Monday, 29 December 2014

Nagarathar Photo Contest 2014 & Hobby Exhibition

நகரத்தார் சமூக மக்களிடையே உறங்கிக்கிடைக்கும் குடத்திலிட்ட விளக்குகளைப்போல வெளிக்கொணராத கலை கைத்திறன் மேம்பாடுகளை குன்றின் மேல் இட்ட ஒளிவிளக்குகளாய் மாற்ற
திரு உலகம்பட்டி லேனா நாராயணன், MR Color Lab & Studio, Erode மற்றும் திருச்சி நகரத்தார் சங்கம் இணைந்து நகரத்தார் மக்களுக்கான நிழற்படப்போட்டி - 2014 (Nagarathar Photo Contest 2014) மற்றும் நம் இனமக்கள் இதுவரை கண்டிராத Hobby Exhibition  போட்டியும் நடத்திடத்திட்டமிடப்பெற்றது.

இவ்விரு போட்டிகளுக்கான ஒருங்கிணைப்பாளர்களாக திரு RMS.முத்துராம்,
ஜெயம் கலர் லேப் & ஸ்டுடியோ அவர்களும், திரு M.லெஷ்மணன், செயற்குழு உறுப்பினர் அவர்களும் நியமிக்கப்பெற்றார்கள்.

இதன்படி நிழற்படப்போட்டிக்கான வழிகாட்டிக் குறிப்புகளும் முறைகளும் வகுக்கப்பெற்றன.  எந்த வயதினரும் கலந்து கொள்ளலாம் என்றாலும் 18 வயதுக்குகினையோற் பெற்றோர் அனுமதியுடன் கலந்து கொள்ளலாம் எனத் தெரிவிக்கப்பெற்றது.

நிழற்படப்போட்டிக்கான தலைப்புகள் :

பிரிவு A : தனி நிழற்படம் - 'தீபத்திருவிழா' அல்லது 'புன்னகை' என்ற தலைப்பிற்கு பொருத்தமாக அமையும் படம்.

பிரிவு B : நம் நகரத்தார் சமூக மக்களின் பழக்கவழக்கங்கள், நிகழ்வுகள் தொடர்பான 5 நிழற்படங்கள்.

நடுவர்கள் தேர்தெடுக்கும் ஒரு பரிசும், முதல் பரிசாக ஒன்றும், இரண்டாம் பரிசாக இரண்டு பரிசுகளும், மூன்றாம் பரிசாக ஐந்து பரிசுகளும், எல்லோராலும் பாராட்டப்பெற்ற ஒரு படைப்பிற்கு சிறப்பு பரிசும், 19 வயதிற்கு இளையோரில் மிகச் சிறந்த 5 படைப்புகளுக்கு என எல்லாருக்கும் பரிசுக் கோப்பைகளும் வெற்றிச் சான்றிதழ்களும் வழங்க தீர்மானிக்கப்பெற்றது.

20.12.2014 படைப்புகள் அனுப்பிட இறுதி நாளாகத் தீர்மானிக்கப்பெற்றது.  இந்நிகழ்வுகளைப் பற்றிய விரிவான விளக்கங்கள் அடங்கிய விளம்பரங்கள், கடிதங்கள், அஞ்சல், மின்னஞ்சல் மற்றும் முடிந்தவரை எல்லா
ஊடக வாயில்கள் வழியாக நம் சமூக மக்களுக்குத் தெரிவிக்கப்பெற்றன.


இதேபோன்று Hobby EXhibition வும் நடத்த தீர்மானிக்கப்பெற்றது.

27.12.2014 அன்று இவ்விரு போட்டிகளின் கண்காட்சி நடத்தப்பெற்றது.  நிழற்பட போட்டிக்கு 300 படைப்புகளும், Hobby Exhibition க்கு 20 போட்டியாளர்களும் பங்கேற்றனர்.

நிழற்பட போட்டிக்கு வந்த படைப்புகள் மிகச் சிறந்த கலை ஆர்வம் மிக்க ஒளிப்பதிவாளர்கள் நம் இன மக்களிடேயே இருக்கிறார்கள் என்பதை வெளிச்சம் போட்டு காட்டியது.

மனதிற்கினிய பொழுதுபோக்கு போட்டியில் காட்சிக்கு வைக்கப்பட்டிருந்த கலைச் சேகரிப்புகள் பார்வையாளர்கள் அனைவரின் கவனத்தை ஈர்த்ததோடு பாராட்டுகளையும் பெற்றன.

நம் இன மக்களின் கைத்திறனுக்குச் சான்றாக, கலைக் கண்கள் கொண்டு எடுக்கப்பட்ட நேர்த்தியான நிழற்படங்களும், அரிய வகை சேகரிப்புகள் இந்த உன்னதமான நிகழ்வில் வெளிப்பட்டது நம் நகரத்தாருக்கு கிடைத்த அருமையான வாய்ப்பு என்பதை அனைவரும் உணர்ந்து பாராட்டினர்.

Hobby Exhibition க்கு பரிசு ஊக்கத் தொகைகளாக மொத்தம் ரூ.20,000 அளவில் வெற்றிச் சான்றிதழ்களுடன் வழங்கப்பெற்றன.

புதுமையான முயற்சியாக நடத்தப்பெற்ற இவ்விரு போட்டிகளும் மிகச் சிறப்பான முறையில் வெற்றிகரமாக பிள்ளையார் நோன்பன்று நிகழ்ந்தது திருச்சி நகரத்தார் சங்கத்தின் பெருமையை மேம்படுத்தியது.

No comments:

Post a Comment