உலகையே புரட்டிப் போட்ட கேள்விகளில்தான் நாகரிக வளர்ச்சிகளை நாம் கண்டிருக்கிறோம். அதன் பயன்களை அனுபவித்துக் கொண்டுள்ளோம்.
28.06.2015 ஞாயிறன்று காலை 10 மணியளவில் திருமிகு 'பஞ்ச்' என்று அழைக்கப்படும் திரு பஞ்சநாதன் அவர்களால் நடத்தப்பெற்ற 'Life Skill Program'
மிகமிக ஆர்வத்தையும் ஆவலையும் தூண்டும் நிகழ்வாக விளங்கியது. தலைவர் திருமிகு கிளாசிக் ஆதப்பன் சுந்தரம் அவர்கள் அனைவரையும் வரவேற்றார்கள். பேராசிரியர் பஞ்சநாதன் அவர்களைப் பற்றிய அறிமுக உரையை நமது சங்க இளைஞரணி ஒருங்கிணைப்பாளர் திரு.இராமநாதன் அவர்கள் நிகழ்த்தினார்கள். சிதம்பரம் நகரத்தார் சங்கத்திலிருந்து வந்து கலந்து
கொண்ட 5 மாணவர்களையும் சேர்த்து 8ஆம் வகுப்பு முதல் 12ஆம் வகுப்பு முடியப் பயின்று வரும் 40 மாணவ மனைவியர் கலந்து கொண்டனர். பெற்றோர்களும் பெருவாரியாகக் கலந்து கொண்டமை மிகமிகப் பெருமைக்குரியது. LCD Projector யை பயன்படுத்தி 'Power Point Presentation' மூலம்
மிக நேர்த்தியாக பேராசிரியர் பஞ்சநாதன் அவர்கள் நம் சமூக மாணவர்களை அன்று முழுவதும் வேறொரு உலகில் சஞ்சரிக்கச் செய்தார்.

மந்திரச்சொல் எதுவும் அவரிடம் இல்லை. மனதில் வெளிவரும் எண்ணங்களை Why am I here? Who am I? SO WHAT? என்ற மூன்று கேள்விகளில்
அடக்கி, அதில் இருந்தே ஒவ்வொருவருக்குள்ளும் இருக்கும் அளப்பரிய திறமைகளை ஒருங்கலந்து புதிய இலக்குகளை நோக்கி நம் விரல் பிடித்து அழைத்துச் சென்றார்.
அடக்கி, அதில் இருந்தே ஒவ்வொருவருக்குள்ளும் இருக்கும் அளப்பரிய திறமைகளை ஒருங்கலந்து புதிய இலக்குகளை நோக்கி நம் விரல் பிடித்து அழைத்துச் சென்றார்.
Who am I? என்ற இரண்டாவது கேள்வி, இந்தக் குறிக்கோளை நாம் அடைய, நாம் யார்? நாம் என்ன செய்ய வேண்டும் என்ற உந்துதலை உருவாக்கும்.
SO WHAT? என்ற மூன்றாவது கேள்வி - நமக்குள்ளே உள்ள நம்பிக்கையின்மையை போக்கி, "அதனால் என்ன?" என்ற நம்பிக்கையையும், குறிக்கோளை அடைந்து விட்டது போன்ற ஆனந்தத்தையும் நமக்குள்ளே ஊற்றாகப் பெருக்கெடுத்து பொங்கி வழியச் செய்யும்.
பேராசியர் பஞ்சநாதன் அவர்கள் Power Point Presentation மூலம் நிகழ்த்திய வழிகாட்டல் உரைகள் வந்திருந்த அனைத்து இளைஞர்களுக்கும் மட்டுமில்லாது அவர்களது பெற்றோர்களையும் சிந்திக்க வைத்தது. இது ஒரு புது அனுபவம் என்று கலந்து கொண்ட அனைவரும் உணர்ந்தது தெரிய வந்தது. இத்தகைய 'விழிப்புணர்வுகளை' தூண்டியதன் மூலம் திருச்சி நகரத்தார் சங்கம் நம் சமூக இளைஞர்களுக்கும் ஒரு.
புது நம்பிக்கையைக் கொடுத்துள்ளது.
புது நம்பிக்கையைக் கொடுத்துள்ளது.
நிகழ்ச்சியில் கலந்துகொண்ட அனைத்து மாணவ மாணவியர்க்கும் Book Mark ,Note Pad ,Pen,ID Card வழங்கப் பெற்றது. மிகவும் வியக்கத்தக்க முறையில் பயிற்சியாளருடன் அறிவு பூர்வமான, ஆக்கத்திறன்
மேம்பாட்டினை வெளிப்படுத்தி விளக்கங்களைப் பெற்ற சிதம்பரம் நகரத்தார் சங்கத்திலிருந்து வந்திருந்த செல்வி வள்ளியம்மைக்கு ஒரு சிறப்பு பரிசு வழங்கப் பெற்றது.
மேம்பாட்டினை வெளிப்படுத்தி விளக்கங்களைப் பெற்ற சிதம்பரம் நகரத்தார் சங்கத்திலிருந்து வந்திருந்த செல்வி வள்ளியம்மைக்கு ஒரு சிறப்பு பரிசு வழங்கப் பெற்றது.
இத்தகு சிறப்பு வாய்ந்த 'விழிப்புணர்வுப் பயிற்றியை' அளித்த பேராசியர் பஞ்சநாதன் அவர்களுக்கு பொன்னாடை மற்றும் சிறப்புப் பரிசு முன்னாள் தலைவர் திரு.AVK.சொக்கலிங்கம் அவர்கள் வழங்கினார்கள்.
இறுதியாக திருச்சி நகரத்தார் சங்கம் செயலாளர் திருமிகு SV.சுப்பையா அவர்கள் நன்றி கூற,பயன்மிக்க இந்த 'So What ?' நிகழ்வு இனிதே முடிவற்றது!
நீங்களும் சிந்தியுங்கள்? 'So What?'
No comments:
Post a Comment