Wednesday 25 March 2015

Joint Meeting - Erode Nagarathar Sangam

ஜய வருடம் பங்குனி மாதம் 10ஆம் நாள் (24.03.2015) அன்று மாலை 6 மணி அளவில் நமது சங்கத்தில் செயற்குழு கூட்டம் நடைபெற்றது.  சங்கத் தலைவர் திரு கிளாசிக் ஆதப்பன் சுந்தரம் அவர்கள் கூட்டத்திற்கு வந்திருந்த அனைவரையும் வரவேற்றார்கள்.  செயலாளர் திரு SV.சுப்பையா அவர்கள் சென்ற கூட்ட அறிக்கையை வாசித்து பின் கூட்டத்தில் ஏற்றுக்கொள்ளப்பெற்றது.  பொருளாளர் திரு SV.சாத்தப்பன் அவர்கள் சென்ற மாத வரவு செலவுகளை வாசித்து கூட்டத்தில் ஏற்றுக்கொள்ளப்பெற்றது.

சங்கத்தலைவர் அவர்கள் எதிர்வரும் சுற்றுலாக்கள் திருப்பதி, திருச்செந்தூர் பற்றி விரிவாகப் பேசினார்கள்.  நமது சங்கத்தில் நடைபெற உள்ள ராம நவமி மற்றும் யோகா வகுப்புகளில் கலந்து கொள்ளக் கேட்டுக்கொண்டார்கள்.

வெயில் காலத்தில் சங்கத்தில் வெயிலின் தாக்கம் அதிகமாக இருப்பதால், சிரமமாக இருக்கிறது.  அதனால் கட்டிட ஹாலில் AC பொருத்தலாம் என்றும் புதிய LCD Projector வசதிகள் மற்றும் ஒலிபெருக்கி, மைக் செட் பழமையாக இருப்பதால் புதிதாக வாங்கலாம் என்றும், கை கழுவும் இடத்தில் மழை காலத்தில் கட்டிடத்தின் உள்ளே தண்ணீர் வருவதால் அவற்றிக்கு Sliding Window அமைக்கலாம் என்றும், அதற்கு 4 லட்சம் வரை செலவு ஆகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது, Donors கிடைத்தால் நல்லது என்றும் எதிர்பார்ப்பதாகவும் கூறினார்கள்.  மேலும் தலைவர் பதவி காலத்தில் அவற்றை செய்ய விரும்புவதாக கூறினார்கள்.

சங்கத்தில் தங்கியிருப்பவர்களுக்கு இரவு நேரங்களில் மின்சாரம் இல்லாவிட்டால் புழுக்கத்தில் தூங்க முடியவில்லை.  ஆகையால் நம் முன்னாள் தலைவர்கள் அனைவரும் சேர்ந்து UPS அமைத்துக் கொடுத்தார்கள்.  அவர்களுக்கு தலைவர் அவர்கள் நன்றி கூறினார்கள்.  அவர்களை பாராட்டி தீர்மானம் நிறைவேற்றப்பெற்றது.

மாலை 7 மணியளவில் கார்த்திகைக்  கூட்டம் கூட்டு வழிபாட்டிற்குப் பின்
நடைபெற்றது.  ஈரோடு நகரத்தார் சங்க தலைவர் கண்டவராயன்பட்டி திரு N.SS.சிவசுப்பிரமணியன், உபதலைவர் உலகம்பட்டி திரு லேனா.நாராயணன், செயலாளர் கண்டவராயன்பட்டி திரு சொக்கலிங்கம், துணைச்செயலாளர் காரைக்குடி திரு செல்வநாதன் மற்றும் உறுப்பினர்கள் நம் அழைப்பின் பேரில் கலந்துக் கொண்டார்கள்.  அவர்கள் அனைவரும் வாழ்த்திக் கௌரவிக்கப்பெற்றார்கள்.



அறிவியலும் ஆன்மீகமும் பற்றி செல்வி சாத்தம்மை பிரியா மிக சிறப்பாக உரை ஆற்றினார்கள். அவர்களின் பேச்சாற்றல் அனைவரையும் வியப்புள்ளாக்கியது.

அன்றைய தினம் திரு சண்முகம் செட்டியார் அவர்கள் 83வது பிறந்த நாள் என்பதால் அனைவருக்கும் இரவு விருந்து அளித்தார்கள்.  அவர்களுக்கு நம் தலைவர் வாழ்த்துக் கூறி ஆசி பெற்றார்கள்.


பின் செயலாளர் திரு SV.சுப்பையா நன்றி கூற கூட்டம் இனிதே நிறைவுற்றது.

No comments:

Post a Comment