Saturday, 16 August 2014

66th Annual Day Competition & Function



15.08.2014 ல் திருச்சி நகரத்தார் சங்கத்தின் 66வது ஆண்டு விழா மிக சிறப்பாக செட்டிநாடு கலை அறிவியல் கல்லூரி வளாகத்தில் நடைபெற்றது.  கிளாசிக் ஆதப்பன் சுந்தரம் அவர்கள் தலைமையேற்க சிறப்பு விருந்தினராக சென்னை ‘கமலா சினிமாஸ் பங்குதாரர் திரு VNCT.வள்ளியப்பன் அவர்கள் கலந்து கொண்டு சிறப்பு உரையாற்றினார்கள்.  அவர்கள் தன்னுடைய உரையில் நம்மின இளைஞர்கள் வேலை தேடுபவர்களாக இல்லாமல் வேலை கொடுப்பவர்களாக, தொழில் முனைவோராக மாற வேண்டியதன் அவசியத்தை எடுத்துரைத்தார்கள்.

ஆண்டு விழா நிகழ்ச்சிகள் இரண்டு கட்டமாக நடத்தப்பட்டன.  முதற்கட்டமாக 10.08.2014 ல் நகரத்தார் சங்க கட்டிடத்தில் முன்னாள்

தலைவர் R.திருநாவுக்கரசு அவர்கள் வழிகாட்டுதலில் செல்வி AT.ஸ்வர்யா, செல்வி SP.வள்ளியம்மை, செல்வி M.அலமேலு ஆகிய மூவரால் நடத்தப்பட்டன. நம் முன்னாள் தலைவர்களும், பெரியவர்களும் நடுவர்களாக செயல்பட்டனர்.


ஆண்களுக்கு ‘ஒரு நிமிட ஆன்மீகக் கதை என்ற போட்டியும், பெண்களுக்கு ‘குப்பையிலிருந்து பொக்கிஷம் மற்றும் ‘புதிருக்கான
விடை என்ற போட்டியும், சிறுவர் சிறுமியர்களுக்காக ‘ 120 நொடிகளில் உங்கள் திறமை என்று தங்கள் தனித்திறமையை வெளிக்காட்டும் நிகழ்ச்சியும் மற்றும் ‘Spell Bee’ என்ற போட்டியும் நடத்தப்பட்டது. 10 வயதிற்குட்பட்ட குழந்தைகளுக்கு ‘Fun Game’ என்ற போட்டியும் நடத்தப்பட்டது.

தம்பதியருக்கான ‘Salad Making’ போட்டியின் முதற்சுற்றில் பெண்கள் சொல்ல சொல்ல ஆண்கள் செய்யுமாறு நிகழ்ச்சியை அமைத்தது மிகவும்
ரசிக்கத்தக்கதாயிருந்தது. இதில் தேர்வு பெற்ற தம்பதியர் 15.08.2014 ஆண்டு விழா மேடையில் இறுதி சுற்றில் பங்கு பெற்றனர்.  இறுதி சுற்றின் சிறப்பு அம்சமாக தம்பதியரின் ஒரு கையை இணைத்து கட்டி விட்டனர். தம்பதியர் தங்களுடைய ஒரு கையால் தான் காய்களையும் பழங்களையும் வெட்டி salad செய்து அலங்கரிக்க வேண்டும்.  இடையிடையே நடுவர்கள் கேட்ட கேள்விகளுக்கும் பதிலளிக்க வேண்டும். இந்த நிகழ்ச்சிக்கு திருமதி AN.அன்னம் அவர்களும், திருமதி அருள்மொழி அவர்களும் நடுவர்களாக இருந்து சிறப்பாக நடத்தி கொடுத்தார்கள்.
சிறு பிள்ளைகளுக்காக ‘Go Green’ மாறுவேடப் போட்டி மிகவும் ரசிக்கும்படியாகவும் குழந்தைகளின் மழலை மொழி செவிக்கு இனிக்கும்படியாகவும் இருந்தது. 

ஆண்டு விழாவில் 10வது மற்றும் 12வது வகுப்பு தேர்வில் அதிக மதிப்பெண் பெற்ற மாணவர்களுக்கு ரூ.5000/- வீதம் 8 பேருக்கு ஊக்கத்தொகை வழங்கப்பட்டது.  மருத்துவ படிப்பிற்காக மாணவி
AN.அபிராமி அவர்களுக்கு ரூ.10000/- மும், 52 பேருக்கு ரூ.2000/- வீதம் கல்வி உதவித்தொகை வழங்கப்பட்டது. மேற்படி உதவித்தொகையும், ஊக்கத்தொகையும் நன்கொடை வழங்கியவர்கள் தங்கள் கையால் நேரில் கொடுக்கும்படி செய்தது மனதுக்கு நிறைவாக இருந்தது.

ஆண்டு விழா நிகழ்ச்சிகளை தமிழில், வெண்கலக்குரலில் முனைவர் பழ.முத்தப்பன் அவர்கள் தொகுத்து வழங்கினார்கள்.
நிறைவாக அனைவருக்கும் சுவையாக விருந்து செட்டிநாடு சமையல் கலைஞர்கள் கொண்டு அளிக்கப்பட்டது.

அனைவருக்கும் வந்து போக கல்லூரி பேருந்து மூலம் வசதி செய்து கொடுக்கப்பட்டதால் சுமார் 800 பேர் கலந்துக்கொண்டனர்.

No comments:

Post a Comment