சரியான விடை 9 பேர் அனுப்பியிருந்தார்கள்.  கார்த்திகையன்று குலுக்கலில் திருமதி பிரியா முருகப்பன் அவர்கள் தேர்ந்தெடுக்கப்பெற்றார்கள்.  "மூளைக்கு வேலை" க்கு சரியான விடை 17 பேர் அனுப்பியிருந்தார்கள்.  குலுக்கலில் திருமதி SP.விசாலாட்சி அவர்கள் தேர்ந்தெடுக்கப்பெற்று இருவருக்கும் பரிசுகள் வழங்கப்பெற்றன.

நம் உறுப்பினர் காஸ்மோ திரு ராமநாதன் அவர்கள் ஆன்மீகமும் அறிவியலும் நம் வாழ்வியலுடன் எவ்வாறு ஒத்துப்போகிறது என்று மிகச் சிறப்பாகப் பேசினார்கள்.

பழனி நகரத்தார்கள் கௌரவிக்கப்பெற்றார்கள். அன்று இரவு உணவு அளிக்கும் விராமதி திரு S.சொக்கலிங்கம் செட்டியார் அவர்களும் கௌரவிக்கப்பெற்றார்கள்.

திரு SV.சுப்பையா அவர்கள் நன்றி கூற கூட்டம் முடிந்து அனைவருக்கும் இரவு உணவு வழங்கப்பெற்றது.

Monday 16 February 2015

Vayalur Paadhayathirai 15.02.2015

"நினைத்தது நடக்கும், கேட்டது கிடைக்கும்"
ஐந்தாம் ஆண்டு வயலூர் பாதயாத்திரை

14.02.2015 அன்று திருச்சி நகரத்தார் சங்கத்தில் வேல் பூஜை மற்றும் காவடி பூஜை மேளத்தாளத்துடன் மாலை 6 மணிக்கு தொடங்கியது.  அதில் 430 நகரத்தார் கலந்து கொண்டார்கள்.  வலையப்பட்டி காசி ஸ்ரீ பச்சை காவடி அவர்கள்
அனைவருக்கும் அருளாசி வழங்கினார்கள்.  தேவக்கோட்டை கமலா பழனியப்பன் அவர்கள் திருச்சி நகரத்தார் பெருமக்களுடன் பக்தி பாடல்கள்
பாட, தேவகோட்டை திரு Sunice இராமநாதன், திரு பெருமாள் வீரப்பன், ஆறவயல் முருகனடிமை திரு பழனியப்பன்
மற்றும் திரு லெட்சுமணன் ஆகியோர்கள் வேல் பூஜை மற்றும் அபிஷேகத்தை சிறப்பாக செய்தார்கள்.  பூஜைக்கான அனைத்து ஏற்பாடுகளையும் முன்னாள் செயலாளர் திரு இராமசாமி அவர்கள் சிறப்பாக செய்திருந்தார்கள்.

சுவையான இரவு உணவு துணைச்செயலாளர் திரு நித்திய கல்யாணி N.ஸ்ரீனிவாசன் அவர்களால் அனைவருக்கும் வழங்கப்பட்டது.
 
15.02.2015 அன்று காலை 6 மணிக்கு மேள வாத்தியம் முழங்க 17 காவடிகள் மற்றும் 21 பால்குடத்துடன் பாதயாத்திரை தொடங்கியது.  திரு Sunice இராமநாதன் வேல்காவடி எடுத்து வர பின்னே பால்குடம், காவடிகள் மற்றும் 300 நகரத்தார் பெருமக்கள் பக்தி பாடல்களை பாடி வர பாதயாத்திரையானது கோலாகலத்துடன் நடைபெற்றது.

மலைக்கோட்டை விநாயகரை வணங்கி அருள் பெற்று 15கிமீ
தொலைவையும் சிறிதும் தொய்வில்லம்மால் முருகனை நினைத்து பாடல்களை பாடிக்கொண்டே வயலூர் ராஜா மண்டபத்தை அடைந்தார்கள்.  வழியெல்லாம் நகரத்தார்கள் வேலுக்கு சிறப்பான வரவேற்பு அளித்தார்கள்.  இன்னும் பலர் இடையிடையே பாதயாத்திரையில் தங்களையும் இணைத்துக்கொண்டார்கள்.

காவடிகள் சுமார் 10.15 மணிக்கு வயலூர் சென்றடைந்தது.  பின் பள்ளத்தூர் திரு
AR.AL.ஸ்ரீனிவாசன் அவர்கள் குடும்பத்துடன் வந்திருந்து வயலூரில் அனைவரையும் வரவேற்று சிறப்பாக காலை உணவு அளித்தார்கள்.  பின்
வயலூரான் சன்னதியில் முருகன் வள்ளி தெய்வானைக்கு அபிஷேகம் நடைபெற்றது.  நகரத்தார்கள் அனைவரும் பூஜையில் கலந்துகொண்டு சிறப்பாக முருகப்பெருமானை வணங்கி மகிழ்ந்தார்கள்.  கோவிலில் ஏற்பாடுகளை செயற்குழு உறுப்பினர் பிரைட் திரு நாகப்பன் அவர்கள் சிறப்பாக செய்திருந்தார்கள்.

"விநாயகப்பானை" ஏலம் ரசிக்கும்படியாக இருந்தது.  நகரத்தார்கள்
கேள்விகள் பல கேட்டு ரூ.1,02,000/- க்கு வளத்தி சிட்பண்ட்ஸ் திரு முத்துபழனியப்பன் அவர்கள் ஏலம் எடுத்து முருகனருள் பெற்றார்கள்.

650 நகரத்தார்களுக்கும் மதிய உணவளித்து முன்னாள் தலைவர் திரு VE.AL.சின்ன அழகப்பன் குடும்பத்தினர் சிறப்பித்தார்கள்.

இந்த நிகழ்ச்சி முன்னாள் தலைவர் திரு திருநாவுக்கரசு அவர்கள் காலத்திலிருந்து கடந்த 5 வருடமாக நடந்து வருகிறது. வருடாவருடம் அதன் சிறப்பும், முக்கியத்துவமும் கூடி வருவது பங்குபெறும் நகரத்தாரின் எண்ணிக்கையை பார்த்தாலே நமக்கு புரிகிறது.  "நினைத்தது நடக்கும், கேட்டது கிடைக்கும்" என்ற வயலூரின் நுழைவு வாயில்  மற்றும் கோவிலில் எழுதியிருந்த வாசகங்கள் பக்தர்கள் நம்பிக்கையை மேலும் வலுவூட்ட அடுத்த ஆண்டு பாதயாத்திரையை எதிர்நோக்கி அனைவரும் இனிய நினைவுகளுடன் வீடு திரும்பினர்.


Thursday 12 February 2015

Thalaicauvery Tour 06.02.2015 - 10.02.2015

காவேரித்தாயின் திருச்சி நகரத்தார் காவேரி மூலத்தை கண்ட காட்சி 

திருச்சிராப்பள்ளி நகரத்தார் சங்கம் பல ஆன்மீகச் சுற்றுலா, இன்பச் சுற்றுலாகளை உறுப்பினர்களுக்கு ஏற்பாடு செய்து வருகின்றார்கள்.  அந்த வரிசையில் 05.02.2015 அன்று மைசூர் தலைக்காவேரி ஆன்மீகச் சுற்றுலாவிற்கு சங்க உறுப்பினர்கள் 93 பேர் ரயிலில் புறப்பட்டு சென்றார்கள்.

06.02.2015 காலை 6 மணிக்கு பெங்களூர் சிட்டி ரயில் நிலையத்தில் பெங்களூர் நகரத்தார்கள் வரவேற்று காலை உணவை அளித்தார்கள்.  பின்பு மாண்டியா ரயில் நிலையத்தில் அனைவரும் இறங்கி ஏற்பாடு செய்யப்பட்டிருந்த மூன்று பேருந்துகளில் ஸ்ரீரங்கபட்டினம் சென்றார்கள்.  அங்கு காவேரி சங்கமத்தில் நீராடி ரெங்கநாதரை தரிசித்தார்கள்.  பின் திப்பு சுல்தான் அரண்மனை முதலியவற்றை பார்த்து விட்டு மைசூர் சென்றடைந்தார்கள்.  மதிய உணவிற்கு பிறகு மைசூர் அரண்மனை பார்த்து சாமுண்டி கோவில் அம்மனை
தரிசித்து விட்டு பிருந்தாவன் கார்டன் பார்த்து களித்து இரவு மைசூரில் தங்கினார்கள்.  மைசூரில் உணவு ஏற்பாடுகளை செய்து தந்த காரைக்குடியைச் சார்ந்த திரு ரமேஷ் அவர்களுக்கு நன்றிகள் பல.

இரண்டாவது நாள் பயணமாக மைசூரில் இருந்து காலை புறப்பட்டு புரநாடு அன்னபூரணியைத் தரிசனம் செய்து காலை உணவை முடித்துக் கொண்டு சிருங்கேரி சென்று சாரதாம்பிகையை தரிசனம் செய்து கொண்டு
அங்கு மதிய உணவை முடித்துக் கொண்டார்கள்.  சிருங்கேரியில் இருந்து புறப்பட்டு இரவு கொல்லூர் தாய் மூகாம்பிகை கோவில் சென்று தரிசித்து அங்கேயே இரவு தங்கினார்கள்.

மூன்றாம் நாள் காலை கொல்லூர் மூகாம்பிகை தரிசனம் செய்துவிட்டு காலை உணவை முடித்துக் கொண்டு உடுப்பி கிருஷ்ணன் கோவில் சென்று தரிசனம் செய்துவிட்டு பகல் உணவை முடித்துக்கொண்டு, பின்பு காட்டில் மஹாலெட்சுமி, குக்கே சுப்பிரமண்யா கோவில் தரிசனம் செய்துவிட்டு இரவு பாகமண்டலாவில் தங்கினார்கள்.

நான்காம் நாள் காலை பாகமண்டலாவில் அதிகமான பனிமூட்டம் இருந்ததால் சுமார் 8 மணி அளவில் அங்கிருந்து தலைக்காவேரி சென்று நீராடி காவேரித் தாயை பார்த்து விட்டு பாகமண்டலா வந்து காலை உணவை முடித்துக்கொண்டார்கள். அங்கிருந்து பைலேகுப்பா (திபெத்தின் செட்டில்மெண்ட்) வந்து பகல் உணவை முடித்துக்கொண்டு புத்தர் கோவில்
வந்து பார்த்து விட்டு இரவு பெங்களூர் ராஜராஜேஸ்வரி கோவில் வந்து திருமண மண்டபத்தில் தங்கினார்கள்.

ஐந்தாம் நாள் காலை ராஜராஜேஸ்வரி அம்மன் கோவிலில் கோ பூஜை, காலை பூஜை பார்த்துவிட்டு சுவாமிஜி அவர்கள் அளித்த காலை உணவை அவர்களுடன் இருந்து சாப்பிட்டுவிட்டு, அவர்களின் ஆசிர்வாதத்தை பெற்று அங்கிருந்து கிளம்பினார்கள்.

மேற்படி கோவிலில் அனைத்து ஏற்பாடுகளையும் செய்து தந்த தேவோகோட்டையைச் சார்ந்த திரு மு.வீர.பெத்தபெருமாள் அவரின் முயற்சி பாராட்டப்படவேண்டியது.

பின் இஸ்கான் டெம்பிள் சென்று பார்த்து விட்டு லால்பார்க் சென்றார்கள்.  அங்கு பெங்களூர் நகரத்தார் சங்க உறுப்பினர்கள் வந்து வரவேற்று பகல் உணவு அளித்தார்கள்.  பெங்களூர் நகரத்தார் சங்கத்தின் துணைத்தலைவர் திரு ரவி வீரப்பன் அவர்கள், உறுப்பினர்கள் திரு மு.வீர.பழனியப்பன் அவர்கள், திரு ARM.சுரேஷ்குமார் அவர்கள் (சுற்றுலா கமிட்டி சேர்மன்), திரு V.வள்ளியப்பன், திரு சோமு, திரு சிதம்பரம், திரு காடப்பன், திரு ராமசாமி, திரு முத்துராமன் ஆகியோர்கள் அனைவரையும் திருச்சி நகரத்தார் சங்கத்தின் சார்பாக பாராட்டி கௌரவித்தார்கள்.

பின்பு அங்கிருந்து பெங்களூர் சிட்டி ரயில் நிலையத்திற்கு சென்றடைந்தார்கள்.  அங்கு இரவு உணவை தேவகோட்டையைச் சார்ந்த திரு நவ.வ.அருணாசலம் அவர்கள் அளித்தார்கள்.  இரவு 7.15 மணிக்கு ரயிலில் புறப்பட்டு 11.02.2015 அன்று காலை அனைவரும் திருச்சிக்கு நலமாக வந்து சேர்ந்தார்கள்.

இந்த சிறப்புமிக்க ஆன்மீகச் சுற்றுலாவை சுற்றுலா கமிட்டி சேர்மனும், சங்கத்தின் முன்னாள் தலைவருமான திரு ஏவி.கே.சொக்கலிங்கம் அவர்களும், செயற்குழு உறுப்பினரும் ஒருங்கிணைப்பாளருமான திரு V.கிருஷ்ணன் அவர்களும் சிறப்பாக ஏற்பாடுகளை செய்து 39 ஆண்கள், 54 பெண்களை அழைத்துச்சென்று வந்தது பாராட்டுக்குரியது.  மேலும் சுற்றுலாவில் உறுதுணையாக இருந்த சங்கத்தின் செயலாளர் திரு SV.சுப்பையா அவர்களுக்கும், பொருளாளர் திரு SV.சாத்தப்பன் அவர்களுக்கும் நன்றிகள் பல. இந்த சுற்றுலாவிற்கு வந்திருந்தவர்களை உற்சாகப்படுத்திய பெங்களூர் நகரத்தார் சங்கத்தின் நண்பர்கள் பாராட்டப்பட வேண்டியவர்கள்.

Wednesday 4 February 2015

Thayumanavar Thaipoosam 2015


திருச்சி நகரத்தார் சங்கம் 35 ஆண்டுகளாக திருச்சி மலைக்கோட்டை தாயுமானவர் கோவிலில் தைப்பூச உற்சவ அறக்கட்டளை நடத்தி வருகின்றார்கள்.  இந்த வருடமும் 03.02.2015 அன்று தாயுமானவர் சன்னதியில் சிறப்பு அபிஷேகம், அலங்காரம் ஆராதனை சிறப்பாக நடைப்பெற்றது.  நகரத்தார் திரளாக கலந்து கொண்டு வழிபட்டார்கள்.  பிரசாதம் மதியம் அனைவருக்கும் மலையிலேயே வழங்கப்பட்டது.  அனைத்து ஏற்பாடுகளையும் மூத்த செயற்குழு உறுப்பினர் திரு KE.மெய்யப்பன், அவர்கள் மனைவி திருமதி சீதா ஆச்சி மற்றும் திரு M.லெட்சுமணன் அவர்களும் சிறப்பாக செய்திருந்தது பாராட்டப்பட வேண்டியது.