திருச்சி நகரத்தார் சங்கத்தின் 67ம் ஆண்டு விழா நிகழ்ச்சிகள் 'தாஜ் திருமண மண்டபத்தில் A/C' ல் 26.09.2015 சனிக்கிழமையன்று மாலை 5.30 மணியளவில் தொடங்கி இரவு 9.30 மணி வரை நடைபெற்றது.
முன்னாள் தலைவர்கள் மற்றும் நிர்வாக குழுவினரின் ஆச்சிமார்கள் குத்துவிளக்கேற்ற விழா இனிதே தொடங்கியது.
சங்கத் தலைவர் திரு கிளாசிக் ஆதப்பன் சுந்தரம் அவர்கள் வரவேற்புரை நிகழ்த்தினார்கள். அதை தொடர்ந்து செயலர் திரு SV.சுப்பையா அவர்கள் ஆண்டறிக்கை வாசித்தார்கள்.
IBCN 2015ஐ சிறப்புற நடத்தியமைக்காக NEU டீம் சார்பாக திரு PL.K.பழனியப்பன் அவர்கள் பாராட்டப்பெற்றார்கள். திரு PL.K.பழனியப்பன் அவர்கள் தம் உரையில் நம் சமூக இளைஞர்கள் வேலை தேடுபவர்களாக இல்லாமல் வேலை கொடுப்பவர்களாக மாற வேண்டிய அவசியத்தை அழகுற எடுத்துரைத்தார்கள்.
அடுத்தபடியாக 'சாகித்ய' விருது பெற்ற குழந்தை கவிஞர் திரு செல்ல கணபதி அவர்கள் பாராட்டப்பெற்றார்கள். அதை தொடர்ந்து திரு செல்ல கணபதி அவர்கள் குழந்தை இலக்கியத்தின் முக்கியத்துவத்தை எடுத்துரைத்தார்கள்.
அதைத் தொடர்ந்து ESSVEE Foundation, திரு சிங்காரம் செட்டியார் அவர்கள் தம் சமூக சேவைக்காக பாராட்டப்பெற்றார்கள். அதைத் தொடர்ந்து
அவர்கள் பேசிய பொழுது தான் தொழிலில் முன்னேற சந்தித்த சவால்கள் பற்றி எடுத்துரைத்தார்கள்.
அவர்கள் பேசிய பொழுது தான் தொழிலில் முன்னேற சந்தித்த சவால்கள் பற்றி எடுத்துரைத்தார்கள்.
அதற்கடுத்து முக்கிய சிறப்பு விருந்தினர் விழா நாயகர் ஜஸ்டிஸ் திரு AR.லக்ஷ்மணன் அவர்கள் சிறப்புரையாற்றினார்கள். திரு கிளாசிக் ஆதப்பன் சுந்தரம் சங்கத்திற்காக செய்திருக்கும் அரும்பணிகளை அடுக்கி, இவ்வளவு செயல்களை யாருமே இதுவரை செய்யவில்லை என்று பாராட்டி மகிழ்ந்தார்கள். மேலும் தம் மகன் வழக்கறிஞர் திரு AR.L.சந்தரேசன் அவர்கள் வசதியில்லாத நம்மினத்தவருக்கு இலவச சட்ட உதவி வழங்க தயாராயிருப்பதாய் பலத்த கரவொலிக்கிடையே அறிவித்தார்கள்.
இறுதியாக சிறப்பு பேச்சாளர் திரு சோம. வள்ளியப்பன் அவர்கள் தன் அழகு தமிழில் எளிய நடையில் இனிமையாக இளைஞர்கள் மனதில் பதியும் வண்ணம் தன் கருத்துகளை பதிவு செய்தார்கள்.
அடுத்த நிகழ்வாக 10ம் வகுப்பு, 12ம் வகுப்பு அரசு பொதுத் தேர்வில் அதிக மதிப்பெண் எடுத்து தேர்ச்சி பெற்ற 8 மாணவர்களுக்கு தலா ரூ.5000/- வீதம் காசோலை வழங்கப்பெற்று கௌரவிக்கப்பெற்றனர். ஆண்டுக்கொரு முறை வழங்கப்பெறும் கல்வி உதவித்தொகை 102 பேருக்கு ரூ.2000/- வீதம் வழங்கப்பெற்றது. மேலும் மருத்துவ கல்லூரியில் பயிலும் மாணவி செல்வி அபிராமிக்கு ரூ.10,000/- ம் உதவித்தொகை வழங்கப்பெற்றது.
முத்தாய்பாய் ஆண்டு விழா போட்டிகளில் பரிசு பெற்ற குழந்தைகளுக்கும், பெரியவர்களுக்கும், மாணவர்களுக்கும் அழகிய பயனுள்ள பரிசுகளை
சிறப்பு விருந்தினர்கள்வழங்கினார்கள்.
செட்டிநாடு சமையற் கலைஞர்களால் தயாரிக்கப்பெற்ற அறுசுவை இரவு விருந்துடன் விழா இனிதே நிறைவுற்றது.
விழாவை தொகுத்து வழங்கிய திரு மேஜிக் சோமசுந்தரம், செல்வி சாத்தம்மை பிரியா மற்றும் விழா ஏற்பாடுகளை செய்திருந்த தலைவர் உள்ளிட்ட நிர்வாக குழுவினரும், செயற்குழு உறுப்பினர்களும் மற்றும் உறுப்பினர்களும் பாராட்டுக்குரியவர்கள்.