Wednesday 7 October 2015

67th General Body Meeting - 04.10.2015

04/10/2015 அன்று முகூர்த்தம் திருமண மண்டபத்தில் பொதுக்குழுக்கூட்டம் நடைபெறத்து. தலைவர் கிளாசிக் ஆதப்பன் சுந்தரம் அவர்கள் அனைவரையும் வரவேற்றார்கள். செயலர் சென்ற ஆண்டு அறிக்கையை வாசித்து பொதுகுழுவில் ஒப்புதல் பெறப்பெற்றது. 2014-2015க்கான தணிக்கை செய்யப்பெற்ற கணக்குகளை பொருளாளர் சமர்பிக்க பொதுகுழுவில் ஒப்புதல் பெறப்பட்டது.

01/04/2014 முதல் 31/03/2015 வரை உள்ள ஆண்டுக்கான தணிக்கையாளராக, ஆடிட்டர் திரு AR.கருப்பஞ்செட்டியார் அவர்கள் ஒருமனதாக நியமிக்கப்பெற்றார்கள்.

நமது சங்க விதிகள் சங்கம் துவங்கிய 1948-ம் ஆண்டிலிருந்து எவ்வித மாற்றமும் இன்றி இருந்து வந்தது. தற்சமயம் நடைமுறைக்கு ஏற்றபடி மாற்றி அமைக்க முன்னாள் தலைவர் திரு M.அடைக்கலவன், திரு VE.AL.சின்ன அழகப்பன், திரு K.R.L.ராமநாதன், திரு S.சண்முகம் & திரு TR.சுப்பையா அடங்கிய குழு அமைக்கப்பெற்று 01.10.2015 செயற்குழுவில் விவாதிக்கப்பெற்று 04.10.2015 பொதுக்குழுவில் ஒப்புதல் பெற்று அன்று முதல் நடைமுறைப்படுத்த முடிவு செய்திருந்தது.

அதன்படி சட்ட விதிகள் மற்றும் உபவிதிகளின் குழுத் தலைவர், திரு. M. அடைக்கலவன் அவர்கள் நமது சங்கத்தின் சட்ட விதிகள்  & உபவிதிகளில் திருத்த செய்யவேண்டிய விதிகளையும், புதிதாக சேர்க்க வேண்டிய
விதிகளையும், பொதுக்குழுவின் ஒப்புதலுக்காக முன்மொழிந்து சமர்ப்பித்தார். இந்த திருத்தங்கள் அனைத்தும் செயற்குழுவில் முறையாக விவாதிக்கப்பெற்றது. மேற்படி விவாதத்தில் திரு. சபா.சுப்ரமணியம், திரு.S.கதிரேசன்(ஏலதாரர்), திரு ஸ்டர்லிங் சிவலிங்கம், முன்னாள் தலைவர் திரு M.செல்லப்பன், முன்னாள் தலைவர் திரு VE.AL.சின்ன அழகப்பன், திரு TR.சுப்பையா, பேராசிரியர் திரு M.சுப்பிரமணியன் ஆகியோர் கலந்து கொண்டு தங்களது கருத்துக்களைக் கூறினார்கள். மேற்குறித்த விவாதத்திற்கு பிறகு, சட்ட விதிகள் & உபவிதிகள் குழுவால் பரிந்துரைக்கப்பெற்ற அனைத்து தீர்மானங்களையும் ஏற்றுக்கொள்வதென, ஏகமனதாக தீர்மானிக்கப்பெற்றது.

சட்ட விதிகள் & உபவிதிகளை திருத்தம் செய்வதற்கு சீறிய முயற்சியை மேற்கொண்ட குழுவின் தலைவரும் சங்கத்தின் முன்னாள்
தலைவருமான திரு M.அடைக்கலவன், குழுவின் உபதலைவரும் முன்னாள் தலைவருமான திரு VE.AL.சின்ன அழகப்பன், குழுவின் உறுப்பினர்கள் திரு KR.L.ராமனாதன், திரு S.சண்முகம் & திரு TR.சுப்பையா ஆகியோர் அனைவருக்கும் பொதுக்குழுவின் சார்பில் சங்கத்தின் தலைவர் திரு கிளாசிக் ஆதப்பன் சுந்தரம் அவர்கள் மனமார்ந்த பாராட்டுகளையும், நன்றிகளையும் தெரிவித்தார்கள்.

பின் சிறப்பு விருந்தினர், திரு. பெரியண்ணன் அவர்கள்  "லாபகரமான முதலீடு " பற்றி நகரத்தார் பெருமக்களுக்கு எடுத்துரைத்தார்கள். அடுத்ததாக சேலம்திரு
சேது மீனாள் ஆச்சி அவர்களின் "சுற்றுசூழல் நிர்வாகம்" பற்றியும், சேலத்தில் அவர்கள் நடைமுறைபடுத்திய செயல்களையும் சிறப்பாக எடுத்துக்காட்டினார்கள். பின் திருச்சி I.M.A தலைவர் Dr.S.சேதுராமன் அவர்களுக்குப் பாராட்டு வழங்கப்பெற்று நகரத்தார்களுக்கு மருத்துவ ஆலோசனைகள் இலவசமாக செய்து தருவதாக டாக்டர் வாக்குறுதி அளித்தார்கள். பின் வேடிக்கை விளையாட்டுகள் மற்றும் கேள்விகளில் சரியான விடை அளித்தவர்களுக்கு பரிசுகள் வழங்கப்பெற்றன. சிறப்பாக விழாத்தொகுப்பு செய்த திரு T.முத்துமாணிக்கம் மற்றும் திரு சோமசுந்தரம் அவர்கள் பாராட்டப்பெற்றார்கள்.

பின் 2015-2017 ஆண்டிற்கான சங்க நிர்வாகிகள் தேர்வு செய்ய விருப்பமுள்ள உறுப்பினர்களிடம் வேட்பு மனுப்பெற்று தேர்தலை நடத்தித் தர தேர்வுக் குழுத் தலைவராக திரு M.அடைக்கலவன், உறுப்பினர்கள் திரு VE.AL.சின்ன அழகப்பன், திரு TR.சுப்பையா, திரு K.RL.ராமநாதன் மற்றும் திரு S.சண்முகம் செட்டியார் ஆகியோர்களை சங்கத் தலைவர் திரு கிளாசிக் ஆதப்பன் சுந்தரம் அவர்கள் நியமித்தார்கள்.

நமது சங்க சட்ட விதிகளின் படி சங்கத்தின் நிர்வாக குழுவிற்கு

                                 ஒரு தலைவர் 
                                 ஒரு துணைத்தலைவர் 
                                 ஒரு செயலாளர் 
                                 ஒரு இணைச்செயலாளர் 
                                 ஒரு பொருளாளர் மற்றும் 

43 செயற்குழு உறுப்பினர்கள் (சங்கத்தின் உறுப்பினர் எண்ணிக்கையின் படி 25 உறுப்பினர்களுக்கு ஒரு செயற்குழு உறுப்பினர் என்ற விகிதாசாரப்படி) ஆக மொத்தம் 48 பேர் செயற்குழுவிற்கு தேர்வு செய்யப் பெற வேண்டும் என, தேர்வுக் குழுத் தலைவர் திரு M.அடைக்கலவன் அவர்கள் கூறினார்கள்.

கீழ்க்கண்ட விபரப்படி முன்மொழியப் பெற்று வழிமொழியப்பெற்ற 48 உறுப்பினர்கள் வேட்பு மனுக்களை முறைப்படி தாக்கல் செய்தார்கள்.
                                              தலைவர் 

திரு M.ராஜேந்திரன்                  

துணைத்தலைவர் 

திரு C.மீனாட்சி சுந்தரம்

செயலாளர் 

திரு PR.முத்துக்குமார்

இணைச்செயலாளர் 

திரு RM.காசி

பொருளாளர் 

திரு V.கிருஷ்ணன்

செயற்குழு உறுப்பினர்கள் 

திரு SV.சுப்பையா, திரு SV.சாத்தப்பன், திருN. ஸ்ரீனிவாசன், திருRM.பழனியப்பன், திரு V.ராமசாமி, திரு KE.மெய்யப்பன், திரு S.கதிரேசன், திரு V.பழனியப்பன், திரு T.சேதுராமன்,  திரு K.முத்து,  திரு S.சண்முகம்,  திருS.S.வைரவன், திரு லெ.ராமநாதன், திரு KM.பழனியப்பன், திரு S.நடராஜன், திரு SP.சிதம்பரம், திரு AN.முத்துராமன், திரு RM.முத்துக்கருப்பன், திரு S.தியாகராஜன், திரு V.சண்முகம், திரு AR.S.சுப்பிரமணியன், திரு தென்னூர் S.கதிரேசன், திரு S.நாகப்பன், திரு SP.சுப்ரமணியன், திரு RM.முத்தையா, திரு M.செல்லப்பன், திரு M.RM.அழகப்பன், திரு M.லக்ஷ்மணன், திரு PL.அண்ணாமலை, திருS. அண்ணாமலை, திரு VR.பழனியப்பன், திரு M.சேதுராமன், திரு சித.பழனியப்பன், திரு ஆவி.காசிநாதன், திரு S.சுப்பையா, திரு SP.பழனியப்பன், திரு T.முத்துமாணிக்கம்.

மேற்கண்ட உறுப்பினர்களின் மனுக்களை பரிசிலித்து தேர்தல் குழு, அவையாவும் தகுதியானவை என்று தேர்தல் குழுத்தலைவர் திரு M.அடைக்கலவன் அவர்கள் கூறினார்கள். எனவே அவர்கள் அனைவரும் ஏகமனதாக தேர்ந்தெடுக்கப்பெற்றதாக தலைவர் திரு கிளாசிக் ஆதப்பன் சுந்தரம் அவர்கள் அறிவித்தார்கள்.
         

சங்க விதிகளின்படி சங்கத்தின் முன்னாள் தலைவர்கள் அனைவரும் வாக்குரிமை பெற்ற நிரந்திர சிறப்பு அழைப்பாளர்களாக செயற்குழுவில் இருப்பார்கள் எனவும் திரு கிளாசிக் ஆதப்பன் சுந்தரம் அவர்கள் அறிவித்தார்கள்.

1. திரு L.N.லெட்சுமணன் செட்டியார்
2. திரு SP.அருணாசலம் செட்டியார்
3. திரு S.O.RM.கணபதி செட்டியார்
4. திரு M.செல்லப்பன் செட்டியார்
5. திரு RM.கிருஷ்ணன் செட்டியார்
6. திரு PL.A.சுப்பிரமணியன் செட்டியார்
7. திரு M.அடைக்கலவன் செட்டியார்
8. திரு AV.K.சொக்கலிங்கம் செட்டியார்
9. திரு S.N.S.RM.முத்தையா செட்டியார்
10. திரு R.திருநாவுக்கரசு செட்டியார்
11. திரு VE.AL.சின்ன அழகப்பன் செட்டியார்
12. திரு கிளாசிக் ஆதப்பன் சுந்தரம்

சிறப்பாக செயலாற்றிய தேர்வுக்குழுவின் தலைவர் திரு M.அடைக்கலவன் அவர்களையும், உறுப்பினர்கள் திரு VE.AL.சின்ன அழகப்பன், திரு K.RL.ராமநாதன், திரு S.சண்முகம் மற்றும் திரு TR.சுப்பையா அவர்களையும் தலைவர் பாராட்டி சிறப்பித்தார்கள்.

செயற்குழுவில் குறிப்பிடும் வங்கிகளில் சங்கத்தின் பெயரில் புதிதாக கணக்குகள் திறக்கவும், ஏற்கனவே இருந்து வரும் கணக்குகளை முடிக்கவும், டெபாசிட் போடவும், செயற்குழுவின் அனுமதியுடன் திரும்ப பெறவும், வங்கி காசோலைகளில் கையெழுத்திட்டு பணம் பெறவும் பொருளாளர் திரு V.கிருஷ்ணன் உடன் தலைவர் திரு M.ராஜேந்திரன் அல்லது செயலாளர் திரு K.முத்துக்குமார் ஆகிய இருவரில் ஒருவர் இணைந்து கையெழுத்திட்டு வர பொதுக்குழு அனுமதி வழங்கியது.

புதிய நிர்வாகிகள் அறிமுகப்படுத்தப்பெற்று புதிய தலைவர், உபதலைவர், செயலாளர், இணைச்செயலாளர், பொருளாளர் ஆகியோர் ஏற்புரை அளித்தார்கள். வரக்கூடிய ஆண்டு சிறப்பாக அமைய உறுதி பூண்டார்கள்.

புதிய செயலாளர் திரு முத்துக்குமார் நன்றி கூற அனைவரும் இரவு விருந்துடன் கூட்டம் இனிதே ஒத்திவைக்கப்பெற்றது.


No comments:

Post a Comment