Monday, 20 October 2014

66th General Body Meeting

ஜய வருடம், ஐப்பசி மாதம் முதல் நாள் (18.10.2014) சனிக்கிழமை  மாலை 4.20 மணிக்கு திருச்சிராப்பள்ளி அருணா தியேட்டர் வளாகத்தில் உள்ள முகூர்த்தம் திருமண மண்டபத்தில் சங்க தலைவர் திரு கிளாசிக் ஆதப்பன் சுந்தரம் அவர்கள் தலைமையில் திருச்சிராப்பள்ளி நகரத்தார் சங்கத்தின் 66வது பேரவை கூட்டம் நடைபெற்றது.

இறை வணக்கத்துடன் பொதுக்குழு கூட்டம் மாலை 4.30 மணிக்கு துவங்கப்பெற்றது.

தலைவர் கிளாசிக் ஆதப்பன் சுந்தரம் அவர்கள் அனைவரையும் வரவேற்று

வருங்கால திட்டங்களைப் பற்றி விளக்கிக் கூறி உறுப்பினர்கள் ஒத்துழைப்புத் தரும்படி கேட்டுக்கொண்டார்கள்.

செயலாளர் திரு S.V.சுப்பையா அவர்கள் 2013-2014ம் ஆண்டிற்கான ஆண்டறிக்கையை வாசித்தார்கள்.  அதன் நகல் அனைவருக்கும் வழங்கப்பெற்றது.  ஆண்டறிக்கை ஒருமனதாக ஏற்றுக்கொள்ளப்பெற்றது.

பொருளாளர் திரு SV.சாத்தப்பன் அவர்கள் 01.04.2014 முதல் 31.03.2014 வரையிலான ஆடிட்டர் திரு AR.கருப்பஞ்செட்டி அவர்கள் தணிக்கை செய்த வரவு செலவு கணக்குகளை சமர்பித்தார்கள்.  அதன் நகல் அனைவருக்கும் வழங்கப்பெற்றது.  உறுப்பினர்கள் சிலர் கேட்ட கேள்விகளுக்கு பொருளாளர் திரு S.V.சாத்தப்பன் அவர்கள் விளக்கம் அளித்த பிறகு பொதுக்குழுவில் ஒருமனதாக ஏற்றுக்கொள்ளப்பெற்றது.

21.10.2013 முதல் 05.10.2014 வரை நடைபெற்ற அனைத்து செயற்குழு கூட்டத் தீர்மானங்களும் பொதுக்குழுவில் ஏற்றுக்கொள்ளப்பெற்றது.

2014-2015ம் ஆண்டிற்கு சங்கத்தின் வரவு செலவு கணக்குகளை தணிக்கை செய்து சமர்பிக்க எவ்வித ஊதியமும் இன்றி தற்சமயம் இருந்து வரும் ஆடிட்டர் திரு AR.கருப்பஞ்செட்டி அவர்களையே நியமனம் செய்வது என ஒருமனதாக தீர்மானிக்கப்பெற்றது.  தொடர்ந்து பல ஆண்டுகளாக நமது சங்கத்தின் வரவு செலவு கணக்குகளை எவ்வித ஊதியமும் பெறாமல் தணிக்கை செய்து கொடுத்து வருவதற்கு அவர்களைப் பாராட்டி நன்றி தெரிவிக்கப்பெற்றது.

முன்னாள் தலைவர்கள் அனைவரையும் மேடைக்கு அழைத்து திரு முத்துமாணிக்கம் அவர்கள் அறிமுகப்படுத்தினார்கள்.  அவர்களுக்கு கேடயம் வழங்கி கவுரவிக்கப்பெற்றார்கள்.  முன்னாள் தலைவர்கள் அனைவரும் அவர்களுடைய நகரத்தார் சங்க அனுபவங்களை பொதுக்குழுவிடம் பகிர்ந்து கொண்டார்கள்.  அத்துடன் இந்த வருடத்திய குழுவின் செயல்பாடுகளை பாராட்டிப் பேசினார்கள். செயற்குழு உறுப்பினர்கள் அனைவரையும் மேடைக்கு அழைத்து பொன்னாடை அணிவித்து கவுரவித்தார்கள்.  நிர்வாகக்குழு உறுப்பினர்களின்  சிறப்பான செயல்பாட்டை பாராட்டி தலைவர் பொன்னாடை அணிவித்தார்கள்.  பின் சிறப்பான செயல்பாட்டிற்காக கட்டிட சீரமைப்புக் குழு செயலாளர் திரு இராமசாமி அவர்களை கவுரவித்து முன்னாள் தலைவர் திரு திருநாவுக்கரசு அவர்கள் பாராட்டு தெரிவித்தார்கள்.

முன்னதாக யோகா மாஸ்டர் யோகாசனம் திரு கார்த்தி அவர்கள் ஆசனங்களை செய்து காட்டினார்கள்.  இளைஞர் அணி ஒருங்கிணைப்பாளர் திரு முத்துமாணிக்கம் அவர்கள், ஆசனங்களை விவரித்து, அதனால் என்னென்ன பலன்கள் கிடைக்கும் என்றும் சிறியவர்கள் முதல் பெரியவர்கள் வரை செய்யலாம் என்றும் தெரிவித்தார்கள்.  திருமதி நல்லம்மை ஆச்சி அவர்கள்
சேலை கண்காட்சியை வந்திருந்த ஆச்சிமார்களுக்கு விருந்தாய் அமையும் வண்ணம் அமைத்திருந்தார்கள்.

தலைவர் அவர்கள் நகரத்தார் நலனுக்காக பல நல்ல திட்டங்கள் இருக்கின்றன, யார் வேண்டுமானாலும் சுதந்திரமாக எந்தத்திட்டத்தையும் எடுத்துச் செய்யலாம் என்றும் கூறினார்கள்.  செயலாளர் திரு S.V.சுப்பையா
செட்டியார் அவர்கள் "மாஸ்டர் ஹெல்த் செக்கப்" என்ற திட்டத்தை எடுத்துச் செய்ய முன்வந்திருப்பதாக தெரிவித்தார்கள்.  அவர்களுக்கு பொதுக்குழு நன்றி தெரிவித்தது.  நமது முன்னாள் தலைவர் திரு சின்னஅழகப்பன் அவர்கள்  செயற்குழு கூட்டத்தில் நகரத்தாருக்கு "உபதேச அனுஷ்டானம்" நடத்துவதற்கு வேண்டிய ஏற்பாடுகளை செய்வதாக தெரிவித்தார்கள்.

இளைஞர் அணி ஒருங்கிணைப்பாளர் திரு இராமநாதன் அவர்கள் சி.டி. மூலம் Chess பற்றிய குறும்படம் ஒன்றை திரையில் காண்பித்தார்கள்.  பின்பு வலையப்பட்டியைச் சார்ந்த நகரத்தார் இளைஞர் ஒருவர் டில்லியில் சமர்பித்திருந்த "ரோபாட்டிக்ஸ்" பற்றிய சி.டி. திரையிடப்பட்டது.
அடுத்து நம் தலைவர் அவர்கள் சுற்றுலா பற்றி பல விவரங்கள் தெரிவித்தார்கள்.  அதில் முதலாவதாக துபாய் அதன் பின் மலேசியா, சீனா மற்றும் தலைக்காவேரி, காசி ஆகிய இடங்கள் சுற்றுலாவிற்காக தேர்வு செய்யப்பட்டிருப்பதாக தெரிவித்தார்கள்.  துபாய் சுற்றுலாவிற்கு அதிகமான தொகை கேட்கப்படுவதால் துபாய் நகரத்தார் சங்கம் மூலம் இதன் செலவை குறைக்க ஏற்பாடுகள் செய்யப்படுகின்றது என்று தெரிவித்தார்கள்.

பின்னர் 106 எப்.எம். மேலாளர் திரு சகா அவர்கள் சிறப்பாக உரையாற்றினார்கள்.  அவர்களுக்கும் நினைவுப் பரிசு கொடுத்து
பாராட்டப்பெற்றது.

செயலாளர் திரு S.V.சுப்பையா அவர்கள் 66-வது ஆண்டு பொதுக்குழுவில் கலந்துகொண்ட முன்னாள் தலைவர்கள், செயற்குழு மற்றும் பொதுக்குழு உறுப்பினர்கள், நகரத்தார் பெருமக்கள், ஆச்சிமார்கள், 106 எப்.எம். திரு சகா அவர்கள் அனைவரையும் நன்றி பாராட்டினார்கள்.  முகூர்த்தம் திருமண மண்டபத்தை நம் பயன்பாட்டிற்கு கொடுத்த அதன் உரிமையாளருக்கும், மேலாளருக்கும்  நன்றி தெரிவிக்கப்பெற்றது.

கூட்டம் இனிதே முடிவுற்று அனைவருக்கும் அன்று இரவு உணவு வழங்கப்பெற்றது.



Saturday, 11 October 2014

Joint Meeting - Thiruvarur Nagarathar Sangam

11.10.2014 அன்று கார்த்திகை வழிபாடு கூட்டுப் பிரார்த்தனையுடன் மீனாட்சி திருமண மண்டபத்தில் தொடங்கியது.  தலைவர் திரு கிளாசிக் ஆதப்பன் சுந்தரம் வரவேற்க திருவாரூர் நகரத்தார் சங்கத்தினருடன் கூட்டுக் கூட்டம் நடைபெற்றது.  அன்று திருமதி உண்ணாமலை ஆச்சி ஆன்மீகமும் அறிவியலும் பற்றி உரை நிகழ்த்தினார்கள்.  இரவு உணவு இணை செயலாளர் நித்திய கல்யாணி ஸ்ரீனிவாசன் அவர்கள் சார்பாக வழங்கப்பெற்றது.