Monday 5 October 2015

Personality Development Programme - 03.10.2015

Career Counselling Programme மற்றும் So What? என்ற Life Skill Programme - ஐ தொடர்ந்து முத்தாய்ப்பாய் அக்டோபர் 3 சனிக்கிழமையன்று, திருச்சி அருகேயுள்ள ஆயிரமாண்டு தொன்மை வாய்ந்த தமிழனின் கட்டுமான தொழில்நுட்பத்தையும், நீர் மேலாண்மையையும்
உலகுக்கு பறைசாற்றிக் கொண்டிருக்கும் கல்லணையில் 'Raise the bar high' என்ற Personality Development Programme வெகு சிறப்பாக ஒரு நாள் பயிலரங்கமாக நடத்தப்பெற்றது.

அதை Prof.பஞ்சநாதன் அவர்கள் மிகச் சிறப்பாய் வடிவமைத்து நடத்திக்கொடுத்தார்கள். காலை 8.30 மணியளவில் ஒரு பேருந்தில் 8ம் வகுப்புக்கு மேற்பட்ட மாணவர்கள் மற்றும் அதே ஆர்வத்தில் இருந்த சில பெற்றோர்களுமாய் புறப்பட்டனர். கல்லணை வந்து சேர்ந்தவுடன் அனைவருக்கும் பலகாரம் வழங்கப்பெற்றது.

எழில் கொஞ்சும் PWD விருந்தினர் மாளிகையில் உள்ள அரங்கத்தில் இந்த பயிலரகங்கம் நடத்தப்பட்டது.

அமைதியான சூழல், குளுமையான காற்று பசுமையான காட்சி என ஒரு மலைபிரதேசத்திற்கு வந்தது போன்ற உற்சாகம் ததும்பும் உணர்வுடன் மாணவர்களும் மற்றவர்களும் காணப்பட்டனர் .

முதல் பகுதியாக வந்திருந்த மாணவமணிகள் ஒருவரை ஒருவர் அறிந்து புரிந்து கொள்ள ஏதுவாக  ice breaker விளையாட்டுகள் நடத்தப்பட்டது . பின்னர் 'Be a Super Singer' என்ற தலைப்பில் எந்த பண்புகள் ஒரு Super Singer ஐ Super Singer ஆக்குகிறது என்பது பற்றி கலந்தாய்வு மற்றும் பயிற்சிகள் நடத்தப்பட்டது .

மதிய உணவு சுமார் 100 பேருக்கு வழங்கபட்டது . மீண்டும் இரண்டாம் அமர்வில் உறவுகளை மேம்படுத்துவது எப்படி என்பது பற்றியும் பயிற்றுவிக்கப்பட்டது .

மாணவ மணிகளை தன் அனுபவத்தாலும், நகைசுவையாலும், விளையாட்டாய் கற்பிக்கும் முறையாலும் பேராசிரியர் பஞ்சநாதன் அவர்கள் காந்தத்தை போல் ஈர்த்திருந்தார் என்றே சொல்ல வேண்டும். கலந்துகொண்ட மாணவர்களுக்கு சான்றிதழ்களும் சிறப்பாய் செயல்பட்டவர்களுக்கு பரிசுகளும் வழங்கப்பட்டது.

நிகழ்ச்சியில் ஆர்வத்தோடு கலந்துகொண்ட
தலைவர் Classic S.ஆதப்பன் அவர்கள் தன் அனுபவத்தையும், கருத்துகளையும் மாணவர்களிடம் பகிர்ந்து கொள்ள செயலர் SV.சுப்பையா  நன்றி கூற நிகழ்ச்சி இனிதே நிறைவடைந்தது.

பின்னர் கலந்து கொண்ட அனைவருக்கும் சிற்றுண்டி வழங்கப்பட்டு கல்லனையும் சுற்றிக் காண்பிக்கப்பட்டது. ஒரு கல்விச் சுற்றுலா வந்த திருப்தியோடு அனைவரும் மனநிறைவோடு ஊர் திரும்பினர்.

No comments: