19.04.2015 அன்று நம் நகரத்தார் சங்கத்தில் பழங்கள் மற்றும் காய்கறிகளை வைத்து உருவங்களை உருவாக்கிக் காட்டும் கைத்திறன் மேம்பாட்டுப் பயிற்சி நடைபெற்றது.
மாலை 3.30 மணியளவில் தொடங்கிய நிகழ்ச்சியின் துவக்கத்தில் நம் நகரத்தார் சங்க மகளிர் அணி ஒருங்கிணைப்பாளர் திருமதி சாந்தா சேதுராமன் அவர்கள் மிக மிக அருமையாக வரவேற்ப்புரை நிகழ்த்தினார்கள். அவர்தம்
வரவேற்புரையில் திருச்சி நகரத்தார் சங்க மகளிர் அணி செய்துள்ள நற்செயல்களையும், செய்யவிருக்கும் எதிர்காலச் செயல்பாட்டுத் திட்டங்களையும் பற்றி எடுத்தியம்பினார்கள். ஏறத்தாழ 25க்கும் மேற்ப்பட்ட பெண்கள் மற்றும் குழந்தைகள் இப்பயிற்சில் கலந்து கொண்டார்கள்.
பீட்ரூட், தக்காளி இவ்விரண்டு காய்கறிகளையும் வைத்து ஒரு ரோஜா மலரை அற்புதமாய் செய்முறை செய்து காட்டியது மிகச் சிறப்பாக இருந்தது. இதனை திருச்சி கிளாசிக் பேக்கரியைச் சார்ந்த திரு முத்துக்குமார் மற்றும் திரு மணிகண்டன் இருவரும் செய்து காட்டினர்.
வாழைப்பழத்திலிருந்து 'கொக்கு' உருவம் வெளிவந்ததை திறந்த வாய் மூடாமல் பயிற்சிக்கு வந்திருந்த பார்வையாளர்கள் கண்டு வியப்பும் மகிழ்வும்
அடைந்தனர். காரட், உருளை மற்றும் குடமிளகாய் மூன்றும் மிக அழகான மரமாக மாறியதும், தக்காளியும், லிச்சிப்பழமும் அழகான கூடையாய் உருமாறியதும், வெள்ளரிக்காய்கள் கடல் மீன்களாக, அழகிய ஆப்பிள்கள் வாத்தாக உருமாறியதும், பப்பாளியும் லிச்சிப்பழங்களும் அரிய இயற்கைக் காட்சிகளாய் மாறியதும் அனைவரும் கண்டு வியந்தனர். மாங்காய் மீன், ஆரஞ்சுத் தாமரை உருவங்கள் கண்களுக்கு விருந்தளித்தன. 50 பார்வையாளர்களும் 25 பங்கேற்ப்பாளர்கள் தாம் கொண்டு வந்திருந்த காய்கறி, கனி வகைகளில் இருந்து இவுருவங்களை அவர்களே செய்து மகிழ்வடைந்தனர். எல்லோருக்கும் கட்லெட், கேக், தேனீர் வழங்கப்பெற்றது. நகரத்தார் சங்க இளைஞர் அணி ஒருங்கிணைப்பாளர் திருமிகு இராமநாதன் அவர்கள் நன்றி கூற இப்பயிற்சி 5.30 மணியளவில் இனிதே முடிவுற்றது.

No comments:
Post a Comment