ஜய வருடம் மாசி மாதம் 13ம் நாள் (25.02.2015) அன்று மாலை 6 மணி அளவில் நமது சங்கத்தில் செயற்குழு கூட்டம் நடைபெற்றது. சங்கத் தலைவர் திரு கிளாசிக் ஆதப்பன் சுந்தரம் அவர்கள் கூட்டத்திற்கு வந்திருந்த அனைவரையும் வரவேற்றார்கள். செயலாளர் திரு SV.சுப்பையா அவர்கள் சென்ற கூட்ட அறிக்கையை வாசித்தார்கள். பொருளாளர் திரு SV.சாத்தப்பன் அவர்கள் சென்ற இரண்டு மாதக் கணக்குகளையும் வாசித்தார்கள்.
1. கூட்டுத் திருமணம் ஒன்றிற்கு மாப்பிள்ளை பெண் வந்ததால் வைகாசி மாதம் 15, 20, 21 தேதிகளில் நாள் பார்த்து பிள்ளையார்பட்டியில் திருமணம் செய்வதாக நிச்சயிக்கப்பெற்றது. முன்னாள் தலைவர் திரு AVK.சொக்கலிங்கம் செட்டியார் அவர்கள் வசம் நாள் பார்க்க கேட்டுக் கொள்ளப்பெற்றது. கூட்டுத்திருமண கமிட்டி ஒன்று உருவாக்க முடிவு செய்யப்பெற்றது.
2. சிங்கப்பூர், மலேசியா, காசி, திருப்பதி, மேட்டூர் ஆகிய இடங்களுக்கு சுற்றுலா ஏற்பாடுகள் செய்வதாக முடிவு செய்யப்பெற்றது.
3. தலைக்காவேரி சுற்றுலாவை சிறப்பாக நடத்தி செலவு போக மீதி தொகை சங்கத்தில் சேர்க்கப்பெற்றது. சுற்றுலாக் குழுத் தலைவர் திரு AVK.சொக்கலிங்கம், முன்னாள் தலைவர் அவர்களும் மற்றும் ஒருங்கிணைப்பாளர் திரு கிருஷ்ணன், செயற்குழு உறுப்பினர் அவர்களும் கௌரவிக்கப்பெற்றார்கள்.
4. தலைவர் அவர்கள் மேலும் சுற்றுலா தவிர கீழ்கண்ட நிகழ்வுகளுக்கு ஏற்பாடு செய்வதாக கூறினார்கள்.
i . Bakery Workshop - Cake செய்வது.
ii . Vegetable & Fruit Carving Workshop
5. அமெரிக்காவைச் சார்ந்த நம் ஆச்சி ஒருவர் யோகா மெடிடேஷன் வகுப்பு நடத்த கேட்டுக்கொள்ளப்பெற்றது.
6. பள்ளி குழந்தைகளுக்கும் Career Guidance Class நடத்தப்படவுள்ளது. மேலும் Life Skill Programmeக்கு consultant வுடன் பேசி ஏற்பாடு செய்ய கேட்டுக்கொள்ளப்பெற்றது.
அதன் பின் 7.30 மணி அளவில் கார்த்திகை கூட்டம் கூட்டு வழிபாட்டிற்குப் பின் நடைபெற்றது. கூட்டுக் கூட்டத்திற்கு பழனி நகரத்தார்கள் திரு M.ராமசாமி உபதலைவர், திரு PL.பழனியப்பன் செயலாளர், திரு N.பழனியப்பன் பொருளாளர், திரு MR.ராமநாதன் செயற்குழு உறுப்பினர் ஆகிய 4 பேர்கள் அழைப்பின் பேரில் வந்திருந்தார்கள். பழனி நகரத்தார் சங்கச் செயலாளர் திரு PL.பழனியப்ப செட்டியார் அவர்களின் செயல்பாடுகளை பற்றி கூறினார்கள். அத்துடன் அவர்கள் கட்டிடம் கட்ட ஏற்பாடு செய்வதாகவும், உதவிகளை ஏற்பதாகவும் தெரிவித்தார்கள்.
Newsletter இதழ் 2 ல் வெளியிட்ட Sudoku க்கு சரியான விடை 9 பேர் அனுப்பியிருந்தார்கள். கார்த்திகையன்று குலுக்கலில் திருமதி பிரியா முருகப்பன் அவர்கள் தேர்ந்தெடுக்கப்பெற்றார்கள். "மூளைக்கு வேலை" க்கு சரியான விடை 17 பேர் அனுப்பியிருந்தார்கள். குலுக்கலில் திருமதி SP.விசாலாட்சி அவர்கள் தேர்ந்தெடுக்கப்பெற்று இருவருக்கும் பரிசுகள் வழங்கப்பெற்றன.
நம் உறுப்பினர் காஸ்மோ திரு ராமநாதன் அவர்கள் ஆன்மீகமும் அறிவியலும் நம் வாழ்வியலுடன் எவ்வாறு ஒத்துப்போகிறது என்று மிகச் சிறப்பாகப் பேசினார்கள்.
பழனி நகரத்தார்கள் கௌரவிக்கப்பெற்றார்கள். அன்று இரவு உணவு அளிக்கும் விராமதி திரு S.சொக்கலிங்கம் செட்டியார் அவர்களும் கௌரவிக்கப்பெற்றார்கள்.
திரு SV.சுப்பையா அவர்கள் நன்றி கூற கூட்டம் முடிந்து அனைவருக்கும் இரவு உணவு வழங்கப்பெற்றது.
No comments:
Post a Comment