Friday, 31 July 2015

Kubera Poojai 29.07.2015

திருச்சி நகரத்தார் சங்கத்தில் 29.07.2015 அன்று குபேர பூஜை சென்னை, குபேரன்
கோவில் திரு கிருஷ்ணன் அவர்களால் நடத்தி வைக்கப்பெற்றது.  சுமார் 300 பேர் கலந்து கொண்டனர்.  பூஜையில் வைக்கப்பட்ட தங்கம், வெள்ளி மற்றும் 5 ரூபாய் நாணயங்கள் குபேரர் படத்துடன் வேண்டியவர்களுக்கு நன்கொடைக் கட்டணத்துடன் வழங்கப்பெற்றது. பூஜையின் இடையிலும் முடிந்த பின்னும் செல்வி K.N.சுவாதி
மற்றும் செல்வி ஐஸ்வர்யா தங்கள் நடனத்தால் அனைவரையும் கவர்ந்தனர். இரவு விருந்து தலைவர் கிளாசிக் ஆதப்பன் சுந்தரம் அவர்களின் ஏற்பாட்டால் சிறப்பாக செய்யப் பெற்றிருந்தது. குபேர பூஜைக்கான விழா ஏற்பாடுகளை முன்னாள் செயலாளர் திரு V.இராமசாமி, முன்னாள் பொருளாளர் திரு V.பழனியப்பன் அவர்களால் சிறப்பாக செய்யப்பெற்றிருந்தது.

Thursday, 23 July 2015

Malaysia & Singapore Tour 15.07.2015 - 21.07.2015

மலேசியா, சிங்கப்பூர்  இரு நாடுகளையும் பார்த்து மகிழவும், நம் இன முன்னோர்கள் அந்நாட்டில் செய்த, செய்து வரும் நற்செய்திகள், தெய்வ வழிபாட்டிற்கென அமைத்துள்ள கோவில்கள், அந்நாடுகள் அடைந்துள்ள அறிவியல் பூர்வமான முன்னேற்றங்கள் அனைத்தையும் கண்டு களிக்கவும்,நினைவில் கொண்டு மகிழவும் திருச்சி நகரத்தார் சங்கத்தினர் 44 பேர் 15.7.15 முதல் 21.7.15 முடிய மலேசியா - சிங்கப்பூர் இனிய சுற்றுலா சென்று வந்தனர்.

15.7.15 அன்று இரவு 11.30 மணி அளவில் திருச்சி விமான நிலையத்திலிருந்து Malindo Airlines மூலம் கோலாலம்பூர் சென்றனர். 16.7.15 அன்று மலேசியா நேரம் காலை 5.25க்கு கோலாலம்பூர் விமான நிலையம் அடைந்தனர். பின் பயணக் களைப்பே தெரியாத வண்ணம் 'குளுகுளு' பேருந்தில் Putrajaya - வில் உள்ள புதிய மலேசியா பாராளுமன்றம், அரசு அலுவலகங்களை, Supreme Court கண்டு வியந்தனர். Putrajaya பாலத்தில் நின்று படங்கள் பல எடுத்துக் கொண்டனர். அதை தொடர்ந்து கோலாலம்பூர் City Tour - Merdeka Square, Jamek Mosque, King's Palace, National Musuem, China Town, Petronas Twin Towers ('ரம்ஜான்' பெருவிழாக் காலமாதலால் உள்ளே செல்ல அனுமதி இல்லை) பார்த்தனர். பின் 'Perl International Hotel' ல் தங்கினர். விமான நிலையத்தில் இன்முகத்துடன் வரவேற்ற தமிழ் பேசும் மலேசியர் திருமிகு ரெட்டி அவர்கள் வழிகாட்டியாக கோலாலம்பூர் சுற்றுலா முழுவதும் எல்லாருக்கும் உதவி புரிந்தனர்.

16.7.15 மாலை KL Tower ன் Observatory Desk 127வது தளத்திற்கு மின் தூக்கி மூலம் சென்று மலேசியா முழுவதையும் கண்டு மகிழ்ந்தனர். இரவு Hotel சென்று தங்கினர்.

17.7.15 அன்று காலை எல்லாரும் அவரவர்கள் விருப்பப்படி அருகில் அமைந்திருந்த கோவில்களுக்கு சென்று இறைவனை வழிபட்டனர். பின் அருகில் இருந்த கோவில்களையும் தரிசித்தனர்.

பின் மலைப் பிரதேசமான Gentingற்கு Cable கார் மூலம் சென்று அங்கு அமைந்துள்ள 'Snow World' மற்றும் 'Casino' கண்டு வாழ்நாளில் மறக்க முடியாத அனுபவமாய் பதிவு செய்து கொண்டனர்.

18.7.15 அன்று காலை கோலாலம்பூரிலிருந்து புறப்பட்டு சிங்கப்பூருக்குச் சென்றனர். காலை உணவை முடித்த பின்னர் சிங்கப்பூர் City Tour மற்றும் சீனக் கோயில் கண்டு மகிழ்ந்தனர். பின் 'Singapore Flyer' ல் 40 நிமிடங்கள் இந்த உலகையே மறந்து வேறொரு உலகில் பயணம் செய்தனர். இந்த Flyerன் உச்சியிலிருந்து 'இந்தோனிஷியா' நாடு தெரிந்ததைப் பார்த்து மகிழ்ந்தனர். பின் 'Grand Imperial Hotel' ல் தங்கினர்.

19.7.15 அன்று காலை 'Singapore Zoo' கண்டு களித்தனர். Zoo முழுவதும் சுற்றி வரும் Tramல் பயணித்து எல்லா மிருகங்களையும் கண்டு களித்தனர். விதவிதமான மிருகங்களைப் பார்த்து பரவசமடைந்தனர். அன்று மாலை உலகப் புகழ் பெற்ற சுற்றுலாத் தலமான 'சென்டோசா' தீவுக்குச் சென்று சூரிய அஸ்தமனத்தைக் கண்டனர். பின் 'Madam Tussads' - மெழுகுச் சிலைக் கண்காட்சியில் மிகவும் தத்ரூபமாக உருவங்களை மெழுகில் உருவாக்கி இருந்த காட்சி கலையின் உச்சம்.  இந்தியாவின் காந்தியடிகள், ஷாருக்கான், ஐஸ்வர்யாராயின் சிலைகள் உண்மையில் அவர்கள்  போலவே இருப்பதைக் கண்டு மெய் மறந்து நின்றனர். பின் Cable car ride, Underwater Aquarium கண்ட பிறகு டால்பின்களின் செயல்திறன்கள் மிக்க Dolphin Show கண்டு களித்தனர். பின் Garden by the bay சென்றனர். உலகில் அத்தனை விதமான தாவரங்களும், பூக்களும் காண்பதற்கே மிகவும் ரம்மியமானதாக இருந்தது.

20.7.15 அன்று காலை உலகின் பல நாடுகளில் உள்ள 'Universal Studios' சென்று - Egyptian type, Newyork, Hollywood theme காட்சியமைப்புகளைக் கண்டு வியந்தனர். மிகச்சிறந்த ஹாலிவுட் படங்கள் தயாரான விதம், படமாக்கப்பட்ட இடங்களையும் கண்டு களித்தனர். அங்கிருந்து உலகின் மிகச் சிறந்த Fountain Dance - Wings of Time பார்த்து அதில் ஒரு துளியாகக் கரைந்தனர்.

21.7.15 அன்று பறவைகளின் உலகம் Jurong Bird Sanctuary சென்றனர். கிளிகளின் விளையாட்டுகள் பார்த்து, உருவத்தில் பெரிய சிறிய வண்ண வண்ணப் பஞ்சவர்ணக் கிளிகள் செய்து காட்டும் வித்தைகள் விந்தைகள் அனைத்தையும் கண்டுக் களித்து, Tramல் Bird Sanctuaryயை சுற்றிப் பார்த்துவிட்டு தங்குமிடத்திற்குத் திரும்பினர்.

சிங்கப்பூரில் தங்கியிருந்த அனைத்து நாட்களும், ஹோட்டலில் இருந்து நடந்து செல்லும் தூரத்தில் இருக்கும் 24 மணி நேரமும் திறந்திருக்கும் உலகின் தலைச்சிறந்த shopping mall களில் ஒன்றான 'Mustafa Centre' ல் நம் ஆச்சிமார்கள் தங்களுக்குத் தேவையானதை வாங்கிக் கொண்டார்கள்.

இத்தனை மகிழ்ச்சியுடனும் மனநிறைவுடனும் எல்லா நகரத்தார்களும் சிங்கபூரிலிருந்து Tiger Airlines மூலம் திருச்சி வந்தடைந்தனர். மலேசியா, சிங்கப்பூரில் கண்டு களித்த காட்சிகளின் பிம்பங்கள் இன்னமும் மனத்திரையில் அவர்கள் எடுத்த நிழற்படங்களாக நீங்காத நினைவுகளாய் நிலைத்திருக்கும்.




Monday, 13 July 2015

Joint Meeting - Madurai Nagarathar Sangam 11.07.2015

மன்மத வருடம் ஆனி மாதம் 26ம் நாள் (11.07.2015) சனிக்கிழமையன்று மாலை 6 மணி அளவில் நமது சங்கத்தில் செயற்குழு கூட்டம் நடைபெற்றது.

சங்கத் தலைவர் திரு கிளாசிக் ஆதப்பன் சுந்தரம் அவர்கள் கூட்டத்திற்கு வந்திருந்த அனைவரையும் வரவேற்றார்கள்.

செயலாளர் திரு SV.சுப்பையா அவர்கள் சென்ற கூட்ட அறிக்கையை வாசித்து பின் கூட்டத்தில் ஏற்றுக்கொள்ளப்பெற்றது.

பொருளாளர் திரு SV.சாத்தப்பன் அவர்கள் சென்ற மாத வரவு செலவுகளை வாசித்து கூட்டத்தில் ஏற்றுக்கொள்ளப்பெற்றது.

இந்த வருடமும் 29.07.2015 அன்று குபேர பூஜை நடத்தவும்
ஒப்புதல் பெறப்பெற்றது. தலைவர் அவர்கள் அனைவரையும் கலந்து கொண்டு சிறப்பிக்கக் கேட்டுக் கொண்டார்கள்.

இரவு உணவு அளிக்க செயற்குழு உறுப்பினர் கொப்பனாப்பட்டி திரு சிவலிங்கம் செட்டியார் அவர்கள் ஏற்றுக்கொண்டார்கள்.  அவர்களின் குடும்பத்தார் கௌரவிக்கப்பெற்றார்கள்.

செயலாளர் நன்றி கூற கூட்டம் ஒத்தி வைக்கப்பெற்றது.

மாலை கூட்டுப் பிரார்த்தனைக்குப் பின் கார்த்திகை கூட்டம் நடைபெற்றது.  ஆன்மீகமும் அறிவியலும் பற்றி செயற்குழு உறுப்பினர் திரு KRL.ராமநாதன் அவர்கள் உரையாற்றினார்கள்.

மதுரை நகரத்தார் சங்க தலைவர் அலவாக்கோட்டை திரு ஸ்ரீனிவாசன், உப
தலைவர், இளைஞர் அணி தலைவர் சிறப்பு விருந்தினர்களாக கூட்டுக் கூட்டத்திற்கு நம் அழைப்பை ஏற்று வந்து சிறப்பு செய்தார்கள். அவர்கள் நம் சங்கம் சார்பாக கௌரவிக்கப்பெற்றார்கள்.  அவர்கள் தங்கள் சங்கத்தின் செயல்பாடுகள் பற்றி விளக்கி பேசினார்கள்.

செயலாளர் நன்றி கூற கூட்டம் முடிவுற்று அனைவருக்கும் இரவு உணவு வழங்கப்பெற்றது.