23.02.2014 ல் வயலூர் பாதயாத்திரைக்காக முதல் நாள் வேல் அபிஷேகம், காவடி பூஜை சங்க வளாகத்தில் நடைபெற்றது. காரைக்குடி அரண்மனைப் பொங்கல் ஐயா KM
. பழனியப்பன் அவர்கள் விபூதி கொடுத்து அனைவரையும் ஆசிர்வதித்தார்கள்.
காலை 6 மணிக்கு மேளவாத்தியம் முழங்க பால்குடம் காவடிகளுடன் சுமார் 650 பேர்
கலந்து கொள்ள பாதயாத்திரை துவங்கியது. அனைவரும் காலை 10 மணிக்கு வயலூரை
அடைந்தார்கள். பாதயாத்திரைக்கு முதல் நாள் இரவும் மறுநாள் மதியமும் திரு.
VE.AL .சின்ன அழகப்பன் அவர்களும், அன்று காலை டிபன் திரு.AR.A.சீனிவாசன்
அவர்களும் கலந்து கொண்ட அனைவருக்கும் அமுது படைத்தார்கள். மங்களப் பொருள்
"வினையகப்பானை" ஏலம் விடப்பட்டது. அதை முத்துமீனா சிட்பண்ட் உரிமையாளர் திரு பழனியப்பன் அவர்கள் Rs.36000/- க்கு ஏலம் எடுத்தார்கள். அவர்களுக்கு சிறப்பு செய்யப்பெற்றது.
No comments:
Post a Comment