Thursday, 21 May 2015

158th Kootu Thirumanam - 20.05.2015

திருச்சி நகரத்தார் சங்கம் முன்னின்று நடத்திய 158-வது கூட்டுத் திருமணம் பிள்ளையார்பட்டி பெண்டிர் விடுதியில் 20.05.2015 புதன்கிழமையன்று கோலாகலமாக நடைபெற்றது. மாப்பிள்ளை வலையப்பட்டி முருகேஷ் மற்றும் மணமகள்  கீழச்சீவல்பட்டி மீனாட்சி ஆகியோரின் திருமணம்
பெரியோர்கள், உறவினர்கள், சங்கத்தினர் முன்னிலையில் சிறப்பாக நடந்தது. இறுதியில் பாராட்டுக் கூட்டம் நடைபெற்றது.  அதில் திருமணம் நடக்க உறுதுணையாக இருந்தவர்கள் கௌரவிக்கப்பட்டனர். பிள்ளையார்பட்டி விடுதியையும் மற்றும் ஏற்பாடுகளையும் செய்து தந்த பிள்ளையார்பட்டி டிரஸ்ட்டியினைவருக்கும்
நன்றி தெரிவிக்கப்பெற்றது.  சங்க நிர்வாகிகள், முன்னாள் தலைவர்கள் மற்றும் நண்பர்கள் பாராட்டுக் கூட்டத்தில் கலந்து கொண்டார்கள். கீழச்சீவல்பட்டி சிங்காரம் ஹோட்டல் திரு சிங்காரம் செட்டியார் அவர்கள் நமது மாணவ, மாணவியரின் திறன் வளர்ப்புக்கு (Skills Development)​ உதவி செய்வதாகவும் அதற்காக சென்னையில் தமது நிர்வாகத்தில் ஒரு Community College நடத்துவதாகவும் தெரிவித்தார்கள்.  கீழச்சீவல்பட்டி SV.சிங்காரம் அவர்கள் பாராட்டுக் கூட்டத்தில் கலந்து கொண்டார்கள். திருமணத்தில் முதல் நாள் இரவு 100 பேர், மறுநாள் திருமணத்தன்று காலை 300 பேர், மதியம் 300 பேர் கலந்து  கொண்டனர். விருந்து ஏற்பாடுகளை புதுக்கோட்டை கோடீஸ்வரா கேட்டரிங் சிறப்பாகச் செய்திருந்தனர்.

Tuesday, 19 May 2015

Joint Meeting - Chidambaram Nagarathar Sangam 18.05.2015

18.05.2015 மாலை 6.30 மணியளவில் செயற்குழு உறுப்பினர்கள் 23 பேர் கலந்து கொள்ள செயற்குழு கூட்டம் நடைப்பெற்றது. இரவு கார்த்திகை கூட்டம் கூட்டு வழிப்பாட்டுடன் தொடங்கியது. புதியதாக அச்சிடப்பட்ட கூட்டு வழிபாட்டு புத்தகத்துடன்
வழிபாடு நடத்தப்பட்டு 7.00மணிக்கு கூட்டம் தொடங்கியது. சிதம்பரம் நகரத்தார் சுமார் 13 பேர் கலந்து கொண்டு கூட்டுக் கூட்டமாக நடைபெற்றது.  அன்றைய கூட்டத்தில் சிதம்பரம் நகரத்தார் சங்கத் தலைவர் திரு விசு.பழனியப்பன் அவர்கள்
உரையாற்றினார்கள். அறிவியலும் ஆன்மீகமும் என்ற தலைப்பில் சங்க உறுப்பினர் குழிபிறை திரு S.பொன்னப்பன் அவர்கள் சிறப்பாக பேசினார்கள். அன்றைய இரவு விருந்து நண்பர்கள் குழுவினர் சார்பாக வழங்க்கப்பெற்றது.

Monday, 18 May 2015

Palani Kattalai Abishegam - 15.05.2015

திருச்சி நகரத்தார் சங்கம் சார்பாக பழனி மலையில் சங்க கட்டளை அபிஷேகம் 15.05.2015 அன்று சிறப்பாக நடைபெற்றது.  அதில் நம்மவர்கள் 33 பேர் கலந்து கொண்டார்கள். காலையில் டிபன் பழனி நகரத்தார் சங்கம் சார்பாக இராக்கால மடத்தில் வைத்து கொடுக்கப்பெற்றது.  சங்கத்தின் சார்பாக அன்னதானமும் அன்னதானக் கூடத்தில் அன்றைய தினம் வழங்கப்பெற்றது. பழனியில் அனைவருக்கும் சிறப்பானதொரு தரிசனம் கிடைத்தது. மதியம் மலையில் தேவகோட்டை தண்ணீர் பந்தலில் வைத்து சாப்பாடு வழங்கப்பெற்றது. சிறிது ஓய்வுக்குப்பின் தாடிக் கொம்பு (திண்டுக்கல்) பெருமாள் கோவில் தரிசனம் செய்து டிபனை முடித்துக்கொண்டு இரவு 9.30 மணிக்கு திருச்சி வந்து சேர்த்தார்கள்.

Thursday, 14 May 2015

Pachaikkavadi Poojai

12.05.2015 அன்று 12வது முறையாக வலையபட்டி பச்சைக்காவடி இராமேஸ்வரத்தில் இருந்து காசி நடைப்பயணம் (120 நாட்கள்) செல்கின்ற வழியில் சங்கத்தில் 10.05.2015 காலை வந்து தங்கி 12.05.2015 இரவு புறப்பட்டுச் சென்றார்கள்.  12.05.2015 இரவு பூஜை
செய்தார்கள்.  பூஜையில் 160 பேர் வந்து கலந்து கொண்டு பச்சைக்காவடி அவர்களின் ஆசிப் பெற்றார்கள். சங்கத்தின் சார்பில் தலைவர் திரு கிளாசிக் ஆதப்பன் சுந்தரம் அனைவருக்கும் வஸ்திரம் வழங்கி கௌரவித்தார்கள் மற்றும் மூன்று நாட்களும் அன்னம் வழங்கி மகிழ்ந்தார்கள்.  நடைப்பயணக் குழுவினர் உற்சாகத்துடன் 13.05.2015 காலை 3 மணிக்கு நடைப்பயணத்தை தொடர்ந்தார்கள்.

Monday, 11 May 2015

Thiruppathi Tour 08.05.2015 - 10.05.2015

07.05.2015 அன்று இரவு நம் நகரத்தார்கள் 80 பேர் திருவண்ணாமலைக்கு 2 பேருந்துகளில் புறப்பட்டனர்.  08.05.2015 அன்று காலை திருவண்ணாமலை அண்ணாமலையார் உண்ணாமலையம்மன் தரிசனத்திற்கு பின் வேலூர் தங்கக் கோவில் பார்த்துவிட்டு, காணிப்பாக்கம் விநாயகர் கோவிலில் உள்ள சுயம்பு விநாயகரை தரிசித்துவிட்டு இரவு திருச்சானூரில் தங்கினர்.  09.05.2015ம் தேதி காலை அலமேலு மங்காபுரம் கோவில், திருகாளஹஸ்தி கோவில், திருப்பதி எழுமலை வெங்கடாசலபதி தரிசனம் செய்து இறையருள் பெற்றனர்.  மறுநாள் திருத்தணி, அப்பளக்குண்டாய் பெருமாள் கோவில், தென்னங்கூர் பாண்டுரெங்கர் மற்றும் சிவன் கோவில் தரிசனம் முடித்து திருச்சி வந்து சேர்ந்தனர்.  இச்சுற்றுலாவின் ஒருங்கிணைப்பாளர்களாக செயற்குழு உறுப்பினர்கள் திரு V.பழனியப்பன் மற்றும் திரு M.லெட்சுமணன் அவர்கள் மிகச் சிறப்பாக சுற்றுலாவை நடத்தித் தந்தனர்.

Monday, 4 May 2015

Appriciation Letter by SP.Lakshmanan Dated 30.04.2015


Career Counselling & Guidance Program

நம் சங்கம் பெரியவர்களுக்கும், இளையோர்க்காகவும், சிறு குழந்தைகளுக்காகவும் தனித்தனியாகவும், சேர்ந்தும் பல நிகழ்ச்சிகளை நடத்தி உள்ளது.  அதேபோன்று 02.05.2015 ல் "Career Counselling & Guidance Program" நம்
சமுதாயத்தினை வழிநடத்திச் செல்ல இருக்கின்ற இளைஞர்களுக்கான எதிர்கால வழிகாட்டும் பயிற்சி 68 மாணவ மாணவியர் கலந்து கொள்ள வெற்றிகரமாக நடந்து முடிந்தது.  நம் சமூகப் பெருமக்கள், ஆச்சிமார்கள் பெருமளவில் கலந்து கொண்டு பெருமைப்படுத்தினர்.

திருச்சி நகரத்தார் சங்க தலைவர் திரு கிளாசிக் ஆதப்பன் சுந்தரம் அவர்கள் வரவேற்புரை நிகழ்த்தினார்கள்.  இந்த பயிற்சி முகாமின் நோக்கம் பற்றியும், நம் சமூக இளைஞர் எல்லாரும் ஏன் இம்மாதிரிப் பயிற்சிகளில் கலந்து கொள்ள வேண்டும் என்பதனையும் மிக மிகச் சிறப்பாக எடுத்துரைத்தார்.

அடுத்தாற்போல் தம் சொந்த முயற்சியால், திறமையால் மிகச் சிறப்பாக பல நிறுவனங்களை நிறுவி, இன்றளவும் மிகத் திறம்பட நடத்தி வெற்றிகளை ஈட்டிக் கொண்டிருக்கும் இன்றைய நிகழ்வின் சிறப்பு
விருந்தினர் முன்னாள் தலைவர் திரு முத்தையா செட்டியார் அவர்கள் நிறுவனங்களை நிறுவுவதும் அதனை வெற்றிகரமாக நடத்துவதும் பற்றி மிக அருமையாக நகைச்சுவையுடன் பேசினார், வந்திருந்த மாணவ - மாணவிகள் அவற்றினைத் தவற விடாது பொக்கிஷமாகக் கருதி சேர்த்து வைத்துக் கொண்டனர்.

அடுத்து இம்மாதிரி "வழிகாட்டல் அறிவுரை பகர்தல்" கருத்தரங்குகளை இந்தியாவின் பல பகுதிகளில் வெற்றிகரமாக நடத்திக் காட்டி, செயல்
முறையாக பல இளம் ஐ.ஏ.எஸ், ஐ.பி.எஸ் அதிகாரிகளை உருவாக்கியுள்ள, திருச்சி மாவட்ட வேலைவாய்ப்பு அலுவராக பணியாற்றியுள்ள செயலாற்றல் மிகுந்த பெருமைக்குரிய திரு முனைவர் P.சுரேஷ்குமார் அவர்கள் இப்பயிற்சியின் முக்கியக்கூறுகளையும், துனைக்கருத்துகளையும் கூறியது மிகவும் சுவையாகவும் எல்லாரும் உள்வாங்கிக் கொள்ளும் படியாகவும் அமைந்திருந்தன.

அதன்பின் கல்வியாளர் திரு சிவபாலன் அவர்கள், கல்வி துறையில் உள்ள பல்வேறு பணிவாய்ப்புகள் பற்றிய விளக்கங்களை நன்கு எடுத்துக் கூறினார்கள்.  ஆசிரியர் பணிகளுக்கான தகுதிப் படிப்புகளின் பல்வேறு
நிலைகளை மழலையர் கல்விப்பயிற்சி, மாண்டிசோரி கல்விப்பயிற்சி, இடைநிலை ஆசிரியர் கல்வி, பட்டதாரி ஆசிரியர்க்கான பட்டம் பெறுதல் போன்ற அனைத்தையும் விளக்கினார்.

அடுத்து 'விற்பனை - வணிகம்' பற்றிய நுணுக்கமான விவரங்களையும், இன்றைய வணிக உலகில் 'E-Commerce' பற்றிய நுணுக்கங்களையும் வாழ்வின் முக்கியமான 'நுகர்வுக்கலாசாரம்' பற்றியும் கல்லூரிப் பேராசிரியை திருமதி முத்துகலா மிக அருமையாக விளக்கினார்கள்.

அடுத்து திரு சோமசுந்தரம் அவர்கள் பொறியியல் பட்டம், Diploma மற்றும் ITI
ஆகிய தொழிற்படிப்பு தொடர்பான பயிற்சிகளும், போட்டித்தேர்வுகள் பற்றி விரிவான விளக்கம் அளித்து உரையாற்றினர்.  எல்லோருக்கும் மகிழ்வும் வியப்பும் ஊட்டும் வகையில் திரு சோமசுந்தரம் அவர்கள் செய்து காட்டிய மேஜிக் நிகழ்ச்சி அனைவரின் கவனத்தையும் கவர்ந்தது.

அனைவருக்கும் சங்கம் சார்பில் மதிய உணவு வழங்கப்பெற்றது.

நிகழ்ச்சியின் தொடக்கமாக கலை அறிவியல் பட்டப்படிப்பு முடித்தவுடன் உள்ள வேலைவாய்ப்புகள் பற்றி செல்வி சாத்தம்மை பிரியா விளக்கினார்.  அவர் தனது 'சொல்லாட்சியும், பேச்சாற்றலாலும் மேடைகளில்

தங்குதடையின்றி பட்டி மன்றங்கள் மற்றும் கருத்தரங்கங்கள் மூலம் (நிலை மாத ஊதியம் பெறும் பட்டதாரிகளை விடவும் பல) பொருளீட்டி, தன் குடும்ப நிலையை உயர்த்திய பெருமையைப் பற்றி கூறி, இளைஞர்கள் எல்லாரும் தங்களின் தனித்திறமைகளை உணர்ந்து வளர்த்துக் கொண்டு பட்டை தீட்டி வெளிப்படுத்தினால் உயர்வும் பெருமையும் தேடி வரும் என உரையாற்றி அனைவரின் பாராட்டினையும் பெற்றார்.

தற்போது அன்னிய முதலீட்டினையும், மேல்நாட்டில் வேலைவாய்ப்புகளையும் அள்ளித்தரும் உன்னதமான "கேட்டரிங் & ஹோட்டல் மேனேஜ்மென்ட்" பற்றி இத்துறையில் மிக நீண்டகாலம் பணியாற்றியுள்ள அனுபவமிக்க கல்லூரி பேராசிரியர் திரு பொன் இளங்கோ அவர்கள் மிகச் சிறப்பாக நிகழ்கால வேலைவாய்ப்புகள் மிக அதிகமாக உள்ளதை உதாரணங்களுடன் விளக்கினார்கள்.

மக்களின் வாழ்வுடன் தொடர்புடைய 'மருத்துவம்' பற்றி மிக அருமையாக
உரையை Neuro Surgeon டாக்டர். S.P. திருப்பதி அவர்கள் மிக அனுபவமுத்திரைகளுடன் வெளிப்படுத்தினார்கள்.  எக்காலத்திலும் வேண்டப்படுவது மருத்துவம் தான் என்பதை விளக்கினார்கள்.

அடுத்து Goal Setting என்ற தலைப்பில் மிக அருமையாக சங்கத்தின் இளைஞர் அணி ஒருங்கிணைப்பாளர் திரு Kosmo ராமநாதன் அவர்கள் பேசினார்கள்.

இயற்கையிலேயே வாதாடும் திறனும் நினைவுத்திறனும் உள்ள இளவயதினர் கைக்கொள்ள வேண்டிய சட்டத்துறையில் உள்ள வழக்கறிஞர்கள் பணிகளைப் பற்றியும், இன்றைய இந்திய சமுதாயத்தில் 'சட்டக்கல்வி' எவ்வளவு முக்கியத்துவம் பெற்றுள்ளது பற்றியும் சட்டக் கல்லூரி பேராசிரியர் திரு முருகேசன் அவர்கள் மிக அழகாக விளக்கி அப்பயிர்சிகளை எவ்விதம் மேற்கொள்வது என்பது பற்றியும் அறிவுறுத்தினர்.

பின் சிறப்பு அழைப்பாளர்களாகக் கலந்துகொண்ட செல்வி திவ்யா இராமசாமி (IIM  பெங்களூரில் படித்து விட்டு Amazon நிறுவனத்தில் பணியாற்றுகிறார்) அவர்களும் டாக்டர் பழனியப்பன் (Consultant Psychiatrist, Cambridge UK) அவர்களும் மிகச்சிறப்பாக உரையாற்றி வழிக்காட்டினார்கள்.

செல்வி திவ்யா இராமசாமி அவர்கள் தன்னுடைய அனுபவங்களை எல்லாருக்கும் படிப்படியாக விளக்கியதுடன் பயிற்சிக்கு வந்திருந்த மாணவ மாணவியர் தம் ஐயங்களை எழுப்புவதற்கு வாய்ப்பளித்து, அனைத்து விதமான வினாக்களுக்கும் தெளிவான விளக்கம் அளித்தார்கள்.

நமது நகரத்தார் சங்க தலைவர் திரு கிளாசிக் ஆதப்பன் சுந்தரம் அவர்களின் இளைய சகோதரர் டாக்டர் பழனியப்பன் அவர்கள் முத்தாய்ப்பாக நமது சமூக இளைஞர்களின் வளர்ச்சிக்கான படிநிலைகளை 'CAREER PYRAMID' என்ற மிக நுணுக்கமான செய்திகளை அவருடைய வார்த்தைகளிலேயே சொன்னால் - அவரின் 15 ஆண்டு கால மருத்துவ அனுபவங்களில் கற்றும் பெற்றும் வந்திருக்கின்ற மனித வாழ்வின் முன்னேற்றங்களுக்கான மனநிலைகளின் வளர்ச்சியை - மருத்துவ அறிவியல் சார்ந்து விளக்கியது மிகப் பயனுள்ளதாக இருந்தது.

15.08.2014ல் திருச்சி நகரத்தார் சங்கத்தின் 66வது ஆண்டு விழாவில் 10வது மற்றும் 12வது வகுப்பு தேர்வில் அதிக மதிப்பெண் பெற்ற மாணவர்களுக்கு ரூ.5000/- வீதம் 8 பேருக்கு ஊக்கத்தொகை வழங்கப்பெற்றது.  அதில் விடுப்பட்டு போன வேகுபட்டி திரு நா.ரவி அவர்களின் புதல்வி செல்வி ர.ஐஸ்வர்யா 2013 - 2014 ம் கல்வியாண்டில் பனிரெண்டாம் வகுப்பு தேர்வில் 1178 மதிப்பெண் பெற்றதற்காக ரூ.5000/- ஊக்கத்தொகை வழங்கப்பெற்றது.

இறுதியாக, மூத்த செயற்குழு உறுப்பினர் Prof திரு சுப்பிரமணியம், அனைத்து நிகழ்ச்சிகளின் சிறப்புகளை எடுத்து கூறி அனைவருக்கும் நன்றி பகன்றார்.

கலந்து கொண்டு பயிற்சி அளித்த அனைத்து துறை வல்லுனர்க்கும் நகரத்தார் சமூகப் பெருந்தகைகள் பொன்னாடை போர்த்திக் கௌரவித்து, நினைவுப்பரிசுகளை நகரத்தார் சங்கம் சார்பாக வழங்கப்பெற்றன.

மாலை அனைவருக்கும் தேநீர் மற்றும் snacks சங்கத் தலைவர் திரு கிளாசிக் ஆதப்பன் சுந்தரம் சார்பில் வழங்கப்பெற்றது.

Career Pyramid