"நம்மால் இயன்ற உதவி" என்ற உயர்ந்த கோட்பாட்டுடன் கோவையில்
எழுச்சிமிகு இளைஞர்களால் தொடங்கப்பட்ட அமைப்பு தான் Nagarathar Entrepreneur Union (NEU). இந்த அமைப்பு நம்மவர்களின் பிள்ளைகள் தங்கள் ஆளுமையை, திறன்களை வளர்த்துக் கொள்ளவும், உயர் கல்வியும் அதன் தொழில் வாய்ப்புகளையும் விளக்கும் பல பயிலரங்கங்களை நடத்தி வருகிறார்கள்.

நம் சமூக இளைஞர்கள் பெருமளவில் தொழில் துறைக்கு திரும்ப வேண்டியதன் அவசியத்தையும் அவசரத்தையும் உணர்த்தும் வகையில் IBCN 2015 - International Business Conference of Nagarathars என்ற
ஏற்றமிகு மாநாட்டை வருகின்ற ஜூலை 25,26 ல் கோவை Hotel Le Meridien ல்
மிகப்பெரிய அளவில் நடத்த திட்டமிட்டுள்ளனர். அதில் உலகளாவிய அளவில் சுமார் 600 நகரத்தார் தொழில் முனைவோர் கலந்து கொள்ள வருகின்றனர்.
மிகப்பெரிய அளவில் நடத்த திட்டமிட்டுள்ளனர். அதில் உலகளாவிய அளவில் சுமார் 600 நகரத்தார் தொழில் முனைவோர் கலந்து கொள்ள வருகின்றனர்.
IBCN 2015 ன் அறிமுக விழா, நமது சங்கத்துடன் இணைந்து 14.12.2014 ஞாயிறு அன்று Hotel PLA Ratna Residency ல் காலை 11 மணியளவில்
தொடங்கியது.
தொடங்கியது.
இந்த அறிமுக விழாவில் நமது நகரத்தார் சமூகத்தின் வரலாறு பற்றிய ஆவணப்படம் திரையிடப்பட்டது. பின்னர் NEU நிர்வாகிகள் மாநாட்டின் சிறப்பு அம்சங்களை விளக்கி நம்மில் ஆர்வமுள்ளவர்களை கலந்து கொள்ள அழைப்பு விடுத்தனர்.
புதுமையாகவும், வியக்கத்தக்கவும் பிரம்மிக்கத்தக்க வகையிலும் தொழில் செய்து வளர்ந்துள்ள தொழில் முனைவோரை அடையாளப்படுத்தும் வகையில் Entrepreneur Awards க்கு தகுதியானவர்கள் என்று நினைப்பவர்கள் தங்கள் விபரங்களை IBCN இணையதளத்தில் பதிவேற்றம் செய்யலாம் என தெரிவித்தனர்.

தொழில் தொடங்க திட்டமிட்டுள்ளவர்கள் தங்கள் தொழில் திட்டத்தை Business Plan Contest க்கு அனுப்பலாம் என்றும் தேர்ந்தெடுக்கப்படும் Business Plan க்கு லட்சங்களில் ரொக்க பரிசு உண்டு என்றும் தெரிவித்தனர்.
சுமார் 200 பேர் கலந்து கொண்ட அறிமுக விழா அறுசுவை மதிய உணவுடன் நிறைவு பெற்றது.
கலந்துகொண்ட அனைவரும் தாங்கள் நகரத்தார் மற்றும் தொழில் முனைவோர் என்பதில் பெருமிதத்தோடு மகிழ்ந்து மாநாட்டை எதிர்நோக்கி விடைபெற்றனர்.
No comments:
Post a Comment