15.03.2015 ஞாயிறன்று மாலை 3.45 மணிக்கு Cake making & decoration செய்முறை பயிற்சி நமது சங்க வாளகத்தில் சிறப்பாக நடைபெற்றது. அதில் நமது
சங்கத்து பெண்மணிகள் 50 பேரும் ஆண்கள் 15 பேரும் கலந்து கொண்டு சிறப்பித்தார்கள். அனைவரையும் தலைவர் கிளாசிக் ஆதப்பன் சுந்தரம் அவர்கள் வரவேற்று பயிற்சியளிப்பவர்களை அறிமுகப்படுத்தினார்கள். திருச்சி Classic Foods என்ற Bakery நிறுவனத்திலிருந்து அதன் பிரதம செயலர் திருமதி ஞானம்பாள் ஆதப்பன் அவர்கள் மற்றும் அதன் Master Chef மற்றும் பணியாளர்கள் 4 பேர் பங்கு கொண்டு அற்புதமான செய்முறை பயிற்சி அளித்தனர்.
முதலில் Doughnut செய்முறை பயிற்சி அளித்தனர். Cream, Chocolate மற்றும் பலவித doughnut களை செய்து காட்டினர். பின் Veg Fry Roll எப்படி செய்வது என்று பயிற்றுவித்தனர். அதில் fillings விதவிதமாக வைப்பது எப்படி என்று விளக்கினார்கள். பின்பு Cake செய்வது எப்படி என்று விவரித்தனர். அதன் recipe யையும் கொடுத்தனர். செய்த Cake களை விதவிதமாக decoration செய்து காட்டினர். அனைத்தையும்
சாப்பிட்டு ரசிக்க எல்லோருக்கும் அளித்தார்கள். இறுதியாக Sugar Paste வைத்து toys செய்து அசத்தினார்கள். பிள்ளையார், யானை மற்றும் சிங்க உருவங்கள் பிரமாதமாக இருந்தன. அனைவரும் அவைகளை புடைப்படம் எடுத்து மகிழ்ந்தனர்.
பின் நமது உறுப்பினர் சாத்தம்மை பிரியா 5 நிமிடங்கள் அருமையாக பேசி அனைவரையும் அசர வைத்தார்கள். செயலாளர் திரு SV.சுப்பையா அவர்கள் நன்றி கூற பயிற்சி இனிதே நிறைவுற்றது.
No comments:
Post a Comment