Thursday, 24 September 2015

67th Annual Day Competitions 20.09.2015

திருச்சி நகரத்தார் சங்கத்தின் 67ம் ஆண்டு விழா போட்டிகள் செப்டம்பர் 20ம் தேதி ஞாயிறன்று சங்க கட்டிடத்தில் காலை 10 மணி முதல் மாலை 5.30 மணி வரை வெகு சிறப்பாக நடைபெற்றது.

முதல் நிகழ்ச்சியாக ஆன்மீக வினாடி வினா போட்டி நடைபெற்றது. முதல் சுற்று கேள்வித்தாள் கொடுக்கப்பெற்று அதிக மதிப்பெண் பெற்றவர்கள் 5 பேரை தேர்ந்தெடுத்து நேரடி வாய்மொழி சுற்று நடத்தப்பெற்று வெற்றியாளர்கள் தெர்ந்தெடுக்கப்பெற்றார்கள்.

சிறுவர்களுக்கு 'ஒரு நிமிடம் உரையாடு' என்கிற பேச்சு போட்டி நடத்தப்பெற்றது.  இதில் சிறுவர்களுக்கு ஒரு தலைப்பு கொடுக்கப்பெற்று அதில் தவிர்க்க வேண்டிய சொல்லும் தரப்பெற்றது. சிறுவர்கள் 30 விநாடி அவகாசத்தில் தங்களை தயார் செய்து கொண்டு விதிகளுக்கு உட்பட்டு பேச வேண்டும். இந்த போட்டியை பார்த்த பிறகு தான் ஒரு நிமிடம் உரையாடுவது கூட எவ்வளவு சிரமம் என்று பார்வையாளர்கள் வியந்தனர்.

பின்னர் குழந்தைகளுக்கு Fun Games நடத்தப்பெற்றது. மதியம் அறுசுவை உணவு அனைவருக்கும் வழங்கப்பெற்றது. 'வண்ணமிகு வாழ்க்கை' என்ற
தலைப்பில் KIDS COLOURING போட்டி நடத்தப்பெற்றது. குழந்தைகள் மிக நேர்த்தியாக வண்ணம் தீட்டியதை பார்த்து நடுவர்கள் வியந்தனர்.

'ஜோடி பொருத்தம்' நிகழ்ச்சி தம்பதியருக்கு நடத்தப்பெற்றது. சுமார் 10 தம்பதியர் இதில் கலந்து கொண்டனர். இந்த நிகழ்ச்சியில் தம்பதியரிடம் தனித்தனியே கேட்டப்பெற்ற கேள்விகளுக்கு ஒத்த பதிலளித்தவர்களுக்கு மதிப்பெண் வழங்கப்பெற்று சிறந்த ஜோடி தேர்ந்தெடுக்கப்பெற்றது.

மாணவர்களுக்கு கட்டுரை போட்டிக்கு முன்னரே தலைப்பு  கொடுக்கப்பெற்று கட்டுரையை தயாரித்து வந்து சமர்பிக்க சொல்லப்பெற்றிருந்தது. 'தூய்மை திருச்சி' - முதலிடம் பிடிப்பது எப்படி? என்ற தலைப்பில் மாணவர்கள் அற்புதமாய் கட்டுரைகளை சமர்பித்திருந்தனர். நடுவர்கள் தனித்தனியே மதிப்பிட்டதில் ஒரே மாதிரியான முடிவுகள் வந்தது தான் ஆச்சரியம்.

இறுதியாக மகளிருக்கான 'நடுவீட்டுக் கோலப் போட்டி'
நடத்தப்பெற்றது. மாக்கோலத்தில் தங்கள் புதுமையையும் நேர்த்தியையும் பெண்கள் வெயிலை பொருட்படுத்தாது சங்க மேல் தளத்தில் கோலம் போட்டு வெளிபடுத்தினர். அனைவருக்கும் தேநீரும் சிற்றுண்டியும் வழங்கப்பெற்றது.

MODERN MUSICAL CHAIR என்ற வேடிக்கை விளையாட்டு நூதன முறையில்
அனைவரும் வயது வித்தியாசமின்றி பங்குபெற இனிதே நடந்தது. அனைத்து போட்டிகளிலும் பங்கு பெற்றவர்கள் மொத்தம் 150 பேர் இருப்பர். பரிசு பெற்றவர்கள் பற்றிய விபரங்களை நடுவர்களாக பணியாற்றிய முன்னாள் தலைவர்கள், செயற்குழு உறுப்பினர்கள் மற்றும் சிறப்பு விருந்தினர்கள் அறிவிக்க அனைவரும் மகிழ்ச்சியாய் விடைபெற்றனர். பரிசுகள் ஆண்டுவிழா நிகழ்ச்சியில் வழங்கப்பெறும் என அறிவிக்கப்பெற்றது.

இந்த ஆண்டு விழா போட்டிகளுக்கான ஏற்பாட்டை ஆண்டுவிழா போட்டிகள் குழுவைச் சார்ந்த திரு Magic சோமு, திரு Cosmo ராமநாதன், மணி கார்பரேஷன் திரு மணி மற்றும் சங்க உறுப்பினர்கள் செய்திருந்தனர்.


No comments:

Post a Comment