Monday, 29 December 2014

Pillaiyar Nonbu Carnival 2014

"நிறைகுறைகள் நிறைத்திருக்கும் இவ்வுலக வாழ்வுதன்னில் இறையொன்றே 
நிறையென்று இனிதுணர்ந்தோர் நகரத்தார்"

திருச்சி நகரத்தார் சங்கத்தினர் பிள்ளையார் நோன்பை ஒரு திருவிழா போன்று 27.12.2014 சனிக்கிழமையன்று செட்டிநாடு கலை மற்றும் அறிவியல் கல்லூரி வளாகத்தில் மிகப் பிரம்மாண்டமான முறையில் சிறப்பாக கொண்டாடினர்.


Naragathar Photo Contest 2014 & Hobby Exhibition : (காலை 11 மணி முதல்)

அன்று காலையில் இருந்தே செட்டிநாடு கல்லூரி விழாக்கோலம் பூண்டு நகரத்தார்கள் குடும்பத்துடன் வந்த வண்ணம் இருந்தனர்.

Naragathar Photo Contest 2014 க்கு வந்திருந்த புகைப்படங்கள் அனைத்தும் ஒரு அரங்கில் பார்வைக்கு வைக்கப்பட்டிருந்தது.  மழலைகளின் சிரிப்பையும்,
முதுமையின் மகிழ்ச்சியையும் போட்டியாளர்கள் படம் பிடித்து காட்டியிருந்த அழகு பாராட்டத்தக்கது.  மற்றொருபுறம் நகரத்தார்களின் வாழ்வியல் பற்றிய புகைப்படங்கள் நம்மை திகைக்க வைத்தது.

அடுத்த அரங்கில் Hobby Exhibition போட்டிக்காக தாங்கள் பொக்கிஷமாக பாதுகாத்து வரும் பொருட்களின் அணிவகுப்பு நம்மை வியக்க வைத்தது. 
Stamps, Coins, Significant Signatures, Art Collections, Photographs, நகரத்தார் பற்றிய ஆவணங்களின் தொகுப்பு ஆகியவை காட்சிக்கு வைக்கப்பட்டிருந்தது.

Erode MR Color Lab & Studio, உரிமையாளர் திரு
உலகம்பட்டி லேனா நாராயணன் அவர்கள் இந்த போட்டிகளுக்கு உறுதுணையாக Sponsor ஆக செயல்பட்டார்கள்.





பிள்ளையார் நோன்பு Carnival : (மதியம் 3 மணி முதல்)

செட்டிநாடு கல்லூரி வளாகத்தில் நுழைந்தவுடன் குழந்தைகளை மகிழ்விக்கும் வகையில் 'பலூன் வளைவு' அமைக்கப்பட்டிருந்தது.  அங்கேயே Cartoon பொம்மைகள் ஆடிக்கொண்டே அனைவரையும் வரவேற்றனர்.

அதை கடந்து உள்ளே சென்றால் கேரளா புகழ் "செண்டை மேளம்" அமர்க்களப்படுத்தியது.

அனைவரும் உண்டு மகிழ பாப்கார்ன், பஞ்சு மிட்டாய், டெல்லி அப்பளம் எனத் தனிதனி Stallகள் அமைக்கப்பட்டிருந்தது.








எல்லோரும் விளையாடி மகிழ Balloon shooting, Ring  throw, Dart Board
மற்றும் puzzles எனத் தனிதனி Stallகள் இருந்தன.

பெண்களும் குழந்தைகளும் தங்களை அழகுப்படுத்திக் கொள்ள Tattoo, Mehendi
stallகளும் இருந்தன.

குழந்தைகள் ஆடி, குதித்து மகிழ Bouncing bed, வரைந்து மகிழ Drawing Stall ம் ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.

மொத்தத்தில் இது ஒரு திருவிழாவா, பொருட்காட்சியா, கல்யாணமா, கடற்கரையா என அனைவரும் திகைக்கும் வகையில் இருந்தது.

மாலை 5 மணியளவில் செல்வி RM.முத்துமீனா இறைவணக்கம் பாட, திருச்சி நகரத்தார் சங்க தலைவர் திரு கிளாசிக் ஆதப்பன் சுந்தரம் வரவேற்க,
மேலைச்சிவபுரி திரு E.ஞானம் அவர்கள் (தலைவர், முத்து சாரிட்டபிள் டிரஸ்ட்) சிறப்பு விருந்தினராய் பங்கேற்று சிறப்புரையாற்றினார்கள்.  உலகம்பட்டி திரு லேனா நாராயணன், அவர்களும் உரையாற்றினார்கள். 
Nagarathar  Photo Contest  2014 மற்றும் Hobby Exhibition ஒருங்கிணைப்பாளரர்களாய் செயலாற்றிய திரு RMS.முத்துராம், ஜெயம் கலர் லேப் & ஸ்டுடியோ மற்றும் திரு M.லெஷ்மணன் செயற்குழு உறுப்பினர் அவர்களும் கௌரவிக்கப்பெற்றனர்.

அதை தொடர்ந்து போட்டிகளில் பரிசு பெற்றவர்களுக்கு சான்றிதழ்களும், கோப்பைகளும், ரொக்கப்பரிசுகளும்  வழங்கப்பெற்றது.

Russia வில், World Robot Olympiad ல் உலக அளவில் இரண்டாமிடம் பெற்ற
வலையப்பட்டியைச் சேர்ந்த இளைஞர்  சிவா மாணிக்கம் (Std IX, DAV Public School, Chennai) பரிசு கொடுத்து குடும்பத்தினருடன் ஊக்குவிக்கப்பெற்றார்.



திருச்சி நகரத்தார் சங்க உறுப்பினர்களின் முகவரி கையேடு குறுந்தகடாய் வெளியிடப்பெற்றது. 
விராமதியை சார்ந்த Seventh Sense திரு சோமசுந்தரம் அவர்கள் இந்த முகவரி கையேட்டுக்குரிய விலையில்லா software  யை தயாரித்து கொடுத்துள்ளது ஒரு பாராட்டுக்குரிய செயலாகும்.

மேடையில் சங்கத்தின் முன்னாள் தலைவர்கள்,  மூத்தோர்கள் அமர்ந்து இழை எடுத்துக் கொடுக்க அனைவரும்
வரிசையில் வந்து இழை எடுத்துக்கொண்டு இறையருள் பெற்றுச் சென்றது சிறப்பு.

மங்கலப் பொருட்கள் ஏலத்தை உபதலைவர் திரு M.இராஜேந்திரன், திரு கிருஷ்ணன் மற்றும்
திரு M.RM.அழகப்பன் ஆகிய செயற்குழு உறுப்பினர்கள் பொறுப்பேற்று சிறப்பாக நடத்தி கொடுத்தார்கள்.

விழாவில் கலந்து கொண்ட சுமார் 2000 நபர்களுக்கும் செவ்வூர் பாண்டி அவர்களின் கைவண்ணத்தில் தயாரான அறுசுவை விருந்து Buffet ஆக
இணைச்செயலாளர் திரு நித்திய கல்யாணி N.ஸ்ரீனிவாசன், செயற்குழு உறுப்பினர்கள்  திரு PL.நாகப்பன், திரு RM.பழனியப்பன், திரு N.முருகப்பன் ஆகியோர் மேற்பார்வையில் வழங்கப்பெற்றது.

     விருந்து நடைப்பெற்றுக்கொண்டிருந்த நேரத்திலேயே அனைவருக்கும் Close up magic கலைஞர்கள் அவர்கள் உணவருந்திக் கொண்டிருக்கும் பொழுது அருகில் வந்து magic
செய்து மகிழ்வித்தது ஒரு குடும்ப நிகழ்ச்சி போன்ற உணர்வை ஏற்படுத்தியது.  இந்த நிகழ்ச்சியை நமது Seventh Sense திரு சோமு அவர்கள் தன்னுடன் பிற magic கலைஞர்களையும் இணைத்துக்கொண்டு சிறப்பாக செய்தார்கள்.

தென்னூர் டிரேடர்ஸ் திருமதி KMS.நாச்சம்மை செந்தில் அவர்களும்,
ஆத்தங்குடி திருமதி அலமேலு ICICI முகவர் அவர்களும் 25 புது உறுப்பினர்களை சேர்த்து பாராட்டு பெற்றார்கள்.

மேடை நிகழ்ச்சியின் தொகுப்பாளாராய்  மேலைச்சிவபுரி திரு Tமுத்துமாணிக்கம்
தன் அழகு தமிழில் சொற்சிலம்பாட்டம் ஆடியது நம் மனங்களில் இன்னும் ஒலித்துக்கொண்டேயிருக்கிறது.

இந்த பிள்ளையார் நோன்பு நிகழ்ச்சிகள் அனைத்தையும் முன்னாள் தலைவர் திரு SP.அருணாச்சலம் செட்டியார் அவர்கள் தலைமையில் தலைவர் திரு கிளாசிக் ஆதப்பன் சுந்தரம், உபதலைவர்கள் திரு M.இராஜேந்திரன் மற்றும் திரு சபா.சுப்ரமணியன், செயலாளர் திரு SV.சுப்பையா, இணைச்செயாளர் திரு நித்திய கல்யாணி N.ஸ்ரீனிவாசன், பொருளாளர் திரு SV.சாத்தப்பன், செயற்குழு உறுப்பினர்களும் மற்றும் பிள்ளையார் நோன்பு விழா குழுவினர் சிறப்பாக ஏற்பாடு செய்திருந்தார்கள்.


No comments:

Post a Comment