"நினைத்தது நடக்கும், கேட்டது கிடைக்கும்"
ஐந்தாம் ஆண்டு வயலூர் பாதயாத்திரை
14.02.2015 அன்று திருச்சி நகரத்தார் சங்கத்தில் வேல் பூஜை மற்றும் காவடி பூஜை மேளத்தாளத்துடன் மாலை 6 மணிக்கு தொடங்கியது. அதில் 430 நகரத்தார் கலந்து கொண்டார்கள். வலையப்பட்டி காசி ஸ்ரீ பச்சை காவடி அவர்கள்
அனைவருக்கும் அருளாசி வழங்கினார்கள். தேவக்கோட்டை கமலா பழனியப்பன் அவர்கள் திருச்சி நகரத்தார் பெருமக்களுடன் பக்தி பாடல்கள்
பாட, தேவகோட்டை திரு Sunice இராமநாதன், திரு பெருமாள் வீரப்பன், ஆறவயல் முருகனடிமை திரு பழனியப்பன்
மற்றும் திரு லெட்சுமணன் ஆகியோர்கள் வேல் பூஜை மற்றும் அபிஷேகத்தை சிறப்பாக செய்தார்கள். பூஜைக்கான அனைத்து ஏற்பாடுகளையும் முன்னாள் செயலாளர் திரு இராமசாமி அவர்கள் சிறப்பாக செய்திருந்தார்கள்.
சுவையான இரவு உணவு துணைச்செயலாளர் திரு நித்திய கல்யாணி N.ஸ்ரீனிவாசன் அவர்களால் அனைவருக்கும் வழங்கப்பட்டது.
15.02.2015 அன்று காலை 6 மணிக்கு மேள வாத்தியம் முழங்க 17 காவடிகள் மற்றும் 21 பால்குடத்துடன் பாதயாத்திரை தொடங்கியது. திரு Sunice இராமநாதன் வேல்காவடி எடுத்து வர பின்னே பால்குடம், காவடிகள் மற்றும் 300 நகரத்தார் பெருமக்கள் பக்தி பாடல்களை பாடி வர பாதயாத்திரையானது கோலாகலத்துடன் நடைபெற்றது.
மலைக்கோட்டை விநாயகரை வணங்கி அருள் பெற்று 15கிமீ
தொலைவையும் சிறிதும் தொய்வில்லம்மால் முருகனை நினைத்து பாடல்களை பாடிக்கொண்டே வயலூர் ராஜா மண்டபத்தை அடைந்தார்கள். வழியெல்லாம் நகரத்தார்கள் வேலுக்கு சிறப்பான வரவேற்பு அளித்தார்கள். இன்னும் பலர் இடையிடையே பாதயாத்திரையில் தங்களையும் இணைத்துக்கொண்டார்கள்.
காவடிகள் சுமார் 10.15 மணிக்கு வயலூர் சென்றடைந்தது. பின் பள்ளத்தூர் திரு
AR.AL.ஸ்ரீனிவாசன் அவர்கள் குடும்பத்துடன் வந்திருந்து வயலூரில் அனைவரையும் வரவேற்று சிறப்பாக காலை உணவு அளித்தார்கள். பின்
வயலூரான் சன்னதியில் முருகன் வள்ளி தெய்வானைக்கு அபிஷேகம் நடைபெற்றது. நகரத்தார்கள் அனைவரும் பூஜையில் கலந்துகொண்டு சிறப்பாக முருகப்பெருமானை வணங்கி மகிழ்ந்தார்கள். கோவிலில் ஏற்பாடுகளை செயற்குழு உறுப்பினர் பிரைட் திரு நாகப்பன் அவர்கள் சிறப்பாக செய்திருந்தார்கள்.
"விநாயகப்பானை" ஏலம் ரசிக்கும்படியாக இருந்தது. நகரத்தார்கள்
கேள்விகள் பல கேட்டு ரூ.1,02,000/- க்கு வளத்தி சிட்பண்ட்ஸ் திரு முத்துபழனியப்பன் அவர்கள் ஏலம் எடுத்து முருகனருள் பெற்றார்கள்.
650 நகரத்தார்களுக்கும் மதிய உணவளித்து முன்னாள் தலைவர் திரு VE.AL.சின்ன அழகப்பன் குடும்பத்தினர் சிறப்பித்தார்கள்.
இந்த நிகழ்ச்சி முன்னாள் தலைவர் திரு திருநாவுக்கரசு அவர்கள் காலத்திலிருந்து கடந்த 5 வருடமாக நடந்து வருகிறது. வருடாவருடம் அதன் சிறப்பும், முக்கியத்துவமும் கூடி வருவது பங்குபெறும் நகரத்தாரின் எண்ணிக்கையை பார்த்தாலே நமக்கு புரிகிறது. "நினைத்தது நடக்கும், கேட்டது கிடைக்கும்" என்ற வயலூரின் நுழைவு வாயில் மற்றும் கோவிலில் எழுதியிருந்த வாசகங்கள் பக்தர்கள் நம்பிக்கையை மேலும் வலுவூட்ட அடுத்த ஆண்டு பாதயாத்திரையை எதிர்நோக்கி அனைவரும் இனிய நினைவுகளுடன் வீடு திரும்பினர்.
நகரத்தார் அனைவருக்கும் வயலூரானின் அருளை பெற்று தந்தமைக்கு திருச்சிசங்கத்திற்க்கு நன்றி..................
ReplyDeleteவாழ்த்துகளுக்கு நன்றி!
Delete