Sunday, 17 August 2014

1st Nagarathar Chess Festival




 திருச்சி நகரத்தார் சங்கம் ஆகஸ்ட் 15,16 ல் முதன் முதலாக நம் நகரத்தார் பிள்ளைகள் மட்டும் பங்கேற்கக்கூடிய முதல் நகரத்தார் செஸ் திருவிழாவை மிக சிறப்பாக திருச்சி செட்டிநாடு கலை அறிவியல் கல்லூரி வளாகத்தில் நடத்தினார்கள்.

இந்த செஸ் போட்டி U-9, U-12, U-15 என்று மூன்று பிரிவுகளில் நடத்தப்பட்டது.  இந்த செஸ் திருவிழாவிற்கான அழைப்பிதழ்கள் அனைத்து
நகரத்தார் சங்கங்களுக்கும் அனுப்பப்பட்டது. மேலும் நம் சமூக மாத
சமூக இதழ்களிலும் அறிவிக்கப்பட்டது.  சுமார் இருபதாயிரம் நகரத்தார்களின் கைபேசிகளுக்கு SMS மூலம் தெரிவிக்கப்பட்டது. இந்த செஸ் போட்டிகளில் சுமார் 120 நகரத்தார் பிள்ளைகள் பங்கு கொண்டனர்.

“உயர்ந்த இடத்தை பிடிப்பது தலைமையல்ல, பிடித்த இடத்தை உயர்த்துவது தான் தலைமை என்று உணர்த்தி வரும் தலைவர் கிளாசிக் ஆதப்பன் சுந்தரம் அவர்கள் போட்டிகளை துவக்கி, Chief Arbiter  மேலைசிவபுரி PL.பழனியப்பன் (காசி) அவர்களை அறிமுகப்படுத்தி உரையாற்றினார்கள்.
இளைஞர் அணி ஒருங்கிணைப்பாளர் திரு Kosmo இராமனாதன் மற்றும் Dr.SP.திருப்பதி இணைந்து உருவாக்கியிருந்த செஸ் விளையாட்டின் பயன்பாட்டுகளை பற்றிய ஆடியோ விஷ்வல் திரையிடப்பட்டது.  பார்வையாளர்கள் விரும்பி கேட்டதின் பேரில் அனைவருக்கும் மேற்படி குருந்தகடு வழங்கப்பட்டது.

போட்டிகளில் கலந்து கொள்ள வந்த பிள்ளைகளின் பெற்றோர்கள் காத்துக்கொண்டிருக்கும் போது அவர்களையும் உற்சாகப்படுத்த பல
நிகழ்ச்சிகளும் கலந்துரையாடல்களும் நடத்தப்பட்டது. இரண்டு  நாளும் செட்டிநாட்டு சமையல் கலைஞர்கள் கொண்டு சிறப்பான உணவு படைக்கப்பட்டது.

இப்போட்டிகள் 6 சுற்றாக விறுவிறுப்பாய் நடந்தது.  எல்லா நகரங்களிலிருந்தும், ஏன் அமெரிக்காவிலிருந்தும் கூட போட்டியாளர்கள்
வந்து கலந்து கொண்டது சிறப்பு.

நிகழ்ச்சி நிறைவு நாள் பரிசளிப்பு விழாவில் ‘ஆச்சி வந்தாச்சு திரு பழனியப்பன் அவர்கள் கலந்து கொண்டு செஸ் விளையாட்டின் சிறப்புகளை பற்றி
பேசினார்கள்.  மேலும் தலைவர் கிளாசிக் ஆதப்பன் சுந்தரம் கேட்டுக் கொண்டதற்கிணங்க அடுத்த செஸ் திருவிழாவை மதுரையில் மிக பிரம்மாண்டமாக நடத்துவதாக உறுதியளித்தார்கள்.

    இவ்விழாவில் செஸ் விளையாட்டில் உலக அரங்கில் பெரும்
பேரும் புகழும் பெற்றுள்ள செல்வன்
N.ராம் அரவிந்த் (திருச்சி நகரத்தார்
சங்க முன்னாள் தலைவர் நாகப்பா லெட்சுமணன் அவர்கள் பேரன்) கௌரவிக்கப்பட்டார்.  அவரின் தந்தை திரு நாகப்பன் அவர்களும் தாயார் திருமதி
முத்து அவர்களும், செஸ் போட்டியாளர்களும் பெற்றோர்களும் செஸ் பற்றி கேட்ட சந்தேங்களுக்கு பதில் அளித்து அனைவரையும் உற்சாகப்படுத்தினார்.

இந்த நிகழ்ச்சியை மிக சிறப்பாக ஏற்பாடு செய்திருந்த தென்னூர் திரு S.கதிரேசன், இளைஞர் அணி ஒருங்கிணைப்பாளர் திரு Kosmo இராமனாதன் மற்றும் Dr.SP.திருப்பதி,
உணவு ஏற்பாடுகளை கவனித்த இணைச்செயலாளர் திரு நித்தியகல்யாணி சீனிவாசன் ஆகியோர் கௌரவிக்கப்பட்டனர். பரிசளிப்பு விழாவை அழகு தமிழில் செவன்த் சென்ஸ் திரு சோமசுந்தரம் அவர்கள் தொகுத்து வழங்கினார்கள்.



Saturday, 16 August 2014

Kalvi Uthavi Thogai & Muthiyor Uthavi Thogai

இவ்வாண்டு கல்வி உதவித் தொகை நன்கொடையாக ரூ.1,45,000/-, 35 பேரிடமிருந்து பெறப்பட்டது.  56 மாணவர்களுக்கு கல்வி உதவியாக ரூ.2000/- வீதம் ரூ.1,12,000/- மும், மருத்துவ படிப்புக்காக செல்வி AN. அபிராமிக்கு ரூ.10,000/- மும், Rank Holders 8 பேருக்கு தலா ரூ.5,000/- வீதம் ரூ.40,000/- வழங்கப்பட்டது. மொத்தம் ரூ.1,62,000/- இவ்வாண்டு கல்விக்காக வழங்கப்பட்டது.

நகரத்தார் முதியவர்கள் 11 பேருக்கு உதவித் தொகையானது ரூ.200/- லிருந்து ரூ.500/- ஆக உயர்த்தி இவ்வாண்டு வழங்கப்பெற்றது.

66th Annual Day Competition & Function



15.08.2014 ல் திருச்சி நகரத்தார் சங்கத்தின் 66வது ஆண்டு விழா மிக சிறப்பாக செட்டிநாடு கலை அறிவியல் கல்லூரி வளாகத்தில் நடைபெற்றது.  கிளாசிக் ஆதப்பன் சுந்தரம் அவர்கள் தலைமையேற்க சிறப்பு விருந்தினராக சென்னை ‘கமலா சினிமாஸ் பங்குதாரர் திரு VNCT.வள்ளியப்பன் அவர்கள் கலந்து கொண்டு சிறப்பு உரையாற்றினார்கள்.  அவர்கள் தன்னுடைய உரையில் நம்மின இளைஞர்கள் வேலை தேடுபவர்களாக இல்லாமல் வேலை கொடுப்பவர்களாக, தொழில் முனைவோராக மாற வேண்டியதன் அவசியத்தை எடுத்துரைத்தார்கள்.

ஆண்டு விழா நிகழ்ச்சிகள் இரண்டு கட்டமாக நடத்தப்பட்டன.  முதற்கட்டமாக 10.08.2014 ல் நகரத்தார் சங்க கட்டிடத்தில் முன்னாள்

தலைவர் R.திருநாவுக்கரசு அவர்கள் வழிகாட்டுதலில் செல்வி AT.ஸ்வர்யா, செல்வி SP.வள்ளியம்மை, செல்வி M.அலமேலு ஆகிய மூவரால் நடத்தப்பட்டன. நம் முன்னாள் தலைவர்களும், பெரியவர்களும் நடுவர்களாக செயல்பட்டனர்.


ஆண்களுக்கு ‘ஒரு நிமிட ஆன்மீகக் கதை என்ற போட்டியும், பெண்களுக்கு ‘குப்பையிலிருந்து பொக்கிஷம் மற்றும் ‘புதிருக்கான
விடை என்ற போட்டியும், சிறுவர் சிறுமியர்களுக்காக ‘ 120 நொடிகளில் உங்கள் திறமை என்று தங்கள் தனித்திறமையை வெளிக்காட்டும் நிகழ்ச்சியும் மற்றும் ‘Spell Bee’ என்ற போட்டியும் நடத்தப்பட்டது. 10 வயதிற்குட்பட்ட குழந்தைகளுக்கு ‘Fun Game’ என்ற போட்டியும் நடத்தப்பட்டது.

தம்பதியருக்கான ‘Salad Making’ போட்டியின் முதற்சுற்றில் பெண்கள் சொல்ல சொல்ல ஆண்கள் செய்யுமாறு நிகழ்ச்சியை அமைத்தது மிகவும்
ரசிக்கத்தக்கதாயிருந்தது. இதில் தேர்வு பெற்ற தம்பதியர் 15.08.2014 ஆண்டு விழா மேடையில் இறுதி சுற்றில் பங்கு பெற்றனர்.  இறுதி சுற்றின் சிறப்பு அம்சமாக தம்பதியரின் ஒரு கையை இணைத்து கட்டி விட்டனர். தம்பதியர் தங்களுடைய ஒரு கையால் தான் காய்களையும் பழங்களையும் வெட்டி salad செய்து அலங்கரிக்க வேண்டும்.  இடையிடையே நடுவர்கள் கேட்ட கேள்விகளுக்கும் பதிலளிக்க வேண்டும். இந்த நிகழ்ச்சிக்கு திருமதி AN.அன்னம் அவர்களும், திருமதி அருள்மொழி அவர்களும் நடுவர்களாக இருந்து சிறப்பாக நடத்தி கொடுத்தார்கள்.
சிறு பிள்ளைகளுக்காக ‘Go Green’ மாறுவேடப் போட்டி மிகவும் ரசிக்கும்படியாகவும் குழந்தைகளின் மழலை மொழி செவிக்கு இனிக்கும்படியாகவும் இருந்தது. 

ஆண்டு விழாவில் 10வது மற்றும் 12வது வகுப்பு தேர்வில் அதிக மதிப்பெண் பெற்ற மாணவர்களுக்கு ரூ.5000/- வீதம் 8 பேருக்கு ஊக்கத்தொகை வழங்கப்பட்டது.  மருத்துவ படிப்பிற்காக மாணவி
AN.அபிராமி அவர்களுக்கு ரூ.10000/- மும், 52 பேருக்கு ரூ.2000/- வீதம் கல்வி உதவித்தொகை வழங்கப்பட்டது. மேற்படி உதவித்தொகையும், ஊக்கத்தொகையும் நன்கொடை வழங்கியவர்கள் தங்கள் கையால் நேரில் கொடுக்கும்படி செய்தது மனதுக்கு நிறைவாக இருந்தது.

ஆண்டு விழா நிகழ்ச்சிகளை தமிழில், வெண்கலக்குரலில் முனைவர் பழ.முத்தப்பன் அவர்கள் தொகுத்து வழங்கினார்கள்.
நிறைவாக அனைவருக்கும் சுவையாக விருந்து செட்டிநாடு சமையல் கலைஞர்கள் கொண்டு அளிக்கப்பட்டது.

அனைவருக்கும் வந்து போக கல்லூரி பேருந்து மூலம் வசதி செய்து கொடுக்கப்பட்டதால் சுமார் 800 பேர் கலந்துக்கொண்டனர்.

Saturday, 9 August 2014

1st Nagarathar Chess Festival Inivitation



66th Annual Day Invitation


Thiru Vilakku Poojai



08.08.2014 அன்று  சங்கத்தின் மகளிர் அணி சார்பில் 'திருவிளக்கு பூஜை' திருமதி உண்ணாமலை ஆச்சி மற்றும் மகளிர் அணி ஒருங்கிணைப்பாளர் திருமதி சாந்தா சேதுராமன் வழிகாட்டுதலுடன் நடத்தப்பட்டது. சுமார் 76 பேர்  விளக்கு பூஜையில் கலந்து கொண்டனர். சங்கக் கட்டிடத்தில் தரைத்தளம் மற்றும் முதல் தளத்தில் நடைபெற்ற

விளக்கு பூஜை கண்கொள்ளக் காட்சியாக இருந்தது. தரைத்தளத்தில் நடைபெற்ற நிகழ்வுகள் LCD Projector மூலம் முதல் தளத்தில் ஒளி பரப்பப்பெற்று, அதன்படி முதல் தளத்தில் உள்ளவர்கள் பூஜை நடத்தினார்கள். 250 பேர் கலந்து கொண்ட பூஜையன்று இரவு விருந்து சங்கத்தின் சார்பில் வழங்கப்பட்டது.

Friday, 8 August 2014

Executive Committee Meeting

குளு குளு குற்றாலத்தில் 
திருச்சி நகரத்தார் சங்க செயற்குழு  கூட்டம்

"சில்லென்ற தென்றல்: சிதறி விழும் சாரல் 
மனதில் சிறகடிக்கும் நான் மாடக்கூடல்"

இத்தகைய சிறப்பு வாய்ந்த குற்றாலத்தில் கடந்த 06.08.2014 மற்றும் 07.08.2014 தேதிகளில் திரு வி.கே.என் அவர்களின் விருந்தினர் மாளிகையில் திருச்சி நகரத்தார் சங்க செயற்குழு கூட்டம், தலைவர் திரு கிளாசிக் ஆதப்பன் சுந்தரம் தலைமையில்  மிக சிறப்பாக நடைபெற்றது.

கடந்த 05.08.2014 இரவு சுமார் 11 மணி அளவில் திருச்சி PL.A.ரெத்னா ரெசிடென்சியிலிருந்து இரண்டு சொகுசு பேருந்துகளில் செயற்குழு உறுப்பினர்கள் மற்றும் அவர்தம் குடும்பத்தார் உள்ளிட்ட 95 பேர் புறப்பட்டு அதிகாலையில் குற்றாலம் சென்றடைந்தனர்.  அனைவருக்கும் வி.கே.என். விருந்தினர் மாளிகையில் தங்குவதற்கு அறைகள் ஒதுக்கப்பட்டிருந்தது.

அனைத்து அருவிகளிலும் தண்ணீர் ஆர்பரித்துக்கொட்டியது.  அனைத்து உறுப்பினர்களும் தம் வயது, உடல்நிலை பற்றிய கவலை ஏதும் இல்லாமல் அருவிகளில் ஆனந்த குளியல் அனுபவித்த காட்சியை காணக் கண் கோடி வேண்டும். மாலை 4 மணி அளவில் வி.கே.என். விருந்தினர் மாளிகையின் கூட்ட அரங்கில் செயற்குழு கூட்டம் நடைபெற்றது. அதன் பின்னர்,                     திரு சோமசுந்தரம் மற்றும் திரு முத்து மாணிக்கம் குழுவினரின் "வேடிக்கை விளையாட்டு" நிகழ்ச்சி பார்த்த அனைவரையும் வயிறு குழுங்க சிரிக்க வைத்து சிந்திக்க வைத்தது.

07.08.2014 வியாழன் காலை அருவிகளில் ஆனந்த குளியல் முடித்து சித்திரசபை, இளஞ்சி சுப்பிரமணி சுவாமி கோவில், தென்காசி காசி விசுவநாதர் ஆலயம் மற்றும் குற்றால நாதர் சுவாமி தரிசனம் செய்து, மாலை 5 மணி அளவில் பிரிய மனமில்லமால் குற்றாலத்தை விட்டு புறப்பட்டு வழியில் ஸ்ரீவில்லிபுத்தூர் ஆண்டாள் தரிசனம் முடித்து நலமாய் திருச்சி வந்து சேர்ந்தனர்.

செயற்குழு கூட்டம் சிறப்பாக நடத்துவதற்கு அனைத்து ஏற்பாடுகளையும் தலைவர் திரு கிளாசிக் ஆதப்பன் சுந்தரம் அவர்களின் வழிகாட்டுதலின்படி கற்பக விநாயகர் கிருஷ்ணன் அவர்கள் சிறப்பாக செய்திருந்தார்.


Tuesday, 5 August 2014

Kubera Poojai


திருச்சி நகரத்தார் சங்கத்தில் 04.08.2014 அன்று குபேர பூஜை சென்னை, குபேரன் கோவில் திரு.கிருஷ்ணன் அவர்களால் நடத்தி வைக்கப்பெற்றது. சுமார் 450 பேர் கலந்து கொண்டனர். பூஜையில் வைக்கப்பட்ட தங்கம், வெள்ளி, மற்றும் Rs.5 நாணயங்கள் குபேரர் படத்துடன் வேண்டியவர்களுக்கு நன்கொடைக் கட்டணத்துடன் வழங்கப்பட்டது. பூஜையின் இடையிலும் முடிந்த பின்னும் செல்வி K.N.சுவாதி மற்றும் செல்வி ஐஸ்வர்யா தங்கள் நடனத்தால் அனைவரையும் கவர்ந்தனர். இரவு விருந்து இணைச்செயலாளர் திரு.சீனிவாசன் அவர்களின் ஏற்பாட்டால் சிறப்பாக செய்யப் பெற்றிருந்தது.