Thursday 12 February 2015

Thalaicauvery Tour 06.02.2015 - 10.02.2015

காவேரித்தாயின் திருச்சி நகரத்தார் காவேரி மூலத்தை கண்ட காட்சி 

திருச்சிராப்பள்ளி நகரத்தார் சங்கம் பல ஆன்மீகச் சுற்றுலா, இன்பச் சுற்றுலாகளை உறுப்பினர்களுக்கு ஏற்பாடு செய்து வருகின்றார்கள்.  அந்த வரிசையில் 05.02.2015 அன்று மைசூர் தலைக்காவேரி ஆன்மீகச் சுற்றுலாவிற்கு சங்க உறுப்பினர்கள் 93 பேர் ரயிலில் புறப்பட்டு சென்றார்கள்.

06.02.2015 காலை 6 மணிக்கு பெங்களூர் சிட்டி ரயில் நிலையத்தில் பெங்களூர் நகரத்தார்கள் வரவேற்று காலை உணவை அளித்தார்கள்.  பின்பு மாண்டியா ரயில் நிலையத்தில் அனைவரும் இறங்கி ஏற்பாடு செய்யப்பட்டிருந்த மூன்று பேருந்துகளில் ஸ்ரீரங்கபட்டினம் சென்றார்கள்.  அங்கு காவேரி சங்கமத்தில் நீராடி ரெங்கநாதரை தரிசித்தார்கள்.  பின் திப்பு சுல்தான் அரண்மனை முதலியவற்றை பார்த்து விட்டு மைசூர் சென்றடைந்தார்கள்.  மதிய உணவிற்கு பிறகு மைசூர் அரண்மனை பார்த்து சாமுண்டி கோவில் அம்மனை
தரிசித்து விட்டு பிருந்தாவன் கார்டன் பார்த்து களித்து இரவு மைசூரில் தங்கினார்கள்.  மைசூரில் உணவு ஏற்பாடுகளை செய்து தந்த காரைக்குடியைச் சார்ந்த திரு ரமேஷ் அவர்களுக்கு நன்றிகள் பல.

இரண்டாவது நாள் பயணமாக மைசூரில் இருந்து காலை புறப்பட்டு புரநாடு அன்னபூரணியைத் தரிசனம் செய்து காலை உணவை முடித்துக் கொண்டு சிருங்கேரி சென்று சாரதாம்பிகையை தரிசனம் செய்து கொண்டு
அங்கு மதிய உணவை முடித்துக் கொண்டார்கள்.  சிருங்கேரியில் இருந்து புறப்பட்டு இரவு கொல்லூர் தாய் மூகாம்பிகை கோவில் சென்று தரிசித்து அங்கேயே இரவு தங்கினார்கள்.

மூன்றாம் நாள் காலை கொல்லூர் மூகாம்பிகை தரிசனம் செய்துவிட்டு காலை உணவை முடித்துக் கொண்டு உடுப்பி கிருஷ்ணன் கோவில் சென்று தரிசனம் செய்துவிட்டு பகல் உணவை முடித்துக்கொண்டு, பின்பு காட்டில் மஹாலெட்சுமி, குக்கே சுப்பிரமண்யா கோவில் தரிசனம் செய்துவிட்டு இரவு பாகமண்டலாவில் தங்கினார்கள்.

நான்காம் நாள் காலை பாகமண்டலாவில் அதிகமான பனிமூட்டம் இருந்ததால் சுமார் 8 மணி அளவில் அங்கிருந்து தலைக்காவேரி சென்று நீராடி காவேரித் தாயை பார்த்து விட்டு பாகமண்டலா வந்து காலை உணவை முடித்துக்கொண்டார்கள். அங்கிருந்து பைலேகுப்பா (திபெத்தின் செட்டில்மெண்ட்) வந்து பகல் உணவை முடித்துக்கொண்டு புத்தர் கோவில்
வந்து பார்த்து விட்டு இரவு பெங்களூர் ராஜராஜேஸ்வரி கோவில் வந்து திருமண மண்டபத்தில் தங்கினார்கள்.

ஐந்தாம் நாள் காலை ராஜராஜேஸ்வரி அம்மன் கோவிலில் கோ பூஜை, காலை பூஜை பார்த்துவிட்டு சுவாமிஜி அவர்கள் அளித்த காலை உணவை அவர்களுடன் இருந்து சாப்பிட்டுவிட்டு, அவர்களின் ஆசிர்வாதத்தை பெற்று அங்கிருந்து கிளம்பினார்கள்.

மேற்படி கோவிலில் அனைத்து ஏற்பாடுகளையும் செய்து தந்த தேவோகோட்டையைச் சார்ந்த திரு மு.வீர.பெத்தபெருமாள் அவரின் முயற்சி பாராட்டப்படவேண்டியது.

பின் இஸ்கான் டெம்பிள் சென்று பார்த்து விட்டு லால்பார்க் சென்றார்கள்.  அங்கு பெங்களூர் நகரத்தார் சங்க உறுப்பினர்கள் வந்து வரவேற்று பகல் உணவு அளித்தார்கள்.  பெங்களூர் நகரத்தார் சங்கத்தின் துணைத்தலைவர் திரு ரவி வீரப்பன் அவர்கள், உறுப்பினர்கள் திரு மு.வீர.பழனியப்பன் அவர்கள், திரு ARM.சுரேஷ்குமார் அவர்கள் (சுற்றுலா கமிட்டி சேர்மன்), திரு V.வள்ளியப்பன், திரு சோமு, திரு சிதம்பரம், திரு காடப்பன், திரு ராமசாமி, திரு முத்துராமன் ஆகியோர்கள் அனைவரையும் திருச்சி நகரத்தார் சங்கத்தின் சார்பாக பாராட்டி கௌரவித்தார்கள்.

பின்பு அங்கிருந்து பெங்களூர் சிட்டி ரயில் நிலையத்திற்கு சென்றடைந்தார்கள்.  அங்கு இரவு உணவை தேவகோட்டையைச் சார்ந்த திரு நவ.வ.அருணாசலம் அவர்கள் அளித்தார்கள்.  இரவு 7.15 மணிக்கு ரயிலில் புறப்பட்டு 11.02.2015 அன்று காலை அனைவரும் திருச்சிக்கு நலமாக வந்து சேர்ந்தார்கள்.

இந்த சிறப்புமிக்க ஆன்மீகச் சுற்றுலாவை சுற்றுலா கமிட்டி சேர்மனும், சங்கத்தின் முன்னாள் தலைவருமான திரு ஏவி.கே.சொக்கலிங்கம் அவர்களும், செயற்குழு உறுப்பினரும் ஒருங்கிணைப்பாளருமான திரு V.கிருஷ்ணன் அவர்களும் சிறப்பாக ஏற்பாடுகளை செய்து 39 ஆண்கள், 54 பெண்களை அழைத்துச்சென்று வந்தது பாராட்டுக்குரியது.  மேலும் சுற்றுலாவில் உறுதுணையாக இருந்த சங்கத்தின் செயலாளர் திரு SV.சுப்பையா அவர்களுக்கும், பொருளாளர் திரு SV.சாத்தப்பன் அவர்களுக்கும் நன்றிகள் பல. இந்த சுற்றுலாவிற்கு வந்திருந்தவர்களை உற்சாகப்படுத்திய பெங்களூர் நகரத்தார் சங்கத்தின் நண்பர்கள் பாராட்டப்பட வேண்டியவர்கள்.

No comments:

Post a Comment